தாய் அன்பு இல்லம்
தி.சின்னராஜ்
அம்மா என்றால் அன்பு. அன்னை வழியில் அசத்தும் சுமதிகாசி அவர்கள் சேலத்தில் ஒரு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைக்குத் தாயாக இருந்த இவர், ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை தத்து எடுக்கலாமே என்று தன் கணவரிடம் யோசனை கூறவே அவர் ஆரம்பத்தில் மறுத்தார். இருப்பினும் தன் ஆர்வத்தைத் தொடர்ந்து அவரிடம் கூறவே சம்மதம் தெரிவித்தார். இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தன் அரவணைப்பில் உணவு, இருப்பிடம், கல்வி, வழங்கித் தன் பணியை தொடர்கிறார்.
ஆரம்பத்தில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உதவிய இவர், இந்த ஆண்டு முதல் ஆண் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டுள்ளார். “சேவையே என் சந்தோசம்” எனக் கூறி மகிழும் அந்தத் தாயின் தாய் அன்பு இல்லத்திற்கு உதவிக் கரம் நீட்ட இதோ தொடர்பு முகவரி.
திருமதி.சுமதி காசி
தாய் அன்பு இல்லம்
1/75 , நடு வீதி
ஏ. எம். மங்களூர்
பேலூர் முதன்மை சாலை
சேலம்– 636 106
அலை பேசி 9600533456