எங்கள் இந்தியா!

கவிநயா

சுதந்திர தினத்திற்காக இதோ ஒரு பாப்பா பாட்டு!

எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!

இந்தியர் நாம் என்பதிலே
இன்பம் மிகக் கொள்ளுவோம்!
இந்தியராய் வாழ்ந்து நல்ல
இதயங்களை வெல்லுவோம்!

கடமைகளைச் செய்வதிலே
பெருமை மிகக் கொள்ளுவோம்!
கொடுமைகளை வேரறுத்து
சிறுமைகளை வெல்லுவோம்!

நல்லொழுக்கம் நம்முடைய
விழிகளெனப் போற்றுவோம்!
நற்குணங்களை வளர்த்து
நன்மைகளைக் கூட்டுவோம்!

சுத்தம் சுகா தாரமென்னும்
சூத்திரத்தை எண்ணுவோம்!
சுற்றும் பூமித் தாயைக் காக்க
சுற்றுச் சூழல் பேணுவோம்!

அன்பு என்னும் வேதந்தன்னை
அகிலமெங்கும் பரப்புவோம்!
அன்னை பாரதத்தை என்றும்
அருமையுடன் ஏற்றுவோம்!

எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!

http://www.indiacsr.in/en/?p=3795

6 thoughts on “எங்கள் இந்தியா!

  1. மிகவும் நன்றி இன்னம்பூரான் ஐயா. நீங்கள் அப்படிச் சொன்னது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இது போலப் பாடல்கள் மூலம் பிள்ளைகளின் மனதில் நல்லதை விதைக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

Leave a Reply

Your email address will not be published.