சமாதான விடியல்
மு.முருகேஷ்
வியர்வை பிசுபிசுக்க..
காய்ந்த நெல் வயல்
மழைத் தூறலால் சடசடக்க…
பசித்த உழவு மாடுகள்
விதை விழ வழி வகுக்க…
வட்டிக்கு வாங்கிய
காசெல்லாம் உரமாக…
வெயிலே ஆடையாய்…
மர நிழலே போர்வையாய்…
நித்தம் நித்தம்
நிற்காது உழைத்து…
விதைத்ததை அறுத்து,
அறுத்ததைக் குவித்து…
கடனெல்லாம்
மூட்டைகளாய் கரைந்தோட…
மீதமுள்ள ஒத்த மூட்டையில்
தலை சாய்த்துப் படுத்து,
அடுத்த அறுவடையில்
எடுத்து விடலாம் புத்தாடையென
சமாதானத்துடன்
விடியப் போகிறது…
விவசாயிகளின்
பொங்கல் திருநாள்.
படத்திற்கு நன்றி: http://adrishta.com/?p=1993