இயற்கை விவசாயம்
ஜெ.ராஜ்குமார்
வேதிப் பொருளை கொண்டு-
உயிரைப் பறிக்க இருக்கு.
நடுக்கம் வருது – காய்கறி மார்கெட்டில்
எந்தப் பொருளையும் பொறுக்கும் போதே..
நியாயம் இங்கு செத்துப்போச்சு
அநியாயம் இங்கு விளைஞ்சிருச்சு..
பாடுபட்டு விளைத்த பொருளெல்லாம்
மனிதன் உயிரில்-
கேடுகெட்டு விளையாடுது..
தேடிப் பார்க்க முடியவில்லை – இன்று
தேடும் பொருள் எதிலும் கிடைக்கவில்லை..
நாடு என்று திருந்திடுமோ..
நல்ல காற்று என்று வீசிடுமோ..
இயற்கை விவசாயம் ஒன்றே
இருக்க வேண்டும் என்று-
அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருவோம்..
விதையைப் புதைக்கும்போதே – தீய
எண்ணங்களையும் புதைத்திடுவோம்..
விதிமுறைப்படி நடந்திடுவோம்
இனியாவது
வில்லங்கம் வராமல் தடுத்திடுவோம்..
வேர்கள் மரத்தைத் தாங்குவதுபோல் – உங்கள்
கொள்கைகள்
காத்திடும் – உங்கள் எதிர்காலத்தை.!
படத்திற்கு நன்றி: http://www.pongalfestival.org/pongal-pictures.html