இயற்கையில் எழுந்த இசை

இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

நிர்மலா ராகவன் குமரேசா ஒவ்வொரு பாட்டை எழுதி முடித்தபின்னரும், கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்று `அரங்கேற்றம்’ செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒரு முறை, `எல்லார்மேலேயும் எழுதறியே! என்மேலே ஒரு பாட்டு எழுதக்கூடாதா?’ என்று முருகன் கேட்பதுபோல் இருந்தது. பயந்துவிட்டேன். பாட்டு தானாகவேதான் எழவேண்டும். இல்லாவிட்டால் நன்றாக இருப்பதில்லை. அதற்கடுத்த வாரம் பினாங்கு தண்ணீர்மலையிலுள்ள முருகன் கோயிலுக்குப் போனபோது, `ஒனக்குப் பாட்டு வேணும்னா, நீயே சொல்லிக்கொடு!’ என்று பாரத்தை அவன் தலையிலேயே போட்டேன். சரியாக ஒரு வாரம் கழித்து, `குமரேசா’ என்ற பாடலின் முதல் பாகம் ...

Read More »

இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3

நிர்மலா ராகவன் சடை விரிந்ததேன்                   கோயம்புத்துரில் ஒரு சிற்றுண்டிசாலைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கியபோது, “அம்மா! சிவன் மேலே `ஏன், ஏன்’னு கேக்கறமாதிரி ஒரு பாட்டு எழுதேன். பேகட ராகத்திலே இருக்கணும்,” என்று ஷீலா ஒரு வேண்டுகோள் விடுத்தாள். உடனே, `சடை விரிந்ததேன் சிவனே?’ என்று பாடிக்காட்டினேன். “இதேதான்!” என்று ஆர்ப்பரித்தாள். எங்களிருவரையும் வீட்டுக்கு அழைத்துப்போக வந்த என் இளைய சகோதரியிடம், “எனக்கு ஒரு பாட்டு வந்தது,” என்று உற்சாகமாக அந்த ஒரு வரியைப் பாடிக்காட்டினேன். நான் எதற்கு அடிபோடுகிறேன் என்று அவளுக்குத் தெரியாதா! “எனக்குப் ...

Read More »

இயற்கையில் எழுந்த இசை – பகுதி 2

நிர்மலா ராகவன் பாறைமேல் சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்று உணர்ந்த புருஷாமிருகத்தின் கதை. இக்கதையைப் படித்துவிட்டு, நான் என் பேரனுக்குச் சொன்னேன், வழக்கம்போல் பீமனும் அக்காட்டு மிருகமும் ஒருவரோடொருவர் சண்டை போடுவதை நடித்துக்காட்டி. “இதைப் பாட்டாக எழுது. மிக நன்றாக இருக்கும்,” என்று மகள் ஷீலா கூறிப்போனாள். ஒவ்வொரு காட