தமிழாய் முழங்குவோம்! தமிழராய் விளங்குவோம்!
ஜெ.ராஜ்குமார்
தமிழ் வளர்க்கும் – தரணி
தமிழ் மக்கள்!
தாய் தந்தையரை காக்கும் – திறனைக் கொண்ட
மாமக்கள்!
செந்தமிழ்த் தேன்
சிந்தாமல் சிதறாமல் அதைப் பருக
செந்தூர மலர் மொட்டும் பூத்திடுமே!
சின்னதொரு பேனா முள்ளும் – இடைவிடா
நடனமாடி தமிழ் மலரும்!
விண்ணின் நட்சத்திரங்களும்
தமிழ் மெய் எழுத்துக்களில் வந்தமரத் துடிக்கும்!
மண்ணின் மைந்தர் எல்லாம்
தமிழ் உயிர்மெய் எழுத்துக்களாய் மாறிவந்து
வாழ்வின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து
நீங்காத புகழுடன்
தாங்கி நிற்பர்
தமிழன் எனும் உயிர்மூச்சிலே…!
கண்ணின் மணியெனக் காப்பீரே – தமிழ்
மண்ணின் பெருமை எங்கும் உரைப்பீரே…!
பெண்ணின் பெருமை வளர்த்த – பாரதியின்
பாக்களை அருமையுடன் பாடுவீரே…!
உண்மையை நமக்கு உணர்த்திடும் – வள்ளுவனின்
திருக்குறளை நாளும் படிப்பீரே…!
வன்மை ஒழித்திடவே
நன்மை செழித்திடவே
தமிழ்ச் சங்கம் வளர்த்து
நாளும் –
தமிழாய் முழங்குவோம்!
தரணி முழுதும் தமிழ் கேட்டிட
நலமுடன்
தமிழராய் விளங்குவோம்!
படத்திற்கு நன்றி : http://eluthu.com/kavithai/36621.html