குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டி நடத்தவிருக்கும் “யுரேகா ஓட்டம் 2011”
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் தியதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.. குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு யுரேகா கல்வி இயக்கம் இரண்டாவது ஆண்டாக சென்னை மரினாவில் “யுரேகா ஓட்டம்” நடத்தவுள்ளது .
தமிழ்நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்க்காகவும், தற்போதய கல்வி நிலையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காகவும் இந்த ஓட்டம் நடைபெற உள்ளது. யுரேகா கல்வி இயக்கம் தனது பணியை தற்போது தமிழகத்தில் 1000 கிராமங்களில் செய்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாலை நேர வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளித்து வருகிறது. உங்களை மற்றும் என்னைப்போல தன்னார்வ தொண்டாளர்களின் உதவியுடன் கல்வி மட்டுமல்லாது ஆரோக்கியம், மற்றும் ஒருமித்த கிராம வளர்ச்சி பணிகளை செய்ய துவங்கி உள்ளது. இன்னும் சில வருடங்களில் 1000 மாதிரி கிராமங்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இந்த யுரேகா ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்… நீங்களும் யுரேகா கல்வி இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்..
( படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
நாள் : நவம்பர் 12, 2011
இடம் : சென்னை மெரினா கடற்கரை,
துவக்கம் : காந்தி சிலை அருகில்
நேரம் : காலை மணி 6.30
வலைத்தளத்தில் பதிவிட – http://www.eurekachild.org/run2011/
முகநூலில் உங்கள் வரவை பதிந்திட – https://www.facebook.com/event.php?eid=231319860256166
உங்களால் உங்கள் நண்பர்களிடதோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ பதிவு சீட்டை விற்க முடிந்தால் பதிவு சீட்டுகளை பெற அணுகவும் – செல்வா – 9790951652 ,volunteer@aidindia.in , aid.selva@gmail.com