ஆகஸ்ட் 15
சுதந்திரக் காற்றின்
திசை மாறிய நாள்.
அதிகாரம் மட்டும்
மாறியது…
பாரதமெங்கும் வீசிற்று
சுதந்திரக் காற்று.
செடிகளில் பூத்த
பூக்களெல்லாம்
எங்கோ பறந்து போயிற்று…
பாரதமெங்கும் வீசிற்று
சுதந்திரக் காற்று…
காற்றில் ரத்தத்தின்
ஈரப்பதம்…
காற்றில் மிதந்தோடும்
கத்தி, அரிவாள்,
ஆயுதங்களோடு
அச்சுறுத்தும்
அரசியல் தந்திரங்கள்…
பாரதமெங்கும் வீசிற்று
சுதந்திரக் காற்று.
பதுக்கல் பணங்கள்
சுதந்திரக் காற்றை
சுவாசித்து குறட்டை
விடுகின்றன…
பாரதமெங்கும் வீசிற்று
சுதந்திரக் காற்று.
தவறுகளுக்கு தண்டனைகள்
கூறப் பட்டன.
சுதந்திரக் காற்றில்
ஒடிந்த விலங்குகளில்
விடுதலைப் பறவைகள்
ஆயினர்.
பாரதமெங்கும் வீசிற்று
சுதந்திரக் காற்று.
கொடியால் முகத்தை
மூடிக் கொள்ளுங்கள்.
காற்றின் விஷத்தால்
உயிருக்கு ஆபத்து.
வாலும் போச்சு. கத்தியும் வரல்லெ.