முந்தி இருப்பச் செயல் (சிறுகதை)

முகில் தினகரன்

அந்தப் பத்திரிக்கையாளர; சந்திப்பின் இறுதியில் ஒரு ஜிப்பாக்கார நிருபர;; கேட்ட கேள்வி புகைப்படக் கலைஞர; கோபிநாத்தை சற்று தடுமாற வைத்தது.

கோபிநாத்…காமிராவைப் பேச வைப்பதோடு மட்டுமல்லாது ஆட வைக்க…பாட வைக்க அதிர வைக்க…உருக வைக்க….ஏன்?…அழ வைக்கக் கூடத் தெரிந்த வித்தகர.;   அவர; எடுத்த புகைப் படங்களில் பல கவிதைகள்…பல காவியங்கள். அகில இந்திய அளவில் தன் புகைப்படத் திறமையைக் காட்டிவிட்டு தற்போது அகில உலக அளவிலும் நிமிர;ந்து நிற்கும் இந்தியாவின் இணையற்ற சொத்து அவர;.  வீட்டு அலமாரிகள் அவர; பெற்ற பாpசுக் கேடயங்களால் நிறைமாத கா;ப்பிணியாய்….விருதுகள் அவர; வீட்டு வாசலில் வரிசையில் நின்று ‘எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்…எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனக் கெஞ்சிக் கொண்டிருக்க பல ஏற்கனவே அவர; தோளில் ஏறி அமர;ந்து விட்டிருந்தன.

‘சார;…நீங்க பொpய உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரா இருக்கலாம்…ஏற்கனவே பல முறை உலக அளவிலான புகைப்படப் போட்டிகளி;ல் பல பரிசுகளை வென்றிருக்கலாம்…மறுக்கலை….ஆனா அதுக்காக ‘அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கப் போற உலக அளவிலான போட்டியிலும் நான்தான் முதல் பரிசை வெல்வேன்” னு நீங்க ஆணித்தரமாச் சொல்லுறதை உங்க ‘தன்னம்பிக்கை”ன்னு  எடுத்துக்கவா?…இல்லை…உங்களோட ‘தலைக்கனம்”ன்னு எடுத்துக்கவா?”

சில நிமிடங்கள் ஒரு இறுக்கமான அமைதி அந்தச் சூழ்நிலையை கெட்டியாக ஆக்கிரமி;க்கத் துவங்கிய வேளையில் கோபிநாத்தின உடன் அமர;ந்திருந்த அவரது மகள் சவிதா அதை உடைத்தாள்.

‘அதாவது…’இந்த முறையும் அந்தப் போட்டியில் வென்று நம் நாட்டுக்குப் பெருமை சேர;ப்பேன்” என்பதைத்தான் அவர; ஆர;வ மிகுதியால் அப்படிச் சொல்றார;”

அவசரமாய் அவளைக் கையமர;த்திய கோபிநாத் முகத்தில் ஒரு கடுமையடன் ‘யோவ்…’தலைக்கனம்’ன்னே எழுதிக்கய்யா… டோண்ட் கேர;…நான் ஜெயிக்கறேன்…ஜெயிச்சுக் காட்டறேன்”

அவரது கோபப் பேச்சு அந்த ஜிப்பா நிருபர; முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பை உற்பத்தி செய்ய அந்தக் குறுஞ்சிரிப்பு கோபிநாத்தின் மனதில் ஏகமாய் எhpச்சலை உற்பத்தி செய்தது.

‘நீ எந்தப் பத்திரிக்கை?”

‘பிற்பகல்”

‘உன் பத்திரிக்கைல இதை ‘சவால்”ன்னே போடு…’முதல் பாpசை வென்றே தீருவதாய் கோபிநாத் சவால்”ன்னு போடு”

‘சரி…வெல்லலைன்னா?” ஜிப்பா நிருபரின் பதில் கேள்வியில் ஒரு எள்ளல் தொpய,

‘யோவ்…வெல்லலைன்னா…நான் தற்கொலை செஞ்சுக்கப் போறதாப் போடுய்யா”

‘டா…டீ…” அலறினாள் சவிதா.

கோபிநாத்தின் அந்த அதிரடி பதிலில் மொத்தப் பத்திரிக்கையாளர;களும் ஆடிப் போயினா;.

‘சார;…எதுக்கு சார; இப்படி எமோஷன் ஆகறீங்க?” யாரோ ஒரு சாது நிருபர; சொல்ல,

‘இது எமோஷன் இல்ல மேன்….என்னை நானே உரசிக்கற உரைகல்….அவருக்கு மட்டுமல்ல…எல்லா பத்திரிக்கைக்காரங்களுக்கும் சொல்றேன் எல்லோரும் அவங்கவங்க பத்திரிக்கைல போடுங்க…’முதல் பாpசு வாங்கலைன்னா கோபிநாத் தற்கொலை செய்து கொள்வார;”ன்னு”

‘டாடி..” சவிதா அவரைச் சாந்தப் படுத்த முயன்றாள்.

அவரோ அவளைச் சிறிதும் சட்டை செய்யாமல் தன் சவாலைப் பதிவு செய்வதிலேயே தீவிரமாயிருந்தார;.

‘அப்படின்னா நாங்க எல்லோரும் எங்க பத்திரிக்கைல இந்த சவால் குறித்த அறிவி;ப்பை வெளியிடலாம்….அப்படித்தானே மிஸ்டா; கோபிநாத்?” நிருபர;கள் கோரஸாய்க் கேட்க,

‘தாராளமா…” நெஞ்சை நிமிர;த்தியபடி சொன்னவர; ‘விருட்”டென எழுந்து அதே வேகத்தில் அங்கிருந்து சென்றார;.

கலவர முகத்துடன் சவிதா அவரைப் பின் தொடர;ந்து ஓட தங்கள் பத்திரிக்கை வாய்க்கு நல்ல அவல் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நிருபா;கள் தங்களுக்குள் ‘கச..கச” வென்று பேசியபடி வெளியேறினர;.

அன்றிலிருந்து தன் காமிரா கண்களால் வெளி உலகை ஒவ்வொரு அங்குலமா அளக்க ஆரம்பித்தார;.  காணும் ஒவ்வொரு காட்சியையும்…ஒவ்வொரு மனிதரையும்…ஒவ்வொரு இடத்தையும் வித்தியாசமான கோணத்தில்….வித்தியாசமான வடிவத்தில் காமிராவிற்குள் அடைத்து வைத்தார;. உணவை மறந்து உறக்கத்தை மறந்து பாpசுப் போட்டிக்கான புகைப்படத்தைத் தேடி கன்னித்தீவு சிந்துபாத்தாய் அவர; அலைவது அவரது மகள் சவிதாவிற்கு அதீத வருத்தத்தைக் கொடுத்தது.

‘டாடி…இப்படி ராத்திரி பகல்ன்னு பார;க்காம அலைஞ்சு திரிஞ்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்களே…இது தேவையா டாடி?”

‘என்ன இப்படிக் கேட்டுட்டே?…இட்ஸ் எ சேலனஞ்…நான் ஜெயிச்சாகணும்…ஏன்னா இது என் உயிர; சம்மந்தப்பட்ட விஷயம்”

‘அப்படின்னா அன்னிக்கு நீங்க விட்ட சவால் சீரியஸான சவாலா டாடி?” பய முலாம் பூசி வந்தன அவள் வார;த்தைகள.;

‘நோ பேபி…பயப்படாதே…நான் ஜெயிச்சிடுவேன்” கட்டை விரலைத் துhக்கிக் காட்டிப் புன்னகைத்தார;.

அவரது புன்னகையும் தன்னம்பிக்கைப் பேச்சும் அவளுக்கு ஒரு பெருமிதத்தைக் கொடுத்தாலும் இன்னதென்று புரியாதா ஒரு அச்சப் பந்து அடி வயிற்றில் அசைந்து கொண்டேயிருந்தது.

ழூழூழூ

இரண்டுக்கு இரண்டு அடி அளவிலிருந்த மெலிதான தங்க ஃபிரேமிடப்பட்ட அந்தப் பகைப்படத்தை சுவற்றில் சாய்த்து நிறுத்தி வைத்து சற்றுத் தள்ளி நின்று அதை ஊன்றி ரசித்த கோபிநாத் ‘வாவ்…எக்ஸலண்ட்…நிச்சயம் இது முதல் பரிசைத் தட்டிடும்” தனக்குத் தானே கூறிக் கொண்டார;.

