இ. அண்ணாமலை

தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49

பேராசிரியர் இ. அண்ணாமலை தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று ...

Read More »

பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48

இன்றைய எழுத்துத் தமிழும்  பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா? -இணையக் குழுக்களில்  விவாதிக்கப்படும் கேள்வி வல்லமையில் என்  முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில்  இன்றைய எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை  எழுதினேன். மேலே உள்ள கேள்வி அந்த மாதிரியான இலக்கண வேறுபாடுகள்  இரண்டு தமிழையும் வேறு மொழிகள்  ஆக்குகின்றனவா என்று கேட்கிறது. அதாவது, வேறுபாடு நடை அல்லது வெளிப்பாட்டு வேறுபாடா, அல்லது மொழி வேறுபாடா என்பதே கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவை. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற பெயர்கள் பெரும்பான்மை வழக்கு பற்றித் தரப்பட்ட பெயர்கள். மேடைப் பேச்சும் எழுத்துத் தமிழில் அடங்கும்; எழுதப்படும் கதைகளின் பாத்திரங்களின் உரையாடல்களும் சிரிப்புத் துணுக்குகளும் ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (47)

கேள்வி: மொழிகளில் தோற்றம் பற்றிக்  கணிக்க மொழியியலில் நெறிமுறை இருந்தால், அதைக் கொண்டு தமிழின் தொன்மையைக் கணக்கிட முடியுமா? பதில் PlosOne என்னும் ஆன்லைன் இதழில் வெளியான Charles Perreault & Sarah Mathew எழுதிய Dating the origin of language using phonemic diversity (http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0035289) என்னும் ஆய்வுக்கட்டுரையையும் இதன் எதிர்வினைகளையும் படித்துப் பார்த்த இராமகி [email protected] –இல் தமிழ் ஒலியன்களின் எண்ணிக்கையை (முருகையன் கூறியதாக அவர் கொண்ட 95) வைத்து, கட்டுரை காட்டும் நெறிப்படி கணக்கிட்டால், தமிழின் தோற்றக் காலம் மில்லியன் ஆண்டுகளுக்கு ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

  தமிழில் சந்தி விதிகளை ஒரு சில தமிழ் அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், அவை பற்றி உறுதியான கொள்கைகளை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது. இந்த அளவு வழக்கிறந்துவிட்ட நியதிகளை தொடர்ந்து பேசுவது நியாயமா? — வன்பாக்கம் விஜயராகவன் பதில் ஒரு சொல் உருபுகள் சேர்ந்து அமையும்போது அடுத்தடுத்துச் சாதாரணமாக வராத ஒலிகள் வந்தால்  அவற்றை மாற்றிச் சொல்லொலி அமைப்பைச் சரிப்படுத்துவது  சந்தி. இது உச்சரிப்பையும் எளிமையாக்குகிறது. ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (45)

  தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது. அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும்பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்? — செ. இரா. செல்வக்குமார் பதில் தமிழில் பேசும்போதோ எழுதும்போதோ  ஆங்கில ஒலிகளை அப்படியே கொண்டுவர வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. நான் முந்திய ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (44)

  தொல்காப்பியம் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய பகுதியில் பின்வருமாறு விளக்குகிறது:  முதலீர் எண்ணின்முன் உயிர்வரு காலைத் தவலென மொழிப உகரக் கிளவி முதனிலை நீடல் ஆவயினான (தொல். எழுத்து 455) முதலிரண்டு (ஒரு, இரு) எண்களுக்குப்பின் உயிர் வந்தால் (நிலைமொழி ஈறான) உகரம் கெடும் என்றும் அத் தருணத்தில் அதன் முதலெழுத்து நீளும் என்றும் இந் நூற்பா மிகத் தெளிவாகக் கூறுகிறது. நூற்பாவின் தொடக்கத்திலேயே, ‘முதலிரு என்ற சொல்’, ‘முதலீர்’ என்று வந்து ‘உடம்பொடு புணர்த்தல்’ என்ற உத்திப் படி, நூற்பாவுக்கு எடுத்துக்காட்டை நூற்பாவிலேயே ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43 – அ)

  பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) எழுத்துத் தமிழுக்கென்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. எனவே  ‘ லட்டு’, ‘ ராமன்’ என்று பேச்சுவழக்கில் உள்ள சொற்களை எழுதும்போது, ‘ இலட்டு’ ‘ இராமன்’ என்று எழுதுவதால் எந்தவொரு பிரச்சினையும் தோன்றாது. அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கடன்வாங்கும்போது, தமிழ் அமைப்புக்கு உட்பட்டே கடன்வாங்கவேண்டும் என்பது எனது கருத்து..–-ந. தெய்வசுந்தரம். (தமிழ் மன்றம் மின்குழு விவாதத்தில் கருத்துப் பதிவு) எந்த மொழியிலும் அதன் சொற்களின் ஒலியமைப்பில் ஒரு கட்டுப்பாடு உண்டு. ஒலியின் வரிசையிலும் ஒலி வருமிடத்திலும் ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)

  பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் (42) கேள்வி: தற்காலத்தில் ர  , ல சொற்களின் முதலில் வருவது சகஜமாகி விட்டது. ஆனால், சிலர் இன்னும் ரகர சொற்களின் முன் அ, இ போடுவதும், லகர சொற்களின் முன் இ போடுவதும் பழமையைத் தொற்றிக்- கொண்டிருப்பதாகவும், வேண்டாததாகவும் உள்ளது. வழக்குதான் இலக்கணத்தை நிர்ணயிக்கின்றது என்றால், இதைப் போல் காலத்திற்கு ஒவ்வாத நியதிகளைத் தள்ளிவிடுவது நியாயம்தானே?  — விஜயராகவன் பதில் தமிழின் ஒரு சிறப்பு ஒரு சொல்லை எழுதுவது போலவே வாசிப்பது. (பேசுவது வேறுபடும்). ககரத்தை ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (42)

  பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (41)   தமிழ் இலக்கணப்படி  ஓர் அரசன், ஒரு மன்னன் என்றுதான் எழுத வேண்டுமா? -ஒரு தமிழாசிரியர் பதில்: உயிரெழுத்தில் துவங்கும் பெயருக்கு முன் வரும் எண்ணுப் பெயரடை நெடிலிலும், மெய்யெழுத்தில் துவங்கும் பெயருக்கு முன் வரும் எண்ணுப் பெயரடை குறிலிலும் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்தவரை எந்த மரபிலக்கணத்திலும் விதி இல்லை. பழைய இலக்கியத்தில் இந்த வேறுபாடு பெரும்பான்மை வழக்காக இருக்கலாம். அதே சமயம் மாறான வழக்கையும் பழைய இலக்கியத்தில் பார்க்கலாம். தமிழில் ஒரு  ...

Read More »

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (41)

  பேரா. இ. அண்ணாமலை வினா ‘மயில் போல் அழகு / மயில்போல் அழகு’ என்று ’போல்’, ’போன்ற’ ஆகிய உவமையுருபுகளைப் பிரித்தும் தனித்தும் எழுதுகிறோம். இவற்றைத் தனித்து எழுதலாம? வேற்றுமையுருபுகளை, ராமனை, ராமனால், ராமனுக்கு எனப் பிரித்தெழுதாமல் எவ்வாறு பெயர்ச்சொற்களோடு சேர்த்தெழுதுகிறோமோ அதுபோல, உவமையுருபுகளையும் சேர்த்துத்தானே எழுதவேண்டும்?. சிவகுமார் பதில் சொற்களுக்கிடையே இடம் விட்டு எழுதுவது தமிழ் அச்சுக்கு வந்தபோது துவங்கிய மரபு. ஓலைச் சுவடிகளில் சொற்கள் இடைவெளி இல்லாமல் இருக்கும். செய்யுளில் யாப்புத் தெரிந்தவர்களுக்குச் சீர் பிரிக்கத் தெரியும். அது சொல் ...

Read More »

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 40

பேராசிரியர் இ.அண்ணாமலை   இதற்கு முந்தைய கேள்வியும் பதிலும்   பெண்வழிச்சேறல் என்பதன் சரியான பொருள் என்ன? இங்கு வல்லின “ற ” செய்யும் பணி என்ன? “ஏறு”, “அல்” ஆகிய சொற்கள் இங்கு மறை நிலையாய்ப் பொதிந்துள்ளனவா? பொதுவாக, செய்யவேண்டியவற்றையும், விலக்கவேண்டியவற்றையும் தெளிவாக உரைப்பதில் வல்லவரான வள்ளுவர், இங்கு உண்மையில் என்ன சொல்லவருகிறார்? –அவ்வை மகள்   பதில்: திருக்குறளின் தொண்ணூற்றொன்றாம் அதிகாரம் பெண்வழிச்சேறல். இதற்கு முந்திய அதிகாரம் பெரியாரைப் பிழையாமை பற்றியது; அடுத்தது வரைவின் மகளிர் பற்றியது. பெண் வழி நடக்காதே ...

Read More »

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 39

  நினைவு கூரல், நினைவு கூறல் எது சரி? -சிறீதரன் கூரினார் என்று கூறுதல் என்பது சரியன்றுதானே? கூரப்பட்டது என்பது செயப்பாட்டு வினைதானே? ஆனால் சேரப்பட்டது என்னும் செயப்பாட்டு வினை வடிவம் கிடையாதே?-C.R. செல்வக்குமார். கூகுளில் தமிழ்மன்றக் குழுவினரிடம் நடந்த விவாதம் நினைவுகூரல் / கூர்தல் என்பதே வழக்கு. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் ‘கூர்’ என்னும் வினைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் ‘மிகு’ என்னும் பொருளே இலக்கியத்தில் அதிகமாக வருவது. ஓருயிரிலிருந்து பல்லுயிர் ஆதல் என்னும் பொருளில் கூர்தலறம் ‘evolution’ என்ற கலைச்சொல் படைக்கப்பட்டது. ...

Read More »

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 38

    கேள்வி : பாரம்பரியம் என்பது சரியா அல்லது பாரம்பரீயம் என்பது சரியா?   பதில் : சொல்லெழுத்தை (spelling) பயிலுதல் எழுத்தறிவு (literacy) பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேசுவது போலவே எந்த மொழியும் எழுதுவதில்லை. அதனால் எழுத்தறிவில் சொல்லெழுத்தைப் பயிலுவதற்கு அதிகக் கவனம் தரப்படுகிறது. எந்த மொழியிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும் வேகத்தில் சொல்லின் எழுத்து வடிவம் மாறுவதில்லை. தமிழைப் பொறுத்தவரை பேச்சில் உச்சரிப்பு மிகவும் மாறியிருக்கிறது. ஆனால் சொல்லெழுத்து மாறியது மற்ற மொழிகளில் மாறியதை விட மிகவும் குறைவு. ...

Read More »

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 37

கேள்வி தற்காலத் தமிழ் – மலையாளத்துக்கு இடையே இயந்திர மொழிபெயர்ப்பு முயற்சி செய்யும் போது இலக்கண மாற்றமும் நிகழவேண்டும். அவ்வாறெனில் இலக்கணத்தில் எவ்வெக்கூறுகள் மாற்றப்பட வேண்டும்? மலையாளம் தமிழ் மொழியோடு மிகவும் ஒன்றுபட்டு இருப்பதால், தற்காலத்தமிழ் இலக்கணத்திற்கு எழுதப்பட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கண அமைப்பின் கண்ணோட்டத்தோடு மலையாள மொழியைப் பார்க்கலாமா? எல்லா மலையாள இலக்கணக் கூறுகளையும் தமிழை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒப்பிட்டு நோக்கலாமா? விஜயராஜேஸ்வரி, கேரளப் பல்கலைக்கழகம் பதில் இயந்திர மொழிபெயர்ப்பைப் பற்றிப் பேசும்போது, சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். ...

Read More »

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 36

  கேள்வி : இத்தனை காலமாக இந்தியாவின் ஒரே செம்மொழி என்று கூத்தாடப்பட்டு வந்த வடமொழிக்கு இல்லாத, அதேபோது தமிழுக்கு மட்டுமே இருப்பதாக, நிறுவப்பட்ட சிறப்புகள் எவை? அவை நிறுவப்பட்ட பின்தான் – வேறுவழியின்றி – நம்மை மைய அரசு ‘கண்டு’ கொண்டதாக அறிகிறேன். தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இனிமை தனிமை, இளமை, வளமை, இறைமை, மறைமை, தாய்மை, தூய்மை, அம்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் செம்மொழிக்கு இலக்கணம் என்று படித்தேன். இவற்றில் வடமொழி பெறத் தவறிய தகுதிகள் எவை? ...

Read More »