சுயமும் சுதந்திரமும்..

சாந்தி மாரியப்பன் 

கூண்டுக்கு வெளியே

பெருங்காடொன்று இருக்கும்

என்றெண்ணி,

சுதந்திரமாய் வாழும் கனவில்

தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..

காடாய்க்கிடந்த

நிலமெல்லாம்

மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,

மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு

தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,

தும்பிக்’கையை’ நீட்டியது யானையொன்று..

பழக்கதோஷத்தில்…

யானையே

பூனையாய் அடங்கிய இடத்தில்,

அடையாளங்களை இழந்து

கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,

சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்

சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,

கூண்டுக்குள் ஓடி

இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..

சுதந்திரமில்லாத சுயமும்

சுயமில்லாத சுதந்திரமும்

கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..

படத்துக்கு நன்றி..

3 thoughts on “சுயமும் சுதந்திரமும்..

  1. ”,நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்”
    ”இக்கரைக்கு அக்கறை பச்சை ,,’
    ”மக்கள் சுதந்திரத்தின் ,இன்றையநிலை ,,மரங்கள் மறைந்து ,மாடிகள்,விதைத்த ,மாய மனிதர்கள் ,மக்கள் போய் ,மாக்களாக,மாறிய உண்மையின்
    வெளிப்பாடு ,கட்டுப்பாடு அல்லாத சுயமான ,நிம்மதி கலந்த அனந்த வாழ்கை ,உங்கள் மனதின் ஏக்கத்தில் ,எழுந்த ஒரு சிறு ”பொறி ,உங்கள் கவிதையில் ,ஜுவாலையாக ,பற்றி எறிந்த,அந்த ,,அனல்,என்னை ,,தாக்கியதால்,வந்த வேர்வை துளிகளாக ,என் ,வரி(குதிரை ) கள் …
    **** தேவா

  2. கொத்தடிமைகளாய் இருக்கும் பல பெண்கள், ஏன் அவ்விதம் கணவனுக்கும், மாமியார், மாமனாருக்கும் அடங்கி சேவகம் புரிந்து, சுயம் இழந்து வாழ்கிறார்கள் என்ற என்னுடைய நெடுநாள் கேள்விக்கு, இந்த கவிதை விடை சொல்லியது…கருத்தாழம் மிக்க கவிதை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *