குழந்தைகள் தின ஓவியப் போட்டி,மாறுவேடப் போட்டி – தூரிகை சின்னராஜ்
நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகியவை நவம்பர் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
மாறுவேடத்தில் குழந்தைகள் – தூரிகை சின்னராஜ்
அன்புச் செல்லங்களின் அழகிய கைவண்ணங்கள் I – தூரிகை சின்னராஜ்
அன்புச் செல்லங்களின் அழகிய கைவண்ணங்கள் II – தூரிகை சின்னராஜ்
அன்புச் செல்லங்களின் அழகிய கைவண்ணங்கள் III – தூரிகை சின்னராஜ்
அன்புச் செல்லங்களின் அழகிய கைவண்ணங்கள் IV – தூரிகை சின்னராஜ்
குழந்தைகள் தினம் – இராஜராஜேஸ்வரி
“இந்தியாவில் ஆசிய ஜோதியாக, ரோஜாவின் ராஜாவாக, குழந்தைகளின் அன்புக்குரிய நேருமாமாவாக,சாச்சா நேருவாகத் திகழ்ந்த ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டி நடத்தவிருக்கும் “யுரேகா ஓட்டம் 2011″
குழந்தைகள் குழந்தைகளாகட்டும் – தாண்டவக்கோன்
குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும் உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின் மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.
குழந்தைகளைக் கொண்டாடுவோம்! – சாந்தி மாரியப்பன்
ஒவ்வொரு மாதமும் பதினான்காம் தேதி வருகிறது, ஆனால், நவம்பர் மாதம் வருகிற பதினான்காம் தேதிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தின் சிறப்பு
அன்புச் செல்லங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
இந்தக் கணினி யுகத்தில் என்னதான் வீடீயோ கேம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம் என்று எண்ணிலடங்கா பொழுது போக்குகள் இருந்தாலும், நம் பழமையான மரபுக் கதைகள் கேட்பதென்றால் ஒரு தனிப்பட்ட ஆனந்தம்தானே! அதுவும் ராஜா கதை என்றால் மேலும் சுவைதானே? இதோ அப்படி ஒரு கதை உங்களுக்காக இந்த குழந்தைகள் தின பரிசாக!
பிரபலங்கள் வாழ்த்துகிறார்கள் – தூரிகை சின்னராஜ்
என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்குக் குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத் தூரிகைகளால் வரைந்து சுருக்கி விட முடியாது. வானம் என்னும் திரையில் தோன்றும் குழந்தைகளின் கற்பனைகள் பால் வெளி நோக்கியும் பயணிக்கும் வல்லமை படைத்தவை. சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நாம். வண்ணம், வடிவம், எண்ணம், எழுத்து எல்லாமே என் பிரியமுள்ள குழந்தைகள். அவர்களுக்கு வாழ்த்து சொல்லவே விருப்பம்.
நான் குழந்தையாக மாறினேன் – விசாலம்
சிறுவர்கள் தினம் என்றவுடனே எனக்கும் சிறுமியாக மாற ஆசை வந்தது .குழந்தை என்றாலே நோ டென்சன் .களங்கமில்லாத உள்ளம் மகிழ்ச்சியான சூழ்நிலை
தாய் அன்பு இல்லம் – தூரிகை சின்னராஜ்
அம்மா என்றால் அன்பு. அன்னை வழியில் அசத்தும் சுமதிகாசிஅவர்கள் சேலத்தில் ஒரு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைக்குத் தாயாக இருந்த இவர், ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை தத்து எடுக்கலாமே என்று தன் கணவரிடம் யோசனை கூறவே அவர் ஆரம்பத்தில் மறுத்தார். இருப்பினும் தன் ஆர்வத்தைத் தொடர்ந்து அவரிடம் கூறவே சம்மதம் தெரிவித்தார். இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தன் அரவணைப்பில் உணவு, இருப்பிடம், கல்வி, வழங்கித் தன் பணியை தொடர்கிறார்.
Its wonderful!!!! Helps the children to bring out their inborn talents. Wish you all the best for your further progress.