கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(349)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(349) உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து. – திருக்குறள் – 1032 (உழவு) புதுக் கவிதையில்... உழவெனும் உயர்தொழில் செய்ய மனமின்றி வேறு தொழில்கள் செய்ய, அவற்றைத் தேடியலைவோர் யாவரையும் தாங்குவதாலே, உழுபவரே உலகெனும் தேருக்கு அச்சாணியாவர்…! குறும்பாவில்... உழவின் உயர்வை அறியாமல் வேறுவேலை தேடி அலைவோரையும் தாங்குவதால், உழவரே உலகத்தார்க்கு அச்சாணி…! மரபுக் கவிதையில்... உயர்ந்த தொழிலாம் உழவதனின் உயர்வு தன்னை யறியாமல் முயன்று வேறு பணிதேடி முனைப்புட னலையும் மாந்தரையும் அயர்வே யிலாமல் ...

Read More »

அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா நினைத்ததும் அன்பு தருவாயா . முறுவலில் முத்தமருள்வாயா அம்மா மடியினில் இடம்தருவாயா ( ….) சுமையென யெனை நினைத்தாயா இல்லை சுகமென அகமகிழ்ந்தாயா வலியினில் யெனை ஈன்றாயா அன்றி கவியினில் தமிழ் கலந்தாயா (….) மதியினில் ஒளி கலந்தாயா என் மனதினில் அறம் பதித்தாயா இரவிலும் கண்விழித்தாயா நான் வரும்வரை புண்பொறுத்தாயா (…) குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு கிளியென மொழிபெயர்த்தாயா அமைதியை எனக்க ளித்தாயா தினம் ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…) நெறிமுறை தனைச் சமைத்தாயா ...

Read More »

குறளின் கதிர்களாய்…(348)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(348) ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை. – திருக்குறள் -1003 (நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்... பிறரை விடப் பொருளதிகம் சேர்க்கவேண்டுமென்று பொருள் சேர்ப்பதிலேயே பற்றுள்ளம் கொண்டு, புகழை விரும்பா மக்கள் பிறந்து வாழ்தல் பூமிக்குப் பெரும் பாரமே…! குறும்பாவில்... அதிகம் பொருள் சேர்க்கவேண்டுமென்று அதிலே பற்றுள்ளம் கொண்டு புகழ்விரும்பார் பிறப்பு, அகிலத்திற்கு அதிகமான பாரம்தான்…! மரபுக் கவிதையில்... அடுத்தவர் தம்மை விடவும்பொருள் அதிகம் சேர்த்திட வேண்டுமென்ற திடமது கொண்டே அதன்மீது தீராப் பற்றது கொண்டேதான் ...

Read More »

போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

எந்தச் சுப நிகழ்ச்சியிலும் பாடத்தக்க வகையில் நான் இயற்றிய ‘போற்றுவேன் போற்றுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ராகமாலிகையாக இசையமைத்துப் பாடியுள்ளார். கண்டும் கேட்டும் மகிழுங்கள். This is my first ‘lyric video’. போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேன் பூவென, பொன்னென போற்றுவேன் போற்றுவேன் பொலிவென, வலிவென போற்றுவேன் போற்றுவேன் தேனென, மின்னென போற்றுவேன் போற்றுவேன் வானென, மீனென போற்றுவேன் போற்றுவேன் அழகென, சுடரென போற்றுவேன் போற்றுவேன் அமுதென, வடிவென போற்றுவேன் போற்றுவேன் விடிவென, விடையென போற்றுவேன் போற்றுவேன் உலகென, உயிரென ...

Read More »

குறளின் கதிர்களாய்…(347)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(347) ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. – திருக்குறள் -985 (சான்றாண்மை) புதுக் கவிதையில்... செயலொன்றைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணியாற்றுபவர்களுடன் பணிந்தே வேலைவாங்குவதாகும்.. சான்றோர்க்கு அதுவே பகைவரையும் நண்பராக ஆக்கிவிடும் ஆயுதமாகும்…! குறும்பாவில்... தம்முடன் பணியாற்றுபவர்களுடன் பணிந்தே வேலைவாங்குதல்தான் செயலைச் செய்துமுடிப்போர் திறமை, பகைவரை நண்பராக்கச் சான்றோர்க் காயுதமுமது…! மரபுக் கவிதையில்... செயல தொன்றைத் திறம்படவே செய்து முடிப்போர் ஆற்றலது, செயலி லுடன்பணி செய்வோருடன் சேர்ந்தே பணிவுடன் வேலைவாங்கலே, உயர்ந்த பண்புடை சான்றோர்க்கே ...

Read More »

குறளின் கதிர்களாய்…(346)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(346) மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின். – திருக்குறள் – 280 (கூடாவொழுக்கம்) புதுக் கவிதையில்... உயர்ந்தோர் வெறுக்கும் உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை மனத்தால் ஒதுக்கிவிட்டால், தவத்தோர்க்குத் தாடி வளர்த்தல் மொட்டை போடுதல் போன்ற புறக்கோலம் எதுவும் தேவையில்லை…! குறும்பாவில்... உலகும் உயர்ந்தோரும் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் தவத்தோர்க்கு மொட்டை தாடி போன்ற புறவேடங்கள் வேண்டாம்…! மரபுக் கவிதையில்... உலகில் வாழும் மாந்தர்களும் உத்தம மான சான்றோரும் விலக்கிப் பழிக்கும் தீயொழுக்கம் விட்டு விட்ட தவத்தோர்க்குப் ...

Read More »

சித்திரைப் பெண்ணே வருக

சரஸ்வதி ராசேந்திரன் சித்திரைப்  பெண்ணே  வருக சிறப்பெல்லாம் அள்ளித் தருக சாதகம்   ஆக்கவே    வருக சாற்றிட   நற்செயல்    புரிக தீநோய்   தீர்த்திட   வருக திருத்தமாய்  நல்வழி   புரிக உறவுகள்   சிறந்திட  வழிசெய்க உள்ளம்  மகிழ்வுற  அருள்புரிக விளைபயிர்  காத்திட மழைதருக விலைபொருள் குறைய அருள்புரிக நசித்திட வேண்டும் வீணர்களை இசைத்திட வேண்டும் நல்வாழ்க்கை வாட்டிட வேண்டும் வறுமையினை வதைத்திட  வேண்டும் நோயினையே காத்திட  வேண்டும்  குழந்தைகளை கற்றிடப்  பள்ளிகள் திறந்திடவேண்டும் சித்திரப்    பெண்ணே    வருக சீக்கிரம்   சிறப்பை  அள்ளித்தருக ஊர்நலம்   கூடிட  வேண்டும் உறவுகள்  பலப்பட   வேண்டும்

Read More »

குறளின் கதிர்களாய்…(345)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(345) அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். – திருக்குறள் -443 (பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்... அறிவு மற்றும் ஒழுக்கங்களில் சிறந்த பெரியவர்களை, அவர்கள் விரும்புவனவற்றைத் தெரிந்து செய்து தமக்கு மிக உயர்ந்த துணைவராக்கிக் கொள்ளுதல், அரசர்க்குக் கிடைத்தற்கரிய பேறுகளில் மிகவும் அரியதான ஒன்றாகும்…! குறும்பாவில்... பெரியோர்கள் விரும்புவன தெரிந்துசெய்து அவர்களைத் தமக்கு உற்ற துணைவராக்கிக்கொள்ளுதல், அரசர்க்குப் பெறற்கரிய பேறுகளில் அரியதாம்…! மரபுக் கவிதையில்... அறிவுட னொழுக்கம் அனைத்திலுயர் ஆற்றல் மிக்கப் பெரியோரை, முறையா யவர்கள் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(344)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(344) தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர். – திருக்குறள் -464 (தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்... தமக்குத் தரக்குறைவு என்னும் குற்றம் வருவது குறித்து அஞ்சும் இயல்புடையோர், அமைச்சர்கள் ஆலோசனை பெற்றும் தாமும் ஆராய்ந்து என்ன பயனைத்தரும் என்பதைத் தெளிந்தறியாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்…! குறும்பாவில்... அவமானம் வருவது குறித்து அஞ்சும் இயல்புடையோர், தெளிவு இல்லாத செயலைச் செய்யத் தொடங்கார்…! மரபுக் கவிதையில்... செயலால் தமக்கே இழுக்கதுதான் சேரு மென்றே அஞ்சுகின்ற இயல்பைக் கொண்ட ஆட்சியாளர், ...

Read More »

குறளின் கதிர்களாய்…(343)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(343) ஓல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். – திருக்குறள் – 472 (வலியறிதல்) புதுக் கவிதையில்... தம்மால் செய்ய இயலும் செயலறிந்து, அதற்கு அறியவேண்டிய வலிமைகளறிந்து, மனம் மொழி மெய்களை அதில் எப்போதும் வைத்துப் பகைமேல் செல்லும் மன்னர்க்கு முடியாதது எதுவுமில்லை…! குறும்பாவில்... இயலும் செயலும் அதற்கான வலிமைகளுமறிந்து மனமொழிமெய் அதிலே வைத்துப் பகைமேல் செல்வோர்க்கு முடியாத தில்லையே…! மரபுக் கவிதையில்... செய்ய இயன்ற செயலறிந்து செயலதன் வலிமைகள் தானறிந்து மெய்யுடன் மனமொழி யெப்போதும் மிகையா ...

Read More »

குறளின் கதிர்களாய்…(342)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(342) சிறைநலனுஞ் சீரு மிலரெனினும் மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது. – திருக்குறள் – 499 (இடனறிதல்) புதுக் கவிதையில்... மக்கள் பாதுகாப்புக்கு அரணாகிய நலனும் வலிமையும் பிற சீரும் இலராயினும், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குதல் மிகவும் சிரமமான செயலாகும்…! குறும்பாவில்... அரணாம் நலனும் பிற சீர்களும் இல்லாதவர்களானாலும் அவர்தம் இருப்பிடம் சென்று தாக்குதல் மிகவும் அரிது…! மரபுக் கவிதையில்... மக்களுக் கரணாம் நலனுடனே மற்றைச் சிறப்பெலாம் இலராயுள அக்கம் பக்கம் நாட்டினரை ஆற்றாப் பகைமை கொண்டேதான் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(341)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(341) சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கு மரிது. – திருக்குறள் – 647 (சொல்வன்மை) புதுக் கவிதையில்... எண்ணியதைப் பிறர் ஏற்றிடும்படிச் சொல்லும் ஆற்றல் மிக்கவன், சொல்லிடும் செய்தி சொல்லிடக் கடினமானதெனிலும் சோர்வுறாமல் சொல்பவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் பயமில்லாதவன் எனப் போற்றப்படும் இவனை மாறுபாட்டால் வெல்வதென்பது எவர்க்கும் மிக அரிதாகும்…! குறும்பாவில்... புரியும்படி எடுத்துச்சொல்வதில் வல்லவனாய் கடினமான செய்தியையும் சோர்வுறாமல் சொல்பவனாய் அஞ்சாதவனை மாறுபாட்டால் வெல்வதரிது…! மரபுக் கவிதையில்... சொல்ல எண்ணிடும் சேதியினைச் சொல்லும் வகையில் ...

Read More »

பெண்களின் வித்தக விந்தைகள்

சக்தி சக்திதாசன் என் இனிய அன்பு உள்ளங்களே ! மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு ...

Read More »

குறளின் கதிர்களாய்…(340)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(340) கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். – திருக்குறள் – 722 (அவை அஞ்சாமை) புதுக் கவிதையில்... கற்றோர் நிறைந்த அவையில் அவர் முன் தாம் கற்றதை அவர் மனத்தில் பதியுமாறு எடுத்துரைக்க வல்லவரே, கல்வி கற்றோருள் நன்கு கற்றவரென மதிக்கப்படுவர்…! குறும்பாவில்... கற்றோர் அவையில் தாம் கற்றவைகளை அவர்கள் மனதுக்கேற்ப சொல்லவல்லாரே கற்றோருள்ளும் மிகக்கற்றவரெனக் கருதப்படுவர்…! மரபுக் கவிதையில்... கற்றோர் பலரும் நிறைந்திருக்கும் கண்ணிய மிக்க அவையதிலே முற்றிலும் அவர்கள் மனம்மகிழ்ந்தே முழுதும் விரும்பிக் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(339)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(339) உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. – திருக்குறள் – 734 (நாடு) புதுக் கவிதையில்... கொடிய பசியும் உடலில் வந்தபின் நீங்கிடா நோய்களும், அழிவைத் தந்திடும் அடுத்தவர் பகையும் இல்லாமல் மக்கள் இனிதே கவலையின்றி இருப்பதுதான் நாடு…! குறும்பாவில்... கொடும்பசி கொல்லும் நோயுடன் கெடுத்திடும் அடுத்த நாட்டுப் பகையிவை இலாதே மக்கள் இனிதிருப்பதே நாடு…! மரபுக் கவிதையில்... வறுமையி லுளோரை வாட்டுகின்ற வலிமை மிக்கக் கொடும்பசியும், பொறுக்க முடியா வலியுடனே போக்கிட வழிய தறியாத ...

Read More »