Author: இசைக்கவி ரமணன்

  • வாழ்வோடு கலந்த வண்ணத்திரைப் பாடல்கள்

    வாழ்வோடு கலந்த வண்ணத்திரைப் பாடல்கள்

    வணக்கம்.

    பழைய திரைப்படப் பாடல்களை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சி. அந்தப் பாடல்கள் இலக்கியத்தின் நீட்சி என்பது மட்டுமல்ல, நம் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதிபலிப்பவை.

    கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை. உடுமலை நாராயண கவி, கு.ம. பாலசுப்பிரமணியம், மருதகாசி, மாயவநாதன், ஆலங்குடி சோமு என்று இன்னும் எத்தனை கவிஞர்கள், அவர்களுடைய பொருள் பொதிந்த வரிகளால் நம் வாழ்வோடு இணைந்து விட்டார்கள்!

    அவர்கள் அனைவரையும் ஒருசேர நினைவு கூரவே இந்த நிகழ்ச்சி!

    நடத்துவது யார்? பல அருமையான நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக, இடைவிடாமல் நடத்திவரும் The Humour Club International. ஏப்ரல் 9, ஞாயிறு மாலை 4.00 மணிக்கு, சென்னை Mylapore Fine Arts Club அரங்கில் தொடங்குகிறது. 5.00 மணிக்கு என் பேச்சு.

    அன்புடன் இந்த வாய்ப்பை அளித்த நண்பர்கள் சேகருக்கும், கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    வாருங்கள்!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • மாதம் தோறும் மகாகவி – தொடர் நிகழ்ச்சி

    மாதம் தோறும் மகாகவி – தொடர் நிகழ்ச்சி

    வணக்கம்.

    சேவாலயா – மதுரத்வனி இணைந்து நடத்தும் ‘மாதம் தோறும் மகாகவி’ தொடர் நிகழ்ச்சி.

    ஏப்ரல் 7, மாலை 6.30 மணி, சென்னை மயிலை லஸ் முனையருகில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டர் அரங்கில்.

    பாரதியின் தீர்க்க தரிசனங்கள் பற்றிப் பேச விழைகிறேன். வாய்ப்புடையோர் வருக! இயலாதோர் நேரலையில் காண்க: https://youtube.com/live/ATCAi9udu3k

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

    இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

    வணக்கம்.

    இசைக்கவியின் இதயம் இரண்டாவது நிகழ்ச்சி. என் நலம் விரும்பிகள், என் இனிய நண்பர்கள் வியாசர்பாடி திரு குருமூர்த்தி ஐயாவும், மதுரத்வனி திரு ராமகிருஷ்ணன் அவர்களும் இணைந்து வழங்குகிறார்கள்.

    கவிதையும் கானமும் என் உயிரின் இயல்புகள். கவிஞன் என்னும் இந்த அடையாளம் எனக்குத் தமிழ் தந்தது. என் பராசக்தி அந்தத் தமிழைத் தந்தாள்.

    என் கவிதைகளும், கானங்களும் மணமற்ற மலர்களாக இருந்தாலும், அவை அவளுடைய தோட்டத்து மலர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

    பிப்ரவரி 16, வியாழன், மாலை 6.30க்கு, சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக்கு அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில், என் கவிதைப் பொழிவு நடைபெறும்.

    சென்றமுறை வ.வே.சு.வின் வாழ்த்துரை. இந்த முறை இளம் கவிப்புயல் விவேக் பாரதி!

    வாருங்களேன்!

    வரவியலாதவர்கள், நேரலையில் பாருங்களேன்: https://youtube.com/live/ZgtKvOxh9HY

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • மாதம் தோறும் மகாகவி (பிப்ரவரி 07, 2023)

    மாதம் தோறும் மகாகவி (பிப்ரவரி 07, 2023)

    வணக்கம்.

    “மாதம் தோறும் மகாகவி” பிப்ரவரி 07, 2023. சேவாலயாவும், மதுரத்வனியும் வழங்கும் தொடர் நிகழ்ச்சி.

    ஆர்கே கன்வென்ஷன் சென்டர், லஸ் முனை அருகில், மயிலாப்பூர், சென்னை 4. மாலை சரியாக 6.30 மணிக்கு.

    சென்ற மாத நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்த முறையும் பாரதியும் ஞாயிறும் என்னும் தலைப்பில் பேச விழைகிறேன்.
    அந்த மாகவியின் அற்புத வீச்சுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் மேலிட்டதால்தான் உங்களை அன்புடன் அழைக்கிறேன். பாரதியின் கவிதை என்பது தொடரும் பிரமிப்பாகவே இருக்கிறது.

    வரவியலாதவர்கள், இதை நேரலையாகக் காணலாம்: https://youtube.com/live/S6Qqv5VLAwA

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • இசைக்கவியின் இதயம் – புதிய தொடர் நிகழ்ச்சி

    இசைக்கவியின் இதயம் – புதிய தொடர் நிகழ்ச்சி

    வணக்கம்!

    இதோ ஒரு புதிய தொடர் நிகழ்ச்சி!

    பல்லாண்டு காலமாக எனக்குப் பாட்டும், கவிதையும் தந்து பராசக்தி என்னைப் பாலித்து வருகிறாள். நானொரு தமிழ்க் கவிஞன் என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் நான் சுமப்பதில்லை.

    அவள் தந்த கவிதைகளையும், பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே ஒரு தொடர் நிகழ்ச்சி. மாதம் ஒரு முறை.

    என்பால் பேரன்பு கொண்ட இரு நண்பர்கள் இதை எடுத்து நடத்த முன்வந்திருக்கிறார்கள் – ஒருவர் இடம் தந்து, நேரலை ஒளிபரப்பும், யூடியூப் பதிவும் செய்யும் திரு. ராமகிருஷ்ணன், ஆர் கே கன்வென்ஷன் சென்டர். இன்னொருவர், தேசப் பற்றாளர், ஆன்மிகப் பயணி, வியாசர்பாடி திரு. குருமூர்த்தி ஐயா அவர்கள்.

    வாருங்களேன்! கவிதையும் பாடல்களும், கொஞ்சம் சிற்றுண்டியும் உங்களுக்காகக் காத்திருக்கும்!

    17.01.23, செவ்வாய், மாலை 6.30, ஆர் கே கன்வென்ஷன் சென்டர், லஸ் முனை அருகில், மயிலாப்பூர், சென்னை 600004.

    நேரில் வர இயலாதவர்கள் நேரலையில் காண: https://youtu.be/lfoxwaqOV1A  

    அன்புடன்,
    ரமணன் 

    Share
  • பாரதி யார்? – வரலாற்று நாடகம்

    பாரதி யார்? – வரலாற்று நாடகம்

    அன்பு உள்ளங்களே!

    அரசு தந்த அரங்கிலே
    அமர கவியின் வாழ்வினை
    முரச றைந்து சொல்கிறோம்
    முத்தமிழும் ஓங்கவே!
    தேசம் தனது தெய்வமாய்
    சேரி தனது கோயிலாய்
    நேசமுடன் வாழ்ந்ததோர்
    நெருப்பின் கதையைச் சொல்கிறோம்!

    செந்தமிழின் விதியினைச்
    சிந்துபாடி மாற்றினான்
    அந்தணரில் மறவனாம்
    அவன்கதையைச் சொல்கிறோம்!
    பெண்களுக்குக் கண்களாய்
    பேரழகிப் பிள்ளையாய்
    மண்ணில் விண்ணைக் கறந்தவன்
    மாண்பை மன்றில் சொல்கிறோம்!

    செல்லம்மாவின் காதலன்
    செந்தமிழின் நாயகன்
    சொல்முழுதும் சத்தியம்
    சொன்னகதை சொல்கிறோம்!
    அரசெடுக்கும் திருவிழா
    அமரகவியின் பெருவிழா
    அரங்கு முழுதும் நிறையவே
    அனைவருமே வருகவே!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

    பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

    வணக்கம்.

    நேற்று – நவம்பர் 23 – மாலை சென்னை பாரதிய வித்யா பவனில் நான் பெரிதும் வியந்து மதிக்கும் நடனகுரு திருமதி அனிதா குஹா அவர்களின் ‘பரதாஞ்சலி’. அவர் வணங்கும் பாபாவுக்கு அஞ்சலியாக நடத்திய விழாவில், பல ஆளுமைகளின் நடுவே என்னையும் அமர்த்தி எனக்கும் ஒரு விருது வழங்கினார்கள்.

    தொடர்ந்து நான் பாரதியைப் பற்றிப் பேசியும், எழுதியும் வருவதையும், ‘பாரதி யார்?’ நாடகத்தில் வசனம் தவிர, பாரதியாக வேடமேற்று நடிப்பதையும் மனத்தில் கொண்டு, எனக்கு, “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதை வழங்கினார்கள்.

    என்பால் பேரன்பு கொண்டவர் பாரதிய வித்யா பவனின் இயக்குனர் திரு. ராமசாமி அவர்கள். என்னுடைய நிகழ்ச்சிகள் எத்தனையோ – நாடகம் உட்பட – அங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பாரதியின் பாடல்களை, பொருளறிந்து, கேட்போர் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாடி வருகின்ற இசைக் கலைஞர் திரு. ஓ.எஸ். அருண் அவர்கள்.

    பாரதக் கலைகள் அமெரிக்காவில் சிறப்பாகப் பரவுவதற்குப் பெரும் காரணமாக இயங்கிவரும், எங்கள் தாமிரபரணி தீரர், திரு. ‘க்ளீவ்லேண்ட்’ சுந்தரம் அவர்கள்.

    உலகப் புகழ்பெற்ற நடனமணி திருமதி லீலா சாம்சன் அவர்கள்.

    இவர்கள் மூலம் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டது.

    ஏற்புரையாக நான் ஒரு கவிதையை வாசித்தேன். அதை அனிதா வணங்கும் பாபாவைத் தொட்டு இயற்றியிருந்தேன்.

    இதோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – என் குரலில் பதிவாகவும்:

    பரதாஞ்சலிக்கொரு கவிதாஞ்சலி
    அகமென்றும் புறமென்றும் சுகமென்றும் துயரென்றும்
    அலைபாயும் இவ்வாழ்விலேஅரைநொடியும் நில்லாமல் அல்லாடும் ஓடங்கள்
    ஆசைக ளின்பிள்ளைகள்
    இகமென்றும் பரமென்றும் இனம்காண முடியாமல்
    இடறுவதும் நடனமாமோ?
    இற்றுவிழும் இதயத்தில் பற்றின்னும் வீழா
    திறுக்குவதும் இசையாகுமோ?
    அகமுன்னை நாடாத அதிகாலை வேளையில்
    அருகிலே வந்த தேவா!
    அனிதாவின் நெஞ்சத்தில் அகலாமல் குடிகொண்ட
    அன்பனே சாயிநாதா!
    பற்றுவில காமல்படி தவறவுயிர் சிதறமனம்
    பதறஅடி இடற அங்கே
    பார்த்தவிழி யும்பார்வை யும்பாத மும்கரமும்
    பரிவும்புதுக் கமலங்களாய்
    சுற்றுமுற் றும்மக்கள் துவளமனம் நெகிழ்ந்துருக
    சுந்தரா! எதிரில் நின்றாய்
    சொல்லிரண் டைச்சொல்லிப் புல்லென எனைக்கிள்ளிச்
    சொக்கவைத் தாய்சிரித்தாய்
    அற்றன வினைகளென கொற்றவ உன் கண்முன்னில்
    ஆகாயம் நானாகினேன்!
    அனிதையெனும் வனிதையவள் புனிதமனம் தினம்நெகிழ
    அமர்ந்தருளும் சாயிநாதா!
    தன்பெயரைச் சொல்லாமல் உன்பெயரில் விருதுதரத்
    தாழ்மையுடன் அவளழைத்தாள்
    தரமேது மில்லானைத் தக்கோர்கள் வரிசையில்
    மனம்கூச அமர்த்திவிட்டாள்
    புன்னகையும் குறும்புமாய்ப் பொல்லாத திருமுகம்
    போட்டெனைப் புரட்டுகிறதே!
    பொலபொலென மனமுதிர சலசலென ஜதியதிரப்
    புதியகவி பூக்கின்றதே!
    அன்புமய மாகவுயிர் யாவும்வச மாகப் பெரும்
    அற்புதம்நி கழ்த்தும் தேவா!
    அனிதாவின் சித்தத்தின் முற்றத்தில் மொத்தமாய்
    அமர்ந்தருளும் சாயிநாதா!
    தேவதைகள் போல்நூறு பாவையரை நூல்கொண்ட
    பாவையென ஆட்டுகின்றாய்
    தேரசையும் தெருபோலப் பாவையரின் காலசையத்
    தேவருல கம்பதறுதே
    காவல்விலக மனது களவுபோக நினைவும்
    கனவும் கலந்தாடுதே
    கடவுளோர் கதியதோ கதியாக்கும் ஜதியரசி
    கால்கள் கவிதை பேசுதே
    தனதாந்த தனன தன
    அனிதாவின் நடனமொழி
    தகிடதிமி தனுஜனுகு
    அரம்பையரின் மனமுருகும்
    தனுஜனுகு தாம்தகிமி
    தனுமனுவும் ஓர்கதியில்
    தகதகிட கிடதகிட
    தலையடியும் ஒருசுதியில்
    தகதகிமி தகதகிமி தாம்தகிட தாம்தோம்
    வனிதையரின் வரிசையினில் வான்புவியில் கண்டோம்
    தாம்தீம்தோம் தாம்தகிட தாம்தகிட தோம்தோம்
    வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துமிசை கேட்டோம்
    ஆடுவ தெல்லாம் அருவா? உருவா?
    அறவே தொலைந்த திருளா? மருளா?
    சூடுவ தேயவன் திருவடி தானா?
    சொல்லொவ் வொன்றும் சுடர்ந்திடும் தேனா?
    தேடுவ தெல்லாம் தேரினில் வந்தென்
    தெய்வம் புன்னகை செய்து கொடுத்ததில்
    தேவைக ளெல்லாம் தீர்ந்தது தானா?
    தெரியவில் லையிது நானா? வானா?
    பாரதம் என்பது மேடை, அதில்
    பரதம் பரமனின் ஜாடை
    ஓரடி விதியை மிதிக்கும், மற்
    றோரடி வானை யளக்கும், இதில்
    யாரடி யோகொடுங் கோடை வாடை
    அடைமழை வசந்தம் ஆயிரம் சுகந்தம்
    தேரடி தெருவெனத் தெய்வம் பலவெனத்
    தெரிந்து படைத்துச் சிரித்தாள்? அவள்
    நேரே இறங்கிச் சேலை அணிந்து
    பாரை அளந்த பதத்தாள்! அவள்
    பரதத் தில்புது விதத்தாள்!
    பாவனைகள் இதுபோலப் பார்கண்ட தில்லையே
    பார்ப்பதெல் லாம்தில்லையே!
    பாலைமனம் சோலைவன மாகவுரு மாறியதில்
    பகலிரவெ லாம்முல்லையே!
    தேவையெல் லாம்தீர்க்கும் தெய்வக் கலைத்தேரில்
    தெய்வமென வந்த பெண்ணே! உன்
    பரதாஞ்ச லிக்கிந்தப் பாமரன்ச மர்ப்பித்த
    கவிதாஞ்ச லியையேற்பாய்!
    ஆவதெல் லாமவன் அருளென்னும் அன்பென்று
    யாவரும் இசைபாடவே!
    அருளேதன் னுருவாக பரதமே உயிரான
    அனிதாகுஹா வாழ்கவே!

    கவிதையை என் குரலில் கேட்க: https://drive.google.com/…/1-yBJpkYWTCa9jc…/view…

    நிகழ்ச்சியை, 80 வயதிலும் கூர்மையும், உன்னதமான தமிழ் உச்சரிப்புக்கும், மெலிதான நகைச்சுவைக்கும் புகழ் கண்டவருமான திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். அவரையும் அவர் கணவரையும் அமர்த்திவைத்து அனிதாஜி அவர்கள் சிறப்புச் செய்தது அந்த விழாவின் சிறப்பம்சம்.

    பரதாஞ்சலி நடன மணிகள் தேவலோகத்துப் பெண்களாக மாறி அருமையான நடன நிகழ்ச்சியொன்றை, இரு பகுதிகளாக வழங்கினார்கள். அதில், நடனக் கலைஞர்களுக்கு எவ்வாறு யோகா பயிற்றுவிக்கப்படுகிறது என்பதையும் காட்டினார்கள்.

    நேரம் போனதே தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பும்போது என் நடையில் ஒரு விசைப்பு முளைத்திருப்பதை உணர்ந்தேன்.

    அன்புடன்,
    ரமணன்
    23.11.2022/புதன்/8,50

    புகைப்படங்களை அனுப்பி உதவிய திரு. ஐயப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    Share
  • சேஷன் சம்மான் விருது அறிவிப்பு

    சேஷன் சம்மான் விருது அறிவிப்பு

    வணக்கம்.

    இன்று என் தந்தையாரின் நினைவு நாள். நவம்பர் 22, 2010 அவர் தன் அம்பிகையோடு இருக்கச் சென்று விட்டார்.

    என் குருநாதரின் அறிவுரைப்படி, அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 14 அன்று, சில பெருந்தகையாளர்க்கு அவர் பெயரால் “சேஷன் சம்மான்” என்னும் விருதை நாங்கள் வழங்கி வருகிறோம்.

    விருதாளர்கள் பற்றிய அறிவைப்பை அவர் நினைவு நாளில் நான் தெரிவித்து வருகிறேன்.

    அவருடைய 100 ஆவது பிறந்த நாளான 14.02.2023ல் “சேஷன் சம்மான்” பெறப் போகிறவர்கள் இருவர். அந்த இருவருமே தந்தையாரின் மனத்துக்கு மிகவும் பிடித்தவர்கள்.

    1. பழம்பெரும் நாடகக் கலைஞர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்கள்
    2. புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்

    இந்த விருதை ஏற்க இசைந்த அந்த இருவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் சார்பில் என் நன்றி.

    விழா, எப்போதும் போல சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக்கு அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் நடைபெறும்.

    தேதியை இப்போதே குறித்துக் கொள்ளுங்கள்: 14.2.2023 – மாலை 5.30 மணி.

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் : கவியரசு கண்ணதாசன் விழா I கம்ப தரிசனம்

    சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் : கவியரசு கண்ணதாசன் விழா I கம்ப தரிசனம்

    வணக்கம்.

    சிங்கப்பூர் அழைக்கிறது! இரண்டு நிகழ்ச்சிகள்:

    1. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழா – 19.11.2022 சிங்கப்பூர் நேரம் மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரம் மதியம் 3.00 மணிக்கு) ‘கவியரசரின் பாடல்களில் இலக்கியச் சுவை’ என்னும் தலைப்பில் பேசுகிறேன். (ஆங்கில அழைப்பிதழில் நேரலைச் சுட்டி இருப்பதைக் காண்க).

    2. 20.11.2022 ஞாயிறு சிங்கப்பூர் நேரம் மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரம் மாலை 4 மணிக்கு) லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் வழங்கும் என் “கம்ப தரிசனம்” நூல் வெளியீடு. இதில், சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர், மதிப்புக்குரிய திரு. கா.சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து என் நூலை அறிமுகம் செய்கிறார். (நேரலை ஏற்பாடு உறுதியானதும் தெரிவிக்கிறேன்).

    சிங்கப்பூரில் உள்ள அன்பர்கள் அவசியம் வருக! மற்றோர் நேரலையில் இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்க!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • மாதம்தோறும் மகாகவி | இசைக்கவி ரமணன்

    மாதம்தோறும் மகாகவி | இசைக்கவி ரமணன்

    வணக்கம்.

    சேவாலயா – மதுரத்வனி இணைந்து வழங்கும் “மாதம்தோறும் மகாகவி” தொடர் நிகழ்ச்சி.

    சென்ற மாதம் “பரமகுருவும் பாரதியும்” என்ற தலைப்பில் சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்த மாதம் 14 ஆம் தேதியும் அதன் தொடர்ச்சிதான்.

    சென்னை, ஆர்கே கன்வென்ஷன் செண்டர், லஸ் முனை அருகில், மாலை 6.30 மணி

    நேரிலே வாருங்கள்! இல்லையேல் நேரலையில் காணுங்கள்!

    பாரதியைத் தெரிந்து கொள்வது நம் அனைவருக்கும் நன்மை பயப்பது.

    அன்புடன்,
    இசைக்கவி ரமணன் 

    Share