பொங்கல் பள்ளு
தேமொழி
.gif)
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்தப் பொங்கல் நாள் வந்ததென்றே
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
செந்தமிழ்ப் புலவன் பாரதி போலொரு பள்ளு
செங்கதிர் போற்றிப் பாடிடுவோம் ஒரு பள்ளு
செம்மணி நெல்லறுத்துப் பாடுவோமே
உழவுக்கு வந்தனை செய்தொரு பள்ளு
தொழிலுக்கும் வந்தனை செய்தொரு பள்ளு
கரும்பொத்த இனிமைக்கூட்டிப் பாடுவோமே
நன்றி போற்றி காளைக்கொரு பள்ளு
நலம் வாழ்த்தி மாரிக்கொரு பள்ளு
மஞ்சள் கிழங்களித்துப் பாடுவோமே
சர்க்கரைப் பொங்கல் பொங்கியொரு பள்ளு
சதிராடும் குழந்தைகளுடன் ஒரு பள்ளு
மலர்தூவி தமிழர் நலம் போற்றிப் பாடுவோமே
பொங்குக மங்கலமென்றொரு பள்ளு
புத்தாடை அணிந்தொரு பள்ளு
பொங்கலோ பொங்கலென்று பாடுவோமே
படம் உதவி: துரை அவர்களுக்கு நன்றி, http://duraigif.blogspot.com/2014/01/blog-post_13.html