நாட்டுக்குப் பெருமை சேர்த்த நவமணிகள்!

-சு. ரவி

நாமின்று சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க, இந்தியன் என்று பெருமைகொள்ளக் காரணமானவர்கள் எத்தனையோ மஹானுபாவர்கள். அவர்களனைவருக்கும் வந்தனைசெய்து, இந்த இனிய சுதந்திர தினத்தில், நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்த சிலரை நினைவுகூர்ந்து என் ஓவிய அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!

1. மஹாத்மா காந்தியடிகள்:

 எத்தனைமுறை வரைந்தாலும், வசீகரம் மாறாத கிழவர். சிந்தனையாளர் ஓஷோகூறியதுபோலப் பலகோடிமக்களின் மனங்களை violent-ஆகப் பாதித்த  Non Violent தலைவர்; இவரில்லையேல் சுதந்திரதினம் ஏது?

gandi

 2.  தாதாபாய் நௌரோஜி

காந்தியடிகள், பாலகங்காதரர், கோகலேபோன்ற தேசத் தலைவர்களுக்கு  Mentor. Indian National Congress-ஐத்தோற்றுவித்த தலைவர். இங்கிலாந்தின் மக்களவையில் பிரதிநிதித்துவம் பெற்ற முதல்ஆசியர். காந்தியடிகளாலும், திலகராலும் பெரிதும் மதிக்கப்பெற்ற தேசியத்தலைவர்.

Mahatma Gandhi wrote to Naoroji in a letter of 1894 that “The Indians look up to you as children to the father. Such is really the feeling here.”[15]

 nowroji

 Bal Gangadhar Tilak admired him;

If we twenty eight crore of Indians were entitled to send only one member to the British parliament, there is no doubt that we would have elected Dadabhai Naoroji unanimously to grace that post.

3. மௌலானா அபுல்கலாம் ஆஸாத்

இந்தியா பெற்றெடுத்த மிகச்சிறந்த கல்விமான். காந்தியடிகளோடு சுதந்திரப்போராட்டத்தில் தோளோடு தோள்நின்று, ரௌலட் சட்டஎதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் எனப் போர்க்கொடி ஏந்தியவர். பாகிஸ்தான் பிரிவினை கூடாது என்று விரும்பியவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட தலைவர்.

moulana azad 

4. லோகமான்ய திலகர்:

“சுதந்திரம் எனது பிறப்புரிமை” என முழங்கிய மராட்டியச் சிங்கம். இவரது கர்ஜனைக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் அஞ்சி நடுங்கியது. மராட்டிய மண்ணில் விநாயகர் வழிபாட்டை முன்னிலைப்படுத்தி தேசவிடுதலைக்கு மக்கள் சக்தியைத் திரட்டிய மஹான். தென்னகத்தில் தீவிர சுதந்திரப் போராளிகளுக்கு, ” திலக முனிவர்” என்று ஆதர்ஸமாக விளங்கிய தலைவர். கீதா ரஹஸ்யம் என்ற இணையிலாத பகவத் கீதை விளக்க நூலின் ஆசிரியர்.

tilakar

5. மஹான்அரவிந்தர்

வங்கம் தந்த சிங்கங்களில் சற்றேவித்தியாசமான பரிணாமம் இவர். அதி தீவிரவாதியான அரவிந்த கோஷ், அலிப்புர் சிறையில் ஆன்மதரிசனம் பெற்று யோகியாக, ரிஷியாக,  கவிஞராக, மஹானாக மலர்ந்து புதுச்சேரியில் வாசம் கொண்டவர். ” My infinite faith starts at the very same Horizon where your finite reasoning ends” என்று தன் ஆன்மிகத்தின் அளவிடமுடியாத தன்மையை உணர்த்தியவர்.

மோகத்  திரைவிலக்கி  மோனப்  புனலமிழ்த்தி
யோகச்  சுடரெனக்குள்  ஏற்றிவிடு –  போகம்
தருமிந்த  வாழ்வை  நெறிப்படுத்தி  நெஞ்சை
அரவிந்தப் பொய்கையாக் கு!”

aravindar

6. ரவீந்திரநாத் தாகூர்

இவரொரு வங்கக் கவிமணி. இசையையும், கவிதையையும் காதலித்த வங்கத்துப் பாரதி. இலக்கியத்துக்கான நொபெல்பரிசு பெற்று, இந்தியாவின் கவிதை மேன்மையை உலகுக்குக் காட்டிய மாகவிஞன். தனது வங்கப்பத்திரிகையில் தமிழ்த்தாத்தா திரு. உ.வே.சா. அவர்களைப் புகழ்ந்து  பாராட்டிக் கவியாரம் சூட்டிய பெருமகன். இரண்டு நாடுகளின் தேசிய கீதத்துக்குச் சொந்தக்காரர்.

“சங்கஇலக்கியம்போல்வங்கஇலக்கியத்தைத்
தங்கமலராக்கித்தரணியிலே- எங்கும்
மணம்வீசவைத்தாய்மாமுனியேவாழ்க
கணந்தோறும்உந்தன்கவி”.

tagore

7. மஹாகவி சுப்ரமண்ய பாரதி

எங்கள் எட்டயபுரத்து எரிமலை.கவிதை, கதை, கட்டுரை, அரசியல், ஆன்மிகம், பத்திரிகைத் துறை எனப் பன்முகம் கொண்டு தமது கவிதைகளால் சுதந்திரக் கனலை மூட்டி வளர்த்தவன். தமிழ்க் கவிதைக்குப் புதுரத்தம் பாய்ச்சிப்  புத்துயிர் கொடுத்தவன்.

”கடவுளிடம்வரம்கேட்டபோதும்கூடக்
           கைகட்டிக் கேட்காத தன்மா னத்தன்
இடர்களையும், தடைகளையும் இமைப்போதில் தன்
           இடர்களையும் கவிதைகளால் தகர்க்க வல்லான்
சுடர்கின்ற சொற்களுக்குச் சொந்தக் காரன்
          ஸ்வரங்களிலே கவிதொடுத்த பாட்டுக்காரன் 
மடமைகளும், பழமைகளும் மலிந்த நாட்டை  
          மலர்வனமாய்  மாற்ற வந்ததோட்டக் காரன்!”

barati

8. விஸ்வேஸ்வரய்யா

நூறாண்டுகாலம் வாழ்ந்த, இந்தியப் பொறியியல் வல்லுநர். மைசூர் (இன்றையகர்நாடக) மாநிலத்தை உருவாக்கிய சிற்பி. அவரது காலத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரியதான ‘கிருஷ்ணராஜசாகர்’ அணைக்கட்டை மாண்ட்யாவில் கட்டிச் சாதனை புரிந்த பொறியியல் மேதை. இந்தியாவில் பொதுப்பணித்துறை இவரால் பெருமைபெற்றது. ’பாரதரத்னா’விருதுபெற்ற இவரது பிறந்ததினமான SEP 15  நம் நாட்டின் “பொறியியலாளர் தினமாக”க்கொண்டாடப்படுகிறது.

visvesvaraiya

 9. ஜகதீச சந்திரபோஸ்

கணிதம், இயல்பியல், தாவரவியல், மின்னணுவியல், விஞ்ஞானக்கதை புனைவு, கவிதை எனப் பலதுறைகளில் வல்லமையாளராகத் திகழ்ந்தவர் ஜகதீசர். ஆச்சார்ய ஜகதீசர் என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டவர்.

வாடியபயிரைக் கண்டு வள்ளலார் வாடினார்.; ஆச்சார்யஜகதீசரோ, தாவரங்களின் உணர்வுகளை விஞ்ஞானரீதியாகத் துல்லியமாக அளந்துகாட்டினார். தாவரங்களும் வலியைஉணரும், நேசத்தில்நெகிழும்; வெம்மை, தண்மை, அழுத்தம்போன்ற External stimuliகளுக்கு அவை வெறும் Chemical reaction தருவதில்லை. வலி, வேதனை, மகிழ்ச்சி, நட்பு என்ற உயிர்த்துடிப்புள்ள உணர்வுகளையே வெளிப்படுத்துகின்றன என்று உலகுக்குக்காட்டிய ஒப்பற்ற விஞ்ஞானி.

நுண்ணலைகளின் இயல்பு பற்றிய இவரது ஆய்வுகள், Semiconductor பயன்பாடு இவை இன்றைய மின்னணு இயல் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன. 1896-இல், “நிருத்தேஷ்வர்கஹினி” என்ற இவர்தம் படைப்பே வங்க இலக்கியத்தின் முதல் விஞ்ஞானக் கதையாகும்.

chandra bose

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *