ராஜி வெங்கட்

பொங்கும் மங்களம்
தங்கிடவே மண்ணில்
எங்கும் விளைந்திடவே
அங்கு வளர்நெல் சிரித்திடவே

அன்னைபூமி தந்த வாழ்வில்
மண்ணைப் போற்றி மகிழ்ந்து
தன்னுயிர் உழைப்பை ஈந்த
கண்ணைப் போன்ற உழவர்களை
ஏற்றுவோம் நாம் போற்றுவோம்

உழவர் பூமி உயர்ந்த பூமி
உன்னத தாய்மையின்
உயர்ந்த செல்வர்களாம் உழவர்களைப்
போற்றுவோம் நாம் ஏற்றுவோம்

உமியை உதிர்த்து சிரிக்கும் அரிசி
உகந்த பானையில் நீருடன்
உலையில் பொங்கி அன்னமாய்
உருவாகி உயிர் வளர்க்க, உழவர்களைப்
போற்றுவோம் நாம் ஏற்றுவோம்.

 

படத்திற்கு நன்றி: http://www.auroville.org/environment/villages/festivals_pongal.htm 

1 thought on “உன்னத உழவர்கள்

  1. சர்க்கரைப் பொங்கலாய் இனிக்கும் கவிதை.
    உழவர்கள் என்றுமே உன்னதமானவர்களே!

    இனிய மகரசங்க்ராந்தி + கணு நல் வாழ்த்துகள்!
    அன்புடன் vgk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *