புதிதாய் ஒர் அதிகாரம் ;

0

துரை.ந.உ

எங்கள் உலகம்:

படித்தேன் அவளின் மடலை; அடைந்தேன்

படித்தேன் குடித்த உணர்வு                                                                1

 

நெஞ்சமெங்கோ பெண்பின் அலைந்திருக்க; கொல்லுமிங்கே

கொஞ்சமே மீந்த நினைவு                                                                 2

 

பொழுதெல்லாம் என்னுள் விழுதாகிப் பூப்பாள்;

பழுதாகிப் போகும் மனது                                                                   3

 

குளித்தவளைக் கண்டேன்; குழித்தவளை ஆனேன்;

வளியெல்லாம் எந்தனிசைப் பாட்டு                                                4

 

மொய்க்கும்உன் கண்ணுக்(கு) இணையில்லை; இவ்வுலகை

மொய்யெழுதி வைப்பேன் அதற்கு                                                    5

 

நாட்டு நடப்பு :

தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்

தோழ்தாளத் தொங்குபவன் வேறு                                                     6

 

நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ

எல்லையெல்லாம் இல்லை உனக்கு                                                  7

 

முயலா முயலுக்கு முன்செல்லும் ஆமை;

இயலும் வரையில் முயல்                                                                8

 

முயல்பவரை முன்மொழியும் வெற்றி;   தயங்குபவர்

பின்னால் ஒளியும் அது                                                                       9

 

தாகம் குடியிருக்கும் பாகத்தில் பெய்யும்

மழைக்குத்தான் உண்டாம் மதிப்பு                                                   10


 இனியொரு விதி செய்வோம்

                 – ”இனியாவது செய்வோம்” –
                                     
                           .துரை.ந.உ         

குறள்……..: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/

வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/

ஹைகூ   : ‘வானம் வசப்படும்’ : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : ‘வல்லமை தாராயோ’ : http://duraipathivukal.blogspot.com
கதை        : ‘நானோ கனவுகள்’ :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:‘தமிழ்த்தென்றல்’:http://groups.google.co.in/group/thamizhthendral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *