செழியன்

இனியவர்களே !
இன்று …
பொங்கல் திருநாள் !
புதுப்பானையில்
பச்சரிசியும் -பாலும்
வெல்லமும் சேர்த்து
இல்லத்தில் பொங்கல் பொங்கட்டும் !

மஞ்சளின் மங்களமும்
கரும்பின் இனிப்பும்
இல்லத்தில் தங்கட்டும் !

நாட்டில் ..
தீவீரவாதமும் -மதவாதமும் தீரட்டும் .
மனித நேயம் மலரட்டும் ! மணக்கட்டும் !

இன்று தை முதல்நாள் .
கடந்ததை கருத்தில் கொண்டால்
கடப்பதை களிப்பாக்கலாம் !
சென்றதை நினைவில் நிறுத்தினால்
வருவதை நிறைவாக்கலாம் !
வாழ்ந்ததை நினைத்திருந்தால்
வாழ்வதை வளமாக்கலாம் !……..என
இத்தை யில்
நம் சிந்தை யில்
செய்வீர் உறுதி
செயல் படுவீர் நலம் கருதி
வாழ்க …வளமுடன் .

மனசெல்லாம் மகிழ்ச்சியுடன்
செழியன்
* மகிழ்ச்சியாய் இரு ! மற்றவர்களை மகிழ்ச்சியாக்கி !!*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *