கல்வியியலில் இணையத்தின் ஆளுமை | அண்ணாகண்ணன் உரை

அமெரிக்காவின் தமிழ் அநிதம் அமைப்பும் வல்லமை மின்னிதழும் மேலும் 14 அமைப்புகளும் இணைந்து, 2021 டிசம்பரில் பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தின. கல்வியியலில் இணையத்தின் ஆளுமை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த இணையவழி மாநாட்டில், இரண்டு நாள்கள் பேராளர்கள் பலரும் தங்கள் கட்டுரைகளை வழங்கினர். இதன் நிறைவு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை இங்கே.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1 thought on “கல்வியியலில் இணையத்தின் ஆளுமை | அண்ணாகண்ணன் உரை

 1. வணக்கம்!
  வல்லமைக்கு வாழ்த்துக்கள்!
  செறிவான சுருக்கமான வாழ்த்துரை!
  பொதுவாக இலக்கியத் தமிழில் பேசுகிற வாழ்த்துரை மரபினைத் துணிச்சலுடன் மாற்றி வழக்குத் தமிழில் செய்யப்பட்ட இந்த வாழ்த்துரை போலிகளுக்கு ஒரு பாடம்!
  எதுவாயினும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்னும் துடிப்பே இதற்குக் காரணம்.
  ‘தாக்கம்’ என்பதற்கும் ‘ஆளுமை’ என்பதற்குமான வேறுபாட்டினை ஆசிரியர் சுட்டியதில் தெளிவு பிறக்கிறது!
  யூ டியூப் பற்றிய ஆசிரியரின் உறுதியான பார்வை பார்வையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன் தருவனவாகும்.
  சுருங்கச் சொன்னால் வல்லமை தலைமை ஆசிரியருக்கு மானுடச் சமுதாயத்தின் மேல் இருக்கும் பற்றினையும் அன்பினையும் காட்டுவதாக அமைந்த வாழ்த்துரை!
  சடங்காகவும் சம்பிரதாயமாகவும் நிகழும் வாழ்த்துரைகள் சில நேர்வுகளில் சிந்திக்க வைப்பதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்து விடுவது உண்டு.
  அத்தகைய சிலவற்றில் ஒரு நேர்வு இது!
  மாறா அன்புடன்
  ச.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published.