ஒலி வெளி

முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

அருணகிரிநாதர் அருளிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடலைச் சுதா மாதவன் குரலில் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.  – அண்ணாகண்ணன். இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்   உன் அழகுத் தோட்டத்தில் ஒரு மூலையின் ஓரத்தில் மலராய் நான் பூத்திடுவேன். உன்னுடைய மென்பாதம் வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ உன்னையே சுற்றிவரும். பரந்த உன் வீதியிலே – ...

Read More »

தேடுமிடம் – அமரர் ஆர்.எஸ். மணியின் கவிதை

2006ஆம் ஆண்டு, கனடா நாட்டில் வாழ்ந்த, பல்கலை வித்தகர் ஆர்.எஸ். மணி, தமிழ் சிஃபி தளத்துக்காக, தேடுமிடம் என்ற தனது கவிதையை வாசித்து எனக்கு அனுப்பிவைத்தார். அதை ஆவணப்படுத்தும் முயற்சியாக, யூடியூபில் இட்டுள்ளேன். மயக்கும் அவரது குரலை இங்கே நீங்கள் கேட்கலாம்.   thEdumidam  

Read More »

அம்பா அம்பா

அண்ணாகண்ணன் இந்தப் பாடலை ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில்  இங்கே கேட்கலாம்   அம்பா அம்பா கமலாம்பா அம்பா அம்பா லலிதாம்பா அம்பா அம்பா ஜகதாம்பா அம்பா அம்பா வடிவாம்பா   அம்பா அம்பா ஞானாம்பா  அம்பா அம்பா யோகாம்பா அம்பா அம்பா வேதாம்பா     அம்பா அம்பா லோகாம்பா அம்பா அம்பா மதுராம்பா அம்பா அம்பா கருணாம்பா   அம்பா அம்பா கனகாம்பா   அம்பா அம்பா அபயாம்பா     அம்பா அம்பா நீலாம்பா அம்பா அம்பா லீலாம்பா அம்பா அம்பா பாலாம்பா அம்பா அம்பா வாலாம்பா அம்பா ...

Read More »

’சொல் கோவிந்தம்’

பஜ கோவிந்தம்…. —————————– சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில் காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….(1) வெல்வாய்ஓ மூடா செல்வம்சேர் வேட்கையை கொள்வாய் அதன்மாற்றாம் கொள்கையாய் -வல்லான் விதித்த தொழில்செய்து வந்த பொருளை மதித்து மனதுள் மகிழ்….(2) வேறு ——- சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம் புல்மனமே வல்லான் காலன் வருகின்ற நேரம் தொல்காப்பியமா துணையாகும்….?….(3) வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும் வேட்கை அதற்கு மாறாக ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர் காசுபணம் கொள் சீராக….(4) காமினி கொண்ட ...

Read More »

கண்ணனை நெஞ்சே கருது…. (பாடல் – மகாநதி ஷோபனா)

கிரேசி மோகன்   கண்ணனை நெஞ்சே கருது…. ————————————— எழுதியது அடியேன் பாடி &இசையமைத்தது ‘’மஹாநதி ஷோபனா’’ அவர்கள்….! பீதாம் பரமாட பீலி மயிலாட தோதான தோழர்கள் தோள்கொடுக்க -மீதேறி வெண்ணையை வாரி வழங்கிடும் வள்ளலை கண்ணனை நெஞ்சே கருது….(1) நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள் சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை கண்ணனை நெஞ்சே கருது….(2) பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன் ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள் எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன் கண்ணனை நெஞ்சே கருது….(3) பக்திக்(கு) ...

Read More »

இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-29

மீனாட்சி பாலகணேஷ் தென்திருப்பேரை முகில் கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தை உருண்டு புரண்டெழுந்து அழகாகக் குத்துவிளக்கு போல எழுந்தமர்ந்து கொள்ளும்போது அதனைக்காணும் தாயின் மகிழ்ச்சி அளவிட இயலாதது. குழந்தையிடம், ‘கை வீசம்மா கைவீசு,’ என்றும், கைகளைக்கொட்டிச் சப்தமெழுப்பிச் சப்பாணி ( சஹ+ பாணி= சப்பாணி) கொட்டவும் கற்றுக் கொடுக்க முயல்வாள் அன்னை. சந்தன மரங்கள் அடர்ந்து செறிந்த சோலைகளைக்கொண்ட ஊர் திருப்பேரை எனும் திருமாலின் தலமாகும். இங்கு சின்னஞ்சிறுவனான, கருமுகில்வண்ணனான ஒரு குழந்தை உள்ளான். தெய்வக்குழந்தையான திருப்பேரை நாதனவன். பெயரும் மகரக்குழைக்காதன்! அவனைச் சப்பாணி ...

Read More »

உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)

இசைக்கவி ரமணன் நீ என்பதா? இல்லை நானென்பதா? தனிமையில் உன்னை நான் நானென்பதா? தன்னந் தனிமையில் என்னை நான் நீயென்பதா? உன்விழி அசைவில் என்னுயிர் ஆடும் புன்னகை மலர்ந்தால் புதுக்கவி பாடும் உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி இன்னமும் ஏனம்மா துன்பத்தின் இடைவெளி (நீ) விரைந்து வரும் அலையில் வீற்றிருக்கும் மலையில் இதயத்திலே இரண்டும் சமன்பெறும் ஒரு நிலையில் கரைந்து கரைந்து கண்ணீராய் வீழ்கிறேன் கடைசி ஒருதுளியில் உன்முகம் காண்கிறேன் (நீ)

Read More »

என்னழகியே!

இசைக்கவி ரமணன்   மதுவெழுந்து மலராகி மலர்விரிந்து மனமாகி மனமுழுதும் உனதானதே மகரந்தம் கனவாகி இதழ்யாவும் நினைவாகி மணமெங்கும் பெயர்வீசுதே இதுவரையில் கதையொன்றை இங்கங்குமாகவே எழுதியகை இளைப்பாறவே இமையடியில் மைதொட்டுன் விரலெழுதத் துவங்கியதும் இதயத்தில் குயில்கூவுதே இதுகேட்டு முகில்சூழ இணைகூடும் தருணமென இளையமயில் நடமாடுதே இமைக்காத தேவர்க்கும் விண்மின்னும் மீனுக்கும் இதுவிந்தை யானதம்மே எதுசெய்தும் தீராத துன்பங்கள் எதுவொன்றும் செய்யாமல் தீர்ந்ததின்றே! என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில் எழுந்தருளும் என்னழகியே! படியேறி வந்தென்றன் மடிதட்டிப் பதறவும் பாட்டியாய் நின்ற போதும் பாவாடைச் சிறுமியாய்ப் பாதச் ...

Read More »

அன்பில் ஒன்றான சங்கம்

இசைக்கவி ரமணன் கனவிலே மேவும் விடியலில் வந்து காதில் கவிதைகள் சொல்கிறாய், அதை நினைவிலே பாடி வைக்கிறேன், உனை நாளெலாம் தேட வைக்கிறாய் மனதிலே தைத்த முள்ளினை, உன் மலர்விரல் என்று கிள்ளுமோ? துளி மனமிலாத பெரும் மர்மமே! அது மறந்து பிள்ளையைத் தள்ளுமோ? துருவமாய் அன்னை பிள்ளையா? இந்தத் துயரை மிஞ்சும்துயர் உள்ளதா? கருவமா? இது கருணையா? இந்தக் கதையில் திருப்பமே இல்லையா? அருவமே! ஆழ நெஞ்சிலே அழகின் உருவமாய்த் தோன்றும் உண்மையே! உன் புருவம் உயரும் கணத்திலே, வினைப் பொற்பு பொடியாகிப் ...

Read More »

சக்தி முற்றம்

இசைக்கவி ரமணன்   இருள் இருளே அஞ்சிப் பதறும் பேரிருள் இழைபிரியாமல் எழுந்து பரவி இனியொரு திசையே இலாதபடி இருந்தும் அசைந்தும் பராவி அவாவி ஏதுமே இலாத இலாத எதிரை இருக்க வைத்துக் கரைத்துக் குடிக்கும் இருள் ஒருநாள் ஆயிர மாயிரம் கோடிக் கதிர்கள் வாயினைத் திறந்து வற்றாச் செம்மைப் பாயினை விரித்த பயங்கரி, எனது தாயினைக் காணத் தளபதியாய் ஊழித் தீயினை அழைத்துச் சேனை வகுத்தன தங்கள் ஒளியெனத் தலைகனத்தன திங்கள் பகலெனத் திகிரி சுழற்றின நுரைக்குமிழிகளை நொறுக்கும் சூறையாய் தரைப்புதர்களைத் தழுவும் ...

Read More »

ஏழையினை மறந்துவிடாதே!

இசைக்கவி ரமணன்   உன்களிப்பு தர்மம் உன்விருப்பம் சிருஷ்டி உன்னிமைப்பு மாயம் உன்னிமைப்பே முக்தி! என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது? எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது? என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா? உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா? உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே! உயிரில் நின்றும் கண்ணில்படா உச்சக் கள்ளமே! என்வினைகள் பிறவி உன்மறைப்பு வாழ்க்கை என்மறப்பு மரணம் என்னநியாயம் தர்மம்? கட்டுவதும் கழற்றுவதும் உன்றன் கைகளே, இதில் கர்மம் ...

Read More »

என்மஹா ராணி!

இசைக்கவி ரமணன்   ஆயிரம் பேர்களால் என்ன? அவை யாவுமுன் கால்மூடும் மலரே! வாயி லிருப்பதா வாக்கு? அது வயிரவீ உன்மனப் போக்கு! பாயில் கிடக்கவா வாழ்வு? உன் பாலிப்புக் கதுதானே தாழ்வு? தேயா இருளெலாம் போக்கு! என் சித்தத்தில் முத்தத்தைத் தேக்கு! நின்னையே கதியெனக் கொள்வார், அவர் நிம்மதி இலாமலே திரிவார் நின்னையே பொய்யெனச் சொல்வார், அவர் நிலமெலாம் செல்வத்தி லாள்வார் நின்மனம் ஏதடி பிச்சி? இன்னும் நிற்கி றோமேயுனை மெச்சி! நின்னிலே ஏதோ இருக்கும்! அது நில்லாது நெஞ்சை இழுக்கும்! வக்கணை ...

Read More »

என் காளிக்கு..

இசைக்கவி ரமணன்   பச்சைரத்தம் சொட்டச்சொட்டப் பட்டைநாக்கு பளபளக்கப் பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்! அச்சமஞ்சும் உன்வடிவை அகம்குலைக்கும் உன்னுருவை அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன் அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்! இச்சைபோன்ற இடரையெலாம் மிச்சமின்றி விழுங்கிவிடு என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு, என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு! கச்சைக்கட்டிக் கொண்டுவரும் கவலையைப் பொசுக்கியந்தக் கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக் கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1) இந்த உலகம் நொந்த உலகம் இவர்மனத்தில் தினம்கலகம் இங்கெதற்கோ இறக்கிவைத்தாய் தெரியவுமில்லை இங்கெனக்கு வேலையென்ன ...

Read More »

பாதமலர் போதும்

இசைக்கவி ரமணன்   மலருக்குத் தேனழகோ மணமழகோ நிறமழகோ? என் மனதுக்கு நீயன்றி மற்றழகொன் றேது? மறையெல்லாம் சொன்னாலும் மற்றொருசொல் லேது? சிலருக்கே திருவுண்டு சிலருக்கே அறிவுண்டு சிலருக்கோ நீசிரித்துச் சேர்ந்த அருளுண்டு சிறுபிள்ளை என்னெஞ்சில் நீதானே உண்டு! நாடகமாய் இவ்வையம் பூடகமாய் மனிதமனம் கூடெங்கும் நுழைந்துமலர் சூடுமுன் கரத்தால், உன்னைத் தேடுவதே இவரிங்கே ஆடுவதும் பாடுவதும்! தேடுவோர்கள் தேட, பதம் சூடுவோர்கள் சூட, நிதம் வாடுவோர்கள் வரிசையிலென் வாழ்க்கை ஆடுதே! இதில் ஏடும் இசையும் உன் திறவா வாசலானதே! போதுமடி அம்மா உன் ...

Read More »