Category: காணொலி

  • பொங்கல் கோலங்கள் 2022

    பொங்கல் கோலங்கள் 2022

    பொங்கல் பண்டிகை அன்று, தமிழக வீதிகளை அலங்கரித்த விதவிதமான, வண்ணமயமான, தூள்கிளப்பிய கோலங்களின் அணிவகுப்பு இதோ. கண்டு மகிழுங்கள்.

    வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கல்வியியலில் இணையத்தின் ஆளுமை | அண்ணாகண்ணன் உரை

    கல்வியியலில் இணையத்தின் ஆளுமை | அண்ணாகண்ணன் உரை

    அமெரிக்காவின் தமிழ் அநிதம் அமைப்பும் வல்லமை மின்னிதழும் மேலும் 14 அமைப்புகளும் இணைந்து, 2021 டிசம்பரில் பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தின. கல்வியியலில் இணையத்தின் ஆளுமை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த இணையவழி மாநாட்டில், இரண்டு நாள்கள் பேராளர்கள் பலரும் தங்கள் கட்டுரைகளை வழங்கினர். இதன் நிறைவு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிற்றஞ் சிறுகாலே | ஆண்டாள் | நாகி நாராயணன்

    சிற்றஞ் சிறுகாலே | ஆண்டாள் | நாகி நாராயணன்

    திறமைக்கு வயது ஒரு தடையில்லை. இதோ, ஆண்டாளின் சிற்றஞ் சிறுகாலே பாடலை, தமது 67ஆவது வயதில் கணீரென்று பாடுகிறார், நாகி நாராயணன். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாராயணா ஸ்ரீமன் நாராயணா | நாகி நாராயணன்

    நாராயணா ஸ்ரீமன் நாராயணா | நாகி நாராயணன்

    வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, நாகி நாராயணன் இயற்றி, இசையமைத்துப் பாடிய ‘நாராயணா ஸ்ரீமன் நாராயணா’. ராகம் கல்யாணி.

    வைகுண்டஏகாதசி, வைகுந்தஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, வைகுந்த ஏகாதசி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிற்றஞ் சிறுகாலே | வி.ஸ்ரீநிகா

    சிற்றஞ் சிறுகாலே | வி.ஸ்ரீநிகா

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாம் கொண்டாடும் ஆண்டாள் அருளிய ‘சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தைச் செல்வி வி.ஸ்ரீநிகாவின் மழலைக் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையின் ஒரு கிராமத்துச் சாலை

    கோவையின் ஒரு கிராமத்துச் சாலை

    கோவையின் ஒரு கிராமத்துச் சாலையைப் பாருங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா வளாகத்திற்குச் சென்றுவிட்டு, கோயம்புத்தூருக்கு இரவு நேரத்தில் திரும்பினோம். நாங்கள் வந்த கிராமத்துச் சாலையைப் பார்த்து, இப்படி ஒரு சாலையா? என வியந்தேன். இதன் தரத்தை நீங்களும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி?

    மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி?

    நாளும் பொழுதும் செல்பேசியே கதி எனக் கிடக்கின்றனர் இளையோர். அதிலிருந்து கண்ணை அகற்றாமல் அதிலேயே மூழ்கி வருகின்றனர். இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மொபைல் போதையிலிருந்து குழந்தைகளை, சிறுவர்களை, வளரிளம் பருவத்தினரை மீட்பது எப்படி? நிர்மலா ராகவனின் அற்புதமான யோசனைகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 7 நட்சத்திர வெண்டை அறுவடை | 7 ஸ்டார் வெண்டை

    7 நட்சத்திர வெண்டை அறுவடை | 7 ஸ்டார் வெண்டை

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று 7 ஸ்டார் வெண்டை அறுவடை. இந்தப் பதிவின் இறுதியில் கேட்பது எந்தப் பறவையின் குரல் என்று தெரியுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கண்ணா வா | விஜயலட்சுமி

    கண்ணா வா | விஜயலட்சுமி

    ‘கண்ணா வா’ என்ற இனிய பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேப்பிலைக்கட்டி | நார்த்தை இலைப்பொடி

    வேப்பிலைக்கட்டி | நார்த்தை இலைப்பொடி

    எங்கள் தாத்தா வீட்டுத் தோட்டத்தில் நார்த்தை மரம் இருந்தது. முள் நிறைந்த மரம் அது. சிறு வயதில் அதிலிருந்து நார்த்தங்காய் பறித்து உண்டது உண்டு. இதற்கென்று அலக்கும் வைத்திருப்பார்கள். அந்த நார்த்தை இலைகளைப் பறித்து, நார்த்தை இலைப் பொடியும் செய்து வைப்பார்கள். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டால், அருமையாய் இருக்கும். இதற்கு வேப்பிலைக்கட்டி என்றும் பெயர் உண்டு.

    சுவையும் சத்தும் மணமும் நிறைந்த வேப்பிலைக்கட்டி என்கிற நார்த்தை இலைப்பொடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், திருமதி சரோஜா வெங்கட்ராமன். நீங்கள் இதைச் சாப்பிட்டிருக்கிறீர்களா? செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    தொகுப்பு – சுதா மாதவன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்முவும் அப்பாவும்

    அம்முவும் அப்பாவும்

    எங்கள் முதல் முயற்சி. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

    கரு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புளி இஞ்சி செய்முறை

    புளி இஞ்சி செய்முறை

    சுவை, சத்து, மணம் மிகுந்த, மிக எளிதில், விரைவில் செய்யக்கூடிய புளி இஞ்சி என்கிற இஞ்சி புளி செய்முறையை வழங்குகிறார் சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூக்குத்தி அவரை விதை வேணுமா?

    மூக்குத்தி அவரை விதை வேணுமா?

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் மூக்குத்தி அவரை விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேணுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

    பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

    பேஸ்புக், தினமும் ஆயிரத்தெட்டு அறிவிப்புகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்பதிலேயே நம் நேரம் பெருமளவு செலவாகிறது. இத்தகைய அறிவிப்புகளை முடக்குவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா வளாகம், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. அத்துடன் கலையெழில் மிளிரத் திகழ்கின்றது. கலையெழில் என்பது ஒரு வார்த்தையாகக் கொள்ளக் கூடாது. இந்த வளாகத்தில் வாய்ப்புள்ள ஒவ்வோர் அணுவிலும் துணுக்கிலும் கலையெழில் மிளிர்கின்றது. முகப்பு, மதில், கதவு, விதானம், நடைபாதை, சிலைகள், அறிவிப்புகள், அலங்காரம்… என ஒவ்வொன்றிலும் தனித்துவமான கலையெழில் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.

    கார்ப்பரேட் பாணியில் இந்த வளாகம் அமைந்திருந்தாலும், நல்ல திட்டமிடலும் செயல்திறனும் தொலைநோக்கும் பளிச்சிடுகின்றது. பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனி முத்திரையாக (Brand) முன்வைப்பதில் ஈஷா, ஆன்மீகத் துறையில் உள்ளோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

    இந்தியா முழுவதுமிருந்தும் இங்கே பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இது பரிணமித்து வருகிறது. இதோ ஈஷா வளாகத்தின் உள்ளே ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share