சுதந்திரமாய்…
–மன்னை சதிரா
கண்ணாய்த் தலைவரெல்லாம்
காத்து நமக்களித்த
சுதந்திரத்தைக் காத்தோமா?
அந்நியரை விரட்டி விட்டோமென
அடைகிறோம் ஆனந்தம்!
ஆனால்…
அந்நியப் பொருள்களை,
பொருளாதார ஆதிக்கத்தை
விரட்டி விட்டோமா?
பகலில் கூடப் பெண்கள்
சுதந்திரமாக நடமாடமுடிகிறதா
காமுகர்களால்?
சுதந்திரமாய்
எல்லாத் துறைகளிலும்
லஞ்சமும் ஊழலும் செய்து
வஞ்சகமாய்த் திரிவதைத்தானே
பார்க்கிறோம்!
இது 67-ம் ஆண்டு சுதந்திர தினமாம்!
இனியாவது லஞ்சம் ஊழல் தவிர்த்து
அந்நியப் பொருளாதார
ஆதிக்கத்தை விரட்டி
பெண்களைக் கண்ணென மதித்து
உண்மையான சுதந்திரத்தைச்
சுவாசிப்போம் சுதந்திரமாய்…!