சுதந்திரக் கவித்துளிகள்
கையைக் கட்டி,வாயைப் பொத்தி
அமைதியாய் நடந்தது…
பள்ளியில் சுதந்திர விழா.
0
பறந்தது கொடி
குழந்தையின் நினைவில்
கிழிசல் ஆடை.
0
துப்பிய இனிப்பை
சூழ்ந்து மொய்த்தன…
எறும்புகள்.
0
தேசியகீதம்
கலந்தே ஒலிக்கிறது…
தியாகத்தின் குரல்.
0
தடியடி, குண்டாந்தடி
எதுவுமே அறியாத
சுதந்திர இளைஞன்.
0
சுதந்திரம் வேண்டும்
புகைப்படத்திலிருந்து ஒலிக்கும்
தியாகிகளின் குரல்.
படத்துக்கு நன்றி
என்ன சொல்வது? நடப்பது நடந்தே விடுகிறது.
காசி ஆனந்தனின் நறுக்குகளை ஞாபகமூட்டுகிறது தங்கள் கவித் துளிகள்.