பொங்கலிது பொங்கல்…

 

பொருநைநதிக் கரைநிறைநெற் கதிரே,

பொதிகைமலைத் தென்றல்தொடும் கரும்பே,

இருகரையும் வரப்பில்வளர் மஞ்சளே,

இஞ்சியதாய்க் கொல்லைநிறைக் கொத்தே,

திருவளர்க்கும் வயல்வாழைக் குலையே,

தைத்திங்கள் முதல்நாளில் வாரீர்,

இருளகற்றும் கதிரோன்தன் பொங்கல்,

இதைவணங்கி இன்பமெல்லாம் பெறுவோம்…!

 

போகியதில் பழையவற்றைப் போக்கி,

பொங்கலெனப் புத்தரிசி பொங்கி,

கோகுலத்து ஆநிரைக்கும் படைத்து,

குதூகலமாய்க் காணுபொங்கல் களித்து,

பாகுவரக் கரும்பதனைக் கடித்து,

பக்குவமாய்ப் பொங்கலினைச் சுவைத்து,

பாகுபாடு ஏதுமின்றி மகிழ்வோம்

பாடிடுவோம் பொங்கலிது பொங்கல்…!

 

-செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *