என் இந்திய தேசம் இது
–ராஜராஜேஸ்வரி ஜெகமணி.
இறையாண்மைக் கொண்ட இந்தியாவின் சுதந்திரம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்க்கிறோம்..
தேசவிடுதலைத்தியாகிகளின் கண்ணீராலும் செந்நீராலும் பெற்றுப் பேணி வளர்த்துப் பலன் தரும் இன்னரும் மதுரமான கனிமரம் தித்தித்திக்கும் சுதந்திரம் ..!
அதனை வந்தே மாதரம் .. வந்தேமாதரம் என்று உணர்ச்சி பொங்க வாழ்த்தி திருநாளாகக் கொண்டாடுகிறோம்..
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
என்று ஞான பாரதத்தை வணங்குகிறோம்..!
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள்!ஓங்குமினோ!ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்;
வேதனைகள் இனி வேண்டா;
என திண்ணமாக வாழ்த்தொலிகள் முழக்குகிறோம்..
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமி இது ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ
தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ
பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமிது
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமிது..
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ
சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவின்று புதிய இந்தியா
சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமி இது
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
RajaRajeshwari Jaghamani
http://jaghamani.blogspot.com/
நிறைவான நன்றிகள்.!