‘என்ன டாடி…மொபைலை சைலண்ட்ல போட்டு வெச்சிருக்கீங்களா?..ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன்…” சொல்லியபடியே அறைக்குள் நுழைந்த சவிதா அந்தப் புகைப் படத்தைக் கூர;ந்து பார;த்து விட்டு முகத்தைச் சுளித்தாள்.

‘என்னம்மா பார;க்கிறே,…இதுதான் அமெரிக்காவுல நடக்கற உலகப் புகைப்படப் போட்டில முதல் பரிசை வெல்லப் போற புகைப்படம்” என்றார; முகத்தில் பூரிப்புடன்.

நிதானமாக அவரை ஏறிட்டுப் பார;த்தவள் ‘அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லறீங்க?…எனக்கென்னமோ அப்படித் தொpயலையே”

‘நோ…உனக்குப் புரியலைன்னு சொல்லு ஒத்துக்கறேன்….இந்தப் புகைப்படத்தில் உள்ள தொழில் நுட்பம்….இதனுhடே இழையோடித் தொpயும் கலை நுணுக்கம்….வித்தியாசமான லைட்டிங் எஃபெட்…. அhpதான கோணம்….எதுவுமே உன் புத்திக்கு எட்டலை…அதான் வெறுமனே மேலோட்டமா பார;த்திட்டுச் சொல்லுறே…”

அவளோ இட வலமாயத் தலையை ஆட்டியபடியே அப்படத்தை மறுபடியும் பார;த்தாள்.

‘ஓ.கே…நானே சொல்றேன் கேட்டுக்க…இதுல இருக்கற இந்தச் சிறுவன்…இந்தியாவோட மிக..மிக மோசமான…ஒரு சேரிப் பகுதியில்….சாக்கடைக்கு நடுவில்…குப்பைத் தொட்டிகளின் நெருக்கத்தில் …பன்றிகளோட வாழ்ந்திட்டிருக்கறவன்…..வறுமையின் ஒட்டு மொத்த வாரிசு!  அவனோட டிரவுசரின் பின் பக்கக் கிழிசலை நல்லாப் பாரு..அது என்ன தோற்றத்துல இருக்கு?” சவிதாவைப் பார;த்துக் கேட்டார;.

அவள் விழிக்க,

‘அடடே…என்னம்மா இது கூடப் புரியலையா உனக்கு?…அந்தக் கிழிசல் இந்திய மேப் வடிவத்துல இருப்பது உனக்கு நிஜமாத் தொpயலையா?”

புகைப்படத்தை நெருங்கிச் சென்று பார;த்துவிட்டு ‘அட..ஆமாம்” என்றாள்.

‘அதுவே என்னவொரு நுட்பம் தொpயுமா?….கான்செப்டை அதுவே சொல்லும்!….அடுத்தது….இப்படியொரு கிழிசல் டிரவுசரைப் போட்டுக்கிட்டு…ஒட்டிப் போன வயிறோட…எலும்புகள் தொpயும் நெஞ்சுக் கூட்டோட இருக்கும் இச்சிறுவன் குப்பைத் தொட்டியிலிருந்து தனக்குக் கிடைத்த ரொட்டித் துண்டை தான் சாப்பிடாமல் தன் அருகில் நின்று கை நீட்டும் அச்சிறுமிக்குத் தருகிறான்…அதன் காரணமா அவன் முகத்தில் கொப்பளித்து நிற்கிற சந்தோஷம்…மகிழ்ச்சி…இதெல்லாம் தொpயவே இல்லையா உன் பார;வைக்கு?”

‘ம்ஹூம்…தொpயலை டாடி”

‘ஓ…புவர; கோ;ள்….உனக்கு இன்னும் ரசனை என்னும் நுண்ணறிவு முளைக்கவே இல்லை…உன்னைப் பார;க்க எனக்கு பாவமாயிருக்கு” அவர; சிரித்தபடி சொல்லி மகளைச் சீண்ட,

‘டாடி…நான் ஒண்ணு சொல்வேன் கேட்பீங்களா, ம்…ம்…இந்தப் போட்டோ வேணாம் டாடி….இதை நீங்க அனுப்பாதீங்க டாடி”

‘ஏய்…உனக்கென்ன பைத்தியமா?…இப்பத்தானே இந்தப் படத்தோட சிறப்பம்சங்களைச் சொன்னேன்…?”

‘அதெல்லாம் ஓ.கே.டாடி….வந்து…”

‘ஓ…புரியது…புரியது….எங்கே இந்தப் படத்தை அனுப்பி….இது தோற்றுப் போய்…எனக்கு பரிசு கிடைக்காமப் போய்….நான் தற்கொலை செய்து கொள்வேனோ…ன்னு பயப்படறே…அதானே?…கலைப்படாதே….என்னோட இந்தப் போட்டோ நிச்சயம் என் உயிரைக் காப்பாற்றும்…” நம்பிக்கை நங்கூரம் பாய்ச்;சி நின்றது அவர; பேச்சில;.;

‘உங்க உயிரைக் காப்பாத்திடும்…ஆனா….”

‘ஆனா…?”

‘நம்ம தேசத்தோட மானம்…மரியாதை…கௌரவம்….அத்தனையையும் சாகடிச்சிடும்” சவிதாவின் குரலில் கடுமை இருந்தது.

அவர;; நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளைக் கூர;ந்து நோக்க

‘ஆமாம் டாடி…இந்தியாவோட ரொம்ப மோசமான…ரொம்ப பின் தங்கிய நிலையில் இருக்கற ஒரு சோpப் பகுதியையும்…அங்க வாழுற ஒரு ஓட்டை டிரவுசர; பையனையும் புகைப்படம் எடுத்து அமெரிக்கப் போட்டிக்கு அனுப்பிச்சு ‘இதுதான் எங்க நாட்டோட நிலைமை…உலகத்திலுள்ள மற்ற நாடுகளெல்லாம் ஜெட் வேகத்தில் முன்னேறிட்டிருக்கற இந்தக் கம்ப்யூட்டர; யுகத்திலும் நாங்க இன்னும் முன்னேறாம….அப்படியே கற்கால மனிதனாட்டம்தான் இருக்கோம்”ன்னு உலகம் பூராவும் பறை சாற்றப் போறீங்களா?…வேண்டாம் டாடி….இதுக்கு பதிலா நம்ம நாட்டோட உண்மையான வளர;ச்சியை….பெருமையை…கலாச்சாரத்தை….காட்டுற மாதிரியான ஒரு புகைப்படத்தை எடுத்து …அதை அனுப்புங்க டாடி!…நாம மத்த நாடுகளுக்கு எந்த சளைத்தவர;கள் இல்லை டாடி..ப்ளீஸ்…” கெஞ்சினாள்.

அவரோ மறுப்பாய்த் தலையாட்டியபடி அங்கிருந்து நகர ஓடி வந்து வழி மறித்தாள் ‘டாடி…நீங்க சொன்ன கலை அம்சங்களை நானும் ரசிச்சேன்….இல்லைங்கலே…ஆனா…என் தாய் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தற அந்தக் கலை அம்சங்களை என்னால் கலை அம்சங்களாவே ஏற்றுக் கொள்ள முடியலை டாடி…..நீங்களே உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க டாடி…நம்ம நாடு எதுல முன்னேறாம இருக்கு?…வெகு விரைவிலேயே வல்லரசாகப்  போகுது டாடி…அதனால…அதனால…அந்தப் போட்டோவ நீங்க அனுப்பக் கூடாது டாடி.”

‘அப்படின்னா…ஏதோ ஒரு ஏனோதானோ போட்டோவை அனுப்பிச்சு….போட்டில தோத்து…என்னை உயிரை விடச் சொல்றியா?” அவர; அவ்வாறு கேட்டதில் மனம் நொந்து போன சவிதா பாய்ந்து வந்து அவர; வாயைப் பொத்தினாள்.

வலுக்கட்டாயமாய் அதை விலக்கியவர; ‘அப்ப நீயே முடிவு பண்ணிச் சொல்லு….’தாய் நாடா?..தந்தை உயிரா?”ன்னு”

‘அய்யோ…டாடி…எனக்கு ரெண்டுமே முக்கியம் டாடி…”

‘பட்….எனக்கு பாpசுதான் முக்கியம்….ஸோ…என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை….நான் அந்தப் புகைப் படத்தைத்தான் அனுப்பப் போறேன்…” ஆணித்தரமாய்ச் சொல்லி விட்டுச் சென்றவரைக் கண்ணீருடன் பார;த்தபடி நின்றாள.;

ழூழூழூ

நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு  தன் வீட்டு வாசலில் மொத்தமாய் வந்திறங்கிய மீடியா ஆட்களை குழப்பத்துடன் பார;த்தார; கோபிநாத.;

‘சார;…ரியலி யூ ஆh; கிரேட் சார;”

‘சொன்னபடி சாதிச்சுட்டீங்க சார;”

‘சவால்ல ஜெயிச்சு…இனி புகைப்படக் கலைல உங்களை மிஞ்ச ஒருத்தரும் இல்லைன்னு நிருபிச்சுட்டீங்க சார;”

திக்குமுக்காட வைத்த கை குலுக்கல்களும்….பாராட்டுக்களும் ஓரளவிற்கு விஷயத்தை யூகிக்க வைக்க ‘ஆஹா…என் புகைப்படம் வென்று விட்டது….என் உயிர; காப்பாற்றப்பட்டு விட்டது”

சட்டென முன் வந்து நின்ற அதே ஜிப்பாக்கார நிருபா; ‘ஸாரி சார;…அன்னிக்கு நான் உங்களை..”

‘இட்ஸ் ஓ.கே…இட்ஸ் ஓ.கே…சொல்லப் போனா மிஸ்டர;…ஜிப்பா…நீதான்யா எனக்கு கிரியாஊக்கியே” என்றார; கோபிநாத் சிரித்தபடி.

‘சார;…பரிசு பெற்ற அந்தப் புகைப்படம் எந்தச் சூழ்நிலையில்….எப்படி எடுக்கப்பட்டது என்பதையும்….அதில் என்னென்ன உட்கருத்துக்கள்….என்னென்ன உத்திகள் இருக்கு என்பதையும் எங்கள் பத்திரிக்கை வாசகர;களுக்காக நீங்க கண்டிப்பா சொல்லியே ஆகணும் சார;” பெண் நிருபர; ஒருத்தி ஒயிலாய்க் கேட்டாள்.

‘ஓ.எஸ்…தாராளமா…” என்ற கோபிநாத் அப்புகைப்படத்தின் பிரதியை எடுத்து வர வேண்டி அறை நோக்கித் திரும்ப,

‘இதோ என்கிட்ட இருக்கு சார; அந்தப் போட்டோவோட காப்பி…” இணைய தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போட்டோ நகலை ஜிப்பாக்காரா; நீட்டினார;.

‘வெரி குட்” என்றபடி அதைக் கை நீட்டி வாங்கிய கோபிநாத் திருப்பி அதை முழுதாய்ப் பார;த்ததும் ஆக்ரோஷமானார;.

‘நோ…நோ….நான் அனுப்பிய புகைப்படம் இதுவல்ல….சம் திங் ராங்”

‘என்ன சார; சொல்றீங்க,…இது உங்க புகைப்படம் அல்லவா”

‘இதுவும் நான் எடுத்த புகைப்படம்தான்….பட்…போட்டிக்கு அனுப்பியது வேறொரு புகைப்படம்…எங்கியோ குழப்பம் நடந்திருக்கு” கோபத்தில் அவரது சிவந்த முகம் மேலும் சிவப்பாகி விகாரமாய்த் தோற்றமளித்தது.

உள்ளறையிலிருந்து மொத்தத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சவிதா இனியும் அந்த உண்மையைச் சொல்லாமல் விட்டால் நிலைமை மேலும் விபாPதமாகிவிடும் என்பதை உணர;ந்து அறையிலிருந்து வெளிப்பட்டாள். ‘டாடி…என்னைய மன்னிச்சிடுங்க டாடி…நான்தான் உங்களுக்குத் தொpயாம அந்த புகைப்படத்தை மாற்றி வைத்தேன்…” நடுங்கும் குரலில் சொன்னாள்.

‘ஓ…மை…காட்……ஏம்மா…ஏன் இப்படிச் செஞ்சே?…”

தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷனையின் பின்புலம் விளங்காத நிருபா;கள் குழப்பத்தில் ஒருவர; முகத்தை ஒருவா; பார;த்தபடி நின்றிருந்தனர;.

‘டாடி…எப்படியோ நீங்க எடுத்த புகைப்படம்தானே ஜெயிச்சிருக்கு…? அப்புறமென்ன?”

‘மேடம்…நாங்கெல்லாம் இங்க என்ன நடக்குதுன்னே புரியாம தலையைப் பியச்சுக்கறோம்….ப்ளீஸ்…எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்…” புதிய செய்திகளுக்காகவே அலையும் ஒரு நிருபா; ஆவலோடு இடை புகுந்து கேட்க

மெலிதாய்ச் சிரித்த சவிதா சொன்னாள்.

பொறுமையாய் அனைத்தையும் கேட்டு முடித்த அந்த மீடியாக்காரர;கள் அனைவரும் தங்கள் காமிராவை கோபிநாத்திடமிருந்து விலக்கி சவிதாவின் மீது நிலைப்படுத்தினா;.

‘மேடம்….உண்மையைச் சொல்லனும்னா..நீங்கதான் மேடம் இன்னிக்கு வி.ஐ.பி. போட்டில முதல் பாpசு வாங;கி உங்கப்பா இந்த நாட்டுக்கு பெருமை சேர;த்திருக்கலாம்….ஆனா நம்ம நாட்டோட பேருக்கும்…பாராம்பாpயப் புகழுக்கும் துளியும் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக….உங்கப்பாவோட உயிரையே பணயம் வைக்கிற மாதிரியான ஒரு காரியத்தை நீங்க ரொம்பத் துணிச்சலா செஞ்சிருக்கீங்க…ஒரு பொpய ரிஸ்க்கை நம்பிக்கையோட…மனத்திடத்தோட எடுத்திருக்கீங்க…அதுல வெற்றியும் பெற்றிருக்கீங்க…யூ ஆர; க்ரேட்…” ஜிப்பாக்காரர; அடுக்கிக் கொண்டே போனார;.

‘தந்தையோட உயிர;…..தாய் நாட்டோட பெயர;…ன்னு இரண்டுக்கும் நடுவுல தவியாய்த் தவிச்சிருக்கீங்க மேடம் நீங்க…அதை நினைச்சுப் பார;க்கிற போதே உடம்பெல்லாம் சிலிர;க்குது மேடம்…” பெண்கள் பத்திரிக்கையின் பிரதான நிருபா; ஒருவர; பிரமாதமாய்ச் சிலாகித்தார;.

‘மிஸ்டர;.கோபிநாத் சார;…உங்ககிட்ட ஒரு கேள்வி…நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது…”

‘நோ பிராப்ளம்…” தோள்களைக் குலுக்கியபடி சொன்னார; கோபிநாத்.

‘ஒரு வேளை…நீங்க பாpசு வாங்காமப் போயிருந்தா?….”

‘நான் சொன்னதைச் செய்வேன்”

‘விருட்” டென நிமிர;ந்து நடுக்கமாய்த் தந்தையைப் பார;த்தாள் சவிதா. அவர; தலையை மேலும் கீழுமாய் ஆட்டி தன் எண்ணத்தின் உறுதியைக் காட்டினார;.

‘மேடம்…இப்ப உங்ககிட்ட ஒரு கேள்வி….ஒரு வேளை நீங்க புகைப்படத்தை மாற்றி வெச்ச காரணத்தாலேயே உங்க தந்தைக்குப் பாpசு கிடைக்காமப் போயி…அவரும் அவர; சொன்னபடி செஞசிருந்தா….?”

சில நிமிடங்கள் அமைதி காத்த சவிதா ‘முதலில் தாய் நாட்டை ஒரு களங்கத்திலிருந்து காப்பாற்றி விட்டோம்னு சந்தோஷப்படுவேன்….பிறகு….தந்தையின் இழப்பிற்கு காரணமாகி விட்டோமேன்னு வருத்தப்படுவேன்….மொத்தத்தில் ‘இழந்தது தந்தையை…காப்பாற்றியது தாயை”..ன்னு நெனச்சு மனசைத் தேத்திக்குவேன்” என்றாள்.

அவளது அந்த பதிலில் நெகிழ்ந்து போன கோபிநாத் தன் மகளின் தேசப்பற்றில் ஒரு பாதி கூட தனக்கு இல்லாமல் போய் விட்டதற்காய் வருந்தி சட்டென அவளை நெருங்கி வந்து தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டார;.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *