படைப்போம் பொங்கல்!
கழனிகள் களர்நிலங்களாகின்றன
கட்டிடங்கள் வளர்ந்து..
கலப்பையை மறந்து உழவன்
கையிலெடுத்துவிட்டான்
கரண்டியும் முழக்கோலும்..
மந்தையாய்ச் செல்கின்றன
மாடுகள்- அடிமாடாய்..
கரும்பு,
கணுக் கணுவாய்க்
காட்சிப் பொருளாகிவிட்டது..
இஞ்சியும் மஞ்சளும்
பஞ்சமாகிவிட்டது-
பார்வைக்குத்தான் வரும்
பொருட்காட்சிசாலையில்..
இருக்கும் தென்னைகளில்
ஏறிக் காய்பறிக்க
எவருமில்லை..
எல்லாம் இருக்கிறது
கூகுளில்,
கண்ணால் பார்த்து
படைப்போம் பொங்கலைக்
கணினிக்கே…!
படத்துக்கு நன்றி
http://www.amazon.co.uk/Individual-Pongal-Recipes/dp/B00HEDFQPU