பாரதக்கொடி
பாரதக்கொடி
சந்திர சேகர்
ஒற்றுமையாய் பணிவோம் – தாயின்
ஓங்கும் மணிக்கொடியை
வெற்றிகள் கூறிடுவோம் – சுற்றி
வீர நடம் புரிவோம்
செம்பசும் வெண்கொடியே – ஆன்ம
செல்வத் திருக்கொடியே
அன்பறம் உண்மை வளர் – சக்கரம்
அணி செயும் கொடியே
சூரிய சந்திரர்க்கும் – நமதிசை
சொல்லிப் பறக்குது பார்
பாரிலிதன் பெருமை – எங்கும்
பரவத் தொண்டு செய்வோம்
இந்த உடலினிலே – ஒரு துளி
இரத்தம் உள்ள மட்டும்
எந்தாய் வாழ்க வென்றே – இதனை
ஏந்திப்பிடித்திடுவோம்.
நல்லதை ஆதரிப்போம் – தீமை
நலியப் போர் புரிவோம்
எல்லாரும் இன்புறவே மணிக்கொடி
ஏற்றிப்பணிந்திடுவோம்.
——- கவியோகி சுத்தானந்தர்
‘…நல்லதை ஆதரிப்போம் – தீமை
நலியப் போர் புரிவோம்…’
~என்றன்று கவியோகி சுத்தானந்தர் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார். இனி,கடமை நமது.
நன்றி சந்திரா.
’வல்லமை’யின் வாசகர்களிடம் நான் மன்னிப்பு வேண்டுகிறேன்! இது நான் செய்த தவறு!