வருவாய்.. தருவாய்… ஒளிர்வாய்….!

தி.சுபாஷிணி

மார்கழி மயங்கி தைதன்
மலர்விழி மெல்லவே மலர
மன்பதை யல்லாம் ஒளிவெள்ளம்
மலர்ந்தன உயிரோட்டம்
ஓங்கின ஞாயிறின் அறிவூட்டம்
தங்கிருள் அனைத்து ஒருமுத்தம்
தங்கேன் இனியென அறியாமை ஓட்டம்
வங்கம் விழுங்கிய வாநீர்
வற்றா நதியாய் நீரோட்டம்
வள்ளல் வழங்கு பயிர்நீட்டம்
வருஞாயிறின் ஒளி வெப்பம்
தரும் ஆற்றல் ஆயிரம் ஆயிரம்
வருடும் வளி மனதின் இன்பம்
வழி தோன்றும் ஆண்பெண்
உறவின் உயிரோட்டம்
உன்னத உணர்வோட்டம்
உகந்தது விழாக்காலம்
உவப்பது கொண்டாட்டம்
வரவேற்போம் தைமகளே1
வருவாய்.. வருவாய்..
தருவாய் நலம்யாவும்
பொங்கி வழிந்திட
ஒளிர்வாய்..ஒளிர்வாய்..
இவ்வையகத்தே!

 

படத்திற்கு நன்றி : http://www.99desi.com/orkut/pongal/

 

 

Leave a Reply

Your email address will not be published.