கவிநயா

 

உடல்தனை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் –

உண்ணவும் உடுக்கவும் படுக்கவும் வேண்டும்!

 

புத்தியை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் –

படிக்கவும், அறியவும், புரியவும் வேண்டும்!

 

உள்ளத்தை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் –

எண்ணவும், எழுதவும், பேசவும், வேண்டும்!

 

அனைத்திலும் உயர்வாய் பிறிதொன்றும் உண்டு …

 

ஆன்மாவை வளர்க்க சுதந்திரம் வேண்டும் –

பற்றின்றி இருக்கப் பழகிட வேண்டும்

பலன் வேண்டாமல் கடமை செய்திட வேண்டும்

அளவின்றி அன்பை அளித்திட வேண்டும்

அருளின்றி உலகில்லை, உணர்ந்திட வேண்டும்

உலகியல் வாழ்விதை இறைப் பணியெனவே

ஒவ்வொரு கணமும் வாழ்ந்திட வேண்டும்!

 

படத்துக்கு நன்றி: http://calmhope.org/wp-content/uploads/2013/06/spiritualfreedom.jpg

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *