சுரண்டலில் இந்தியா..!
அரசியல் சுதந்திரத்தை அள்ளிக்கொள்ள
ஆனந்த சுதந்திரம் அடையவில்லை..
ஆங்கிலேயனே ஆண்டிருக்கலாம்…
கட்டுக்கோப்பாகவே இருந்திருக்கும்…!
இன்றென்ன வாழுது வெறும்..
அரசியல் சுரண்டல் இந்தியாவில்..!
சுதந்திரக் கனவில் குரல் கொடுத்த
தலைவர்களின் முகவரிகள் யாவும்
புதைக்கப் பட்டதோ பெருவிழாவில்…!
மலர்தூவிக் காலையில் பறக்கவிட்ட
வர்ணக்கொடி மாலையில் மகளின்
தோளில் தவழ்ந்திடும் துப்பட்டாவாய்..!
வன்முறை பெருகிய பெருவிழாவுக்கு
இனிப்புகள் எதற்கு..? இன்னும்
இரவாகவே எத்தனை பகல்கள்…!
ஊழல் தான் உறங்கியதா?
கலப்படம் தான் காணாமல் போனதா?
போலி மருந்தும்…மருத்துவரும்..
மாயமாகி போனார்களா?
பட்டம் பெற்ற இளைஞனுக்கு
வேலை எங்கு கிடைத்தது?
பன்னாட்டு அமைப்புகள் குத்தகைக்
குவியலாய் அள்ளிக் கொள்ள…
இனியென்ன இன்னொரு மகாத்மாவா..
பிறக்கப் போகிறார்…?
சரித்திரமா சுழன்று வரும்!
இந்தியர்கள் அடிமை என
இந்தியாவில் அந்நியன் மடியில்
உழன்று சுதந்திரம் வேண்டுமாய்..
அழுதது அன்று..!
பெற்ற சுதந்திரம் ஆண்டுகள் கடந்தும்
சுதந்திர இந்தியர்கள்….மீண்டும்
அவர்களுக்கே அடிமைப் பட்டுக்
கிடப்பதும் இன்று..!
எரிமுன் போர்த்த விளக்காய்…
சுதந்திர இந்தியா….நாகரீக
சுரண்டலின் மோகத்தில் தள்ளாடியபடி..!
படத்துக்கு நன்றி