ராஜராஜேஸ்வரி ஜெகமணி

ஒளி விளக்குகள் இல்லம் தோறும்  ஒளிவீசிப் பிரகாசிக்க உள்ளமெல்லாம் உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்துஉறவாடும் நேரம ….

சித்திர பூப்போலே சிதறும் மத்தாப்புடன் தீயேதும் இல்லாமல் வெடித்திடும்  கேப்புடன்  மகிழ்ச்சியாக  முகமோ மலரோ இது என்ன ரசிப்பு  என்று  குழந்தைகள் உற்சாகமாக  மின்னொளி வீசும் எழில் பிரவாக மாக கொண்டாடும் இனிய நாள் .தீபாவளி..

முத்திரை பசும்பொன்னாய் வல்லமை சேர வளமை பொங்க திருமகளின் அவதார நாளான தீபாவளி யன்று  மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது.

திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் .தீப வடிவில் தீப லக்ஷ்மி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்கச் செய்வாள்.இல்லங்களில் ல்க்ஷ்மி பூஜையும்  லக்ஷ்மி குபேர பூஜையும்  செய்வது சிறப்பான நன்மைகள் அளிக்கும் … 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது மகாலக்ஷ்மி தோன்றியதால் தீபாவளியன்று செய்யும் லக்ஷ்மி பூஜை  மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைக்கும் 

 வாமன அவதாரத்தில் கண்ணன் மூன்றடி மண் கேட்டு மாபலியை மண்ணுக்குள் தள்ளிய வரலாற்றின் நாள் ….

வடக்கில் இராவணனை இராமர் வென்று அயோத்திக்குத் திரும்பிய தினமாக தீபாவளி திகழ்கிறது…

அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொண்டு இறையருளால் துன்பங்கள் எல்லாம் நீங்கி  மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார திருமூலர். ‘

தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.

செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தை உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வில் செழிபடையலாம்…

ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள்   பொருள் செல்வம் , வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம்  ஆகிய அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும் 

ராஜாதிராஜனாக யட்ச கணங்களின் தலைவனாக,  செல்வத்தை வழங்கும் சங்கநிதி, பதுமநிதி என்னும் பிரதிநிதிகள்  இருபுறமும் வீற்றிருக்க வடதிசைக்கு உரியவராக அஷ்டதிக் பாலகர்களில் இடம்பெற்ற குபேரனை .தீபாவளி மட்டுமின்றி, வெள்ளிக்கிழமைகளிலும் இவரை ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம என 108 முறை சொல்லி மல்லிகை மலர் தூவி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 


ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை

கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யை

தனகரிஷ்ன்யை ஸ்வாஹா.

 

செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள்  அன்று குபேரனை பூஜித்தால் செல்வம் தழைத்தோங்கும் .

 திருவேங்கடவனுக்கே செல்வம் அளித்து கை கொடுத்து உதவிய குபேரன் விஷ்வரஸ் என்பவருடைய மகன்.

 லட்சுமி தேவியின் பரமபக்தனாக  தேவியின் பூரண கடாட்சம் கிடைக்கப்பெற்று பெரும் செல்வந்தனாக மாறியவன்..

ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய 

தநதா ந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத் திம் மே 

தேஹி தாபா யஸ்வாஹா

 என்னும் – குபேர மந்திரத்தை 108 முறை ஜபித்து வாழ்க்கையில் வறுமையாகிய இருளை விரட்டி, செழிப்பாகிய ஒளியைக் கொண்டு வரலாம்…


காயேன‌ வாச‌ ம‌ன‌சேந்திரியை வா 

 புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்

 க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை 

நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !1

 

பாற்கடலைக் கடையும்போது திருமாலின் அம்சமாக கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய மருத்துவக் கடவுளான .  தன்வந்திரி பகவானை. வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.


பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதிகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோபூஜை செய்வது சிறப்பு.


துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினம்…

 அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடைதானம் செய்வதும் இல்லத்து இனிமையை  பொங்கச்செய்யும் …

குல தெய்வ பூஜை  வாழ்வு பிரகாசிக்க வைக்கும் 

பூர்வ ஜென்மத்தில் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்த நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே  இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் ; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்ற  நாள்  தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது…..

பூமா தேவியின் அம்சமாக கிருஷ்ணடன் சென்று நரகாசுரனை அழித்த சத்யபாமாவை வீரலட்சுமியாக  வழி படுவது வட இந்திய வழக்கம்.. வாழ்வில் வரும் தடைகள் விலகும் …


கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், ரோகம் ஏற்படாது. 


 தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். 


அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான். அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.

எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.

தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்….உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். மகா லக்ஷ்மியும் பாற்கடலில் தானே அவதரித்தாள் !

கங்கா ஸ்நானம் செய்தபின்  மகாலக்ஷ்மி  பூஜையில்  வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்க  வீட்டில் செல்வம் பெருகும்;


காசியில்  கங்கையில் நீராடி  அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். தங்கத்தாலான கால பைரவரும்  தீபாவளி  தினத்தில் மட்டுமே வீதியுலா வருவார்.


3 thoughts on “தித்திக்கும் தீபாவளி!

  1. ஷைலஜா says:
    November 12, 2012 at 1:16 pm
    அருமையான பதிவு..அறியாத தகவல்கள் மிக்க நன்றி //

    கருத்துரைக்கு இனிய ந்ன்றிகள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *