வெ.சுப்பிரமணியன் ஓம்.

கலியுகம் பற்றிய பதிவு  .

கலியில் ஒழுக்கக்குறைவு, பின்னடைவு உண்டாகும் என்பர்.

பாண்டவர்களின் மூத்தவரான தருமர் ஒருநாள் அரண்மனையில் தம்பியர்களுடன் அமர்ந்து உண்ணக் காத்திருந்தார். நேரம் செல்லச்செல்ல ஒருவரும் வரவில்லை. அவர்களை அழைத்துவர பணியாள் ஒருவரை அனுப்பினார்.. அவன் சென்று வந்து தகவல் தெரிவித்தான்.  அழகிய குதிரை ஒன்று  திடலில் உள்ளது. கரிய நிறத்தில் ஒருவன் அந்தக் குதிரையின் உரிமையாளன்.. தரையில் வட்ட வடிவில் கோடுகள் கிழிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்தினுள்ளும்  இளவல்கள் நிற்கின்றனர். மன்னர் அழைத்ததாகக் கூறியபோது அந்த குதிரைக்காரன் ;’அவர்கள் பேசமாட்டார்கள் என்னிடம் அடிமைப்பட்டுள்ளார்கள் ’ என்கிறான். நான் பரிதவித்து ஓடிவந்தேன், என்றான்.

அங்கு விரைந்தார் தருமர்.. குதிரைக்காரனிடம் விவரம் கேட்டார்.

தான் கூறிய கேள்விகளுக்குத் தக்க பதில அளித்தால், தம்பியரை விடுவிப்பதுடன் குதிரையையும் தருகிறேன் என்றான்.

அவன் கேள்விகளைக் கேட்டான்

(1) நான் வரும் வழியில் உங்கள் நாட்டு எல்லையினை ஒட்டி ஒரு கிணற்றைப் பார்த்தேன்.  அதன் கைப்பிடிச்சுவர் விளிம்பில் துருப்பிடித்த கடப்பாறைக் கம்பி  ஒன்று தொங்கும் நிலையில் உள்ளது. அதன் நுனியில் ஒரு தங்கக் காசு உள்ளது. கிணற்றில் நீரில்லை வறண்டிருக்கிறது.

இதன் பொருள் என்ன?

தருமர் பதில் சொன்னார், மக்களின் மனோ நிலை மிகவும் மாறியுள்ளது. அரும் பெரும் சாதனையாளர்கள் மனோ வியாகூலத்துடன் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தூஷிப்பதும், அவமரியாதை செய்வதும் இயல்பாக மாறி வருகிறது. இது மிகவும் கவலை தருகிறது என்றார்

குதிரைக்காரன் அருச்சுனனை வட்டத்தினின்றும் வெளி வரச்செய்தான்.

(2)ஒரு பசுவினைக் கண்டேன். அதன் கன்று அருகே துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றது. அந்தப் பசுவின் மடுவில் வாய்வைத்து பசுவின் தாயான கிழட்டுப் பசு பால் குடித்துக் கொண்டிருக்கின்றது..அதைக் கன்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இது ஏன்?

தருமர் சொன்னார்: அறவழி செல்லும் மக்கள் குறைந்து வருகிறார்கள்.. காலத்தினால் ஏற்பட்ட வடுவோ? உறவுகள் மாறி நெறி மாறி வருகிறது. சிற்றின்ப வேட்கை மிகுந்து தவறாக நடந்து கொள்கின்றார்கள். தன் இன்பத்திற்காக, உணவிற்காக குழந்தையைக்கூட விற்கத் தயாராக சிலர் உள்ளார்கள். இதனைத்தான் இது சூசகமாகத் தெரிவிகின்றது. என்றார்.

பீமனை கீறிய வட்டத்தினின்றும் வெளிவச்ரச் சொன்னான், குதிரைக்காரன்.

(3) வருகையில் ஒரு வினோதமான பிராணியைப் பார்த்தேன். அது உணவு உண்ணும் வாயால் உடல் கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தது.  மல வாயினால் உணவு உட்கொண்டிருந்தது. அது ஏன்?

தருமர் சொன்னார், இதுவும் ஒரு அவல நிலைதான். வெறுத்து ஒதுக்க வேண்டிய தீய செயல்களை விரும்பிச் செய்வதும், ஆற்றவேண்டிய சீரான கருமங்களை கடைப்பிடிக்கத் தயங்குவதும் மிகுந்து வருகின்றன. தான் தோன்றித்தனமாக ஆராயாமல் கருமம் செய்யத் தலைப்பட்டு வாழ் நாட்களை வீணாக்குகின்றார்கள். எடுத்துரைக்கும் சான்றோரைப் பழிக்கிறார்கள், என்றார்

மற்ற தம்பியரையும் விடுவித்த குதிரைக்காரன் தருமரை வணங்கி தான் கலி புருஷன் என்றும் மக்கள் எளிமையாக இன்பம் பெற முயல்வதும் தீயவை பரவுவதும் , ஒழுக்கச் சீர்கேடும் சம்பவிக்கும் காலம் உருவாக்கும் என்று சொல்லி மறைந்தான்.

-=-=-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *