சமயம்

அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

பறவை எச்சத்தில் முளைத்த அரசமரக் கன்றை எடுத்துவந்து, அதனடியில் நவதானிய விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார், நாமக்கல் பாலமூர்த்தி. விநாயகருக்கு இருபுறமும் நாகர் சிலைகளுக்குப் பதிலாக, மரூள் தாவரத்தை நட்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக, கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையாக ஒரு கோவிலை எழுப்பியுள்ளார். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள், பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்

தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றிய ‘மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

லலிதா நவரத்தின மாலை

லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். இந்தப் பேரிடர் காலத்தில் இதைப் பாடியும் கேட்டும் பயன் பெறுங்கள். பாடியோர்: கிருஷ்ணகுமார் & ஷ்ரேயா குமார் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

தன்வந்திரி மகாமந்திரம்

மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் தன்வந்திரி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டதால் நிறைவாழ்வு பெற்றார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக வணங்கப்பெறும் தன்வந்திரி, எல்லா நோய்களையும் அச்சங்களையும் நீக்க வல்லவர். கொரோனா அலைகளால் உலகமே துன்புறும் இக்காலத்தில், மிகச் சக்தி வாய்ந்த இந்தத் தன்வந்திரி மகாமந்திரத்தை ஜபியுங்கள். நலமும் குணமும் அருளும் திடமும் பெறுங்கள். ஜபம் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் இசை – சூர்யா நீலகண்டன் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : ...

Read More »

சங்கர குரு ஜெய சங்கர குரு

காஞ்சி மாமுனிவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தில், இந்தப் பாடலை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள். பாடல் – சங்கர குரு ஜெய சங்கர குரு பாடியவர்கள் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பரமஹம்ச மாஸ்ரயே | கிருஷ்ணகுமார்

காஞ்சி மகாபெரியவரின் நட்சத்திரமான இந்தப் பௌர்ணமி அனுஷ நன்னாளில், ‘பரமஹம்ச மாஸ்ரயே’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மீனாட்சி திருக்கல்யாணம் | கிருஷ்ணகுமார்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அண்மையில் நடைபெற்றது. இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. பக்தர்கள் வீட்டிலிருந்தே கண்டு வழிபட்டனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கண்ணன் கணேசன் எழுதிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். மாணிக்கவல்லி மரகதவல்லி அன்னை மீனாட்சி அருள்விழியின் கருணை மழையில் நனையுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஆலயம் அருளாலயம் – தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

சித்திரா பவுர்ணமியில் குருவை வணங்குவது மரபு. அந்த வகையில், தபோவனம் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, ஜி.எஸ்.மணி இயற்றிய ‘ஆலயம் அருளாலயம்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள். ராகம் – திலங் தாளம் – ஆதி (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

சந்திப்பு: அண்ணாகண்ணன் திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆஸ்திரேலியா அந்தணக் குலத்தில் ஆளுமைகள் பலர் இருந்து அரும்பணிகள் ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் கிரியைகளை ஆற்றும் நிலையிலும் அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அகவொழுக்கம், புறவொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் எனலாம். வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. விக்கிரகங்களைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகெனலாம். கிரியைகளை ஆற்றி ஆலய ...

Read More »

பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்

பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்குள் ஒரு சிறு உலா. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ராம நாமமே துதி மனமே!

தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய ராம நாமமே துதி மனமே என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். ராம நாமத்தை ஜபியுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

சந்திப்பு: அண்ணாகண்ணன் இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர் தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் ...

Read More »

வால்மீகியின் இராம காதை – எளிய பாடலாக

மூல வடிவமான வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழ்ப் பாடலாக நமக்கு வழங்குகிறார், கான பிரம்மம் கிருஷ்ணகுமார். கேட்டு மகிழுங்கள். இந்த இராம நவமியில் அண்ணல் இராமபிரான் அருள் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

இந்த ஸ்ரீ ராம நவமியில், சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால் எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். அர்ச்சகர் – சாரங்கன் பட்டாச்சாரியார் ஒருங்கிணைப்பு – ராம்குமார் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »