பூப்பெய்துவது குறித்த விழிப்புணர்வைச் சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது. இது குறித்த விவரங்களை அவர்களுக்கு யார் வழங்குவது சிறந்தது? அம்மாவா? ஆசிரியரா? எப்படி வழங்குவது? என்பது சற்றே சிக்கலான ஒன்று. இந்தக் கல்வியை எவ்வாறு எளிமையாக வழங்கலாம்? மலேசியாவில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன் வழங்கும் ஆலோசனைகள் இதோ.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியா – கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கிறது எனக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியப் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தியத் தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரியைத் திருப்பி அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுக்கான விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? கனடாவில் இந்தியவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? கனடாவுக்கு வர விரும்புவோர், வழக்கம் போல் விண்ணப்பிக்கலாமா? கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.
குழந்தையின்மை, இன்றைய நவீன யுகத்தில் பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தம்பதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலையும் சமூகவியல் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதற்கான மருத்துவம், பணம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இயற்கை முறையில் இதற்கு உள்ள தீர்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன். இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள், கட்டாயம் குழந்தை பிறக்கும் என்கிறார். நம்பிக்கை அளிக்கும் இவரது வார்த்தைகளைக் கேளுங்கள்.
காலத்தால் அழியாத, அழகிய ஓவியங்களைப் படைத்தவர். இயல்பான முகங்களையும் கைவண்ணத்தால் கலைவண்ணத்தால் காவிய நாயகிகளாய் வடித்தவர். வண்ணங்களுக்குள் புகுந்து வாழ்க்கையை எழுதியவர். தூரிகை பிடித்து, தனக்கென ஒரு பாதையை, பாணியைக் கட்டமைத்தவர், ஓவியர் மாருதி. இவர் குறித்த நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், ஓவியர் ஸ்யாம்.
சர்க்கரை நோயின் தலைநகரம் என இந்தியாவை அழைக்கிறார்கள். கோடிக்கணக்கானோர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கோடிக்கணக்கானோர், சர்க்கரை நோயின் தொடக்க நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இளம் வயதினருக்கும் சர்க்கரை நோய் வரத் தொடங்கியிருக்கிறது. நீரிழிவுக்கு என்ன்றே பிரத்யேக மருத்துவமனைகள் பரவி வருகின்றன. இந்த நோய்க்குத் தீர்வு என்ன என்று பலரும் தேடி வருகிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், சர்க்கரை நோய்க்கு உள்ள இயற்கையான தீர்வுகளை விவரிக்கிறார். தமக்கு நீரிழிவு நோய் வந்தபோது கடைப்பிடித்த மருத்துவ முறைகள், உணவு முறைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை யாவரும் பயனுறும் வண்ணம் பகிர்கின்றார். இதை நீங்களும் முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள்.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், புற்றுநோயைத் தீர்க்கும் வீரியம் உள்ள மருந்தினைப் பரிந்துரைத்துள்ளார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் மனைவிக்கு இந்த மருந்தினைக் கொடுத்துள்ளார். இரண்டே மாதத்தில் மனைவியின் புற்றுநோய்க் கட்டி கரைந்து மறைந்துள்ளது. தமது அனுபவங்களை பலரும் பயன் பெறுவதற்காக, நம்முடன் பகிர்ந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடுகின்ற ஒவ்வொருவரும் இதை முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள்.
கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள், ஐஇஎல்டிஎஸ் (IELTS) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆங்கிலத்தில் படிப்பது, எழுதுவது, பேசுவது, கேட்பது ஆகிய நான்கு பிரிவுகளிலும் தலா ஆறு மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும். இதில் மயிரிழையில் பலரும் தோல்வி அடைவது உண்டு. அவர்கள் மீண்டும் எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுத்தான் கனடா வர முடியும். இந்த நடைமுறையில் கனடா அரசு இப்போது முக்கியத் திருத்தம் ஒன்றைச் செய்துள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு நல்வாய்ப்பு. இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.
அளந்து செலவிடு, சிறுகக் கட்டிப் பெருக வாழ், சிக்கனமாய் இரு போன்றவை எல்லாம் எங்கோ கேட்டாற்போல் இருக்கிறதா? நம் முந்தைய தலைமுறை வரைக்கும் இதுவே இயல்பான வாழ்க்கை முறையாக இருந்தது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகிறார்கள். தாம்தூம் செலவுகள் ஏராளம். இந்நிலையில், மினிமலிசம் என்பது ஓர் இயக்கமாகப் பரவி வருகிறது. இதன் அடிப்படை என்ன? இந்தச் செலவு தேவைதானா என நம்மை நாமே ஏன் கேட்க வேண்டும்? வாங்கிக் குவிக்கும் மோகத்திலிருந்து விடுபடுவது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.
பழைய வீடுகளையும் அடுக்குமாடிகளையும் இடித்து, கூட்டு முயற்சியில் அடுக்குமாடிகளாகக் கட்டுவது நகர்ப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதில் எந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்படுகிறது? யாருக்கு என்ன லாபம்? பழைய வீடுகளை, அடுக்குமாடிகளை வாங்குவது லாபம் தருமா? நீண்ட காலம் உழைக்கும் வகையில் வீடுகளை, அடுக்குமாடிகளைப் பராமரிப்பது எப்படி? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.
வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? வீட்டின் தரத்தைச் சோதிப்பது எப்படி? வீட்டின் மதிப்பை நிர்ணயிப்பது எப்படி? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது ஏன்? இதனால் என்ன நன்மை? இதன் மூலம் வங்கித் துறைப் பங்குகளின் விலை அதிகரிக்குமா? கடனுக்கான வட்டி விகிதங்கள் மாறுமா? இந்த நோட்டுகளை எங்கே, எப்படி மாற்றிக்கொள்ளலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.
தனி வீடா? அடுக்குமாடியா? விவசாய நிலமா? எதில் முதலீடு செய்யலாம்? எதில் லாபம் அதிகம்? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.
அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார்.