இனிய பொங்கல் திருநாள் – சூரிய காயத்ரி
ராஜராஜேஸ்வரி
அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ:சூர்ய பிரசோதயாத்
சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும்.
மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று.
யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும்!
தரணியிலே ஒளி பிறக்கும்!
தை மகளின் வருகையிலே,
பரணி சொல்லும் வழி பிறக்கும்!
மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்பது “பொங்கு” என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள்.
சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். அதைப் பார்த்துத்தான் பாரதி ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாடியிருக்க வேண்டும்.
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்க வேண்டும் என்ற சிந்தனையைத் தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கல ஒலியாகக் குலவையிட்டுப் பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித் ததும்பும் விழா. கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும், அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்‘என்று சூரியனைப் பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு.
பொங்தித் தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத் திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.
பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்.
தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.”இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. பழயன கழிந்து புதியன புகுதலே தை பொங்கலின தாத்பர்யம் போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ.
“தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.. பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.
பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்.
கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும்,
அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர்.
பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான். விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்.
தைமாச பல்லாக்கில்
வருகிறது தித்திக்கும் திருவிழா
உள்ளங்கள் பொங்கி வழிய
பொங்கல் திருவிழா
வாழ்விற்கு வசந்தம் சேர்த்த
மகுடம் சூட்டி மகிழ்ந்த
பூமித் தாயே பெருமிதம்கொள்
பண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
திங்கள் பார்த்து பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .
//பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .//
மிகவும் அருமையான பதிவு.
இனிய மகர சங்க்ராந்தி+கணு வாழ்த்துக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் says:
January 11, 2012 at 4:46 pm
//பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .//
மிகவும் அருமையான பதிவு.
இனிய மகர சங்க்ராந்தி+கணு வாழ்த்துக்கள்./
இனிய வாழ்த்துகளுகளுக்கு நன்றி ஐயா..
தங்களுக்கும் இனிய இல்லத்தாருக்கும் இனிய மகர சங்க்ராந்தி+கணு வாழ்த்துக்கள்.
//பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்.//
//கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும்,
அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.//
கட்டிக்கரும்பாய் அடிக்கரும்பாய் இனிக்கும் ஆகிய வரிகள். பாராட்டுக்கள்.
கட்டிக்கரும்பாய் அடிக்கரும்பாய் இனிக்கும் ஆகிய வரிகள். பாராட்டுக்கள்.//
அழகிய பாராட்டுகளுக்கு நன்றி ஐயா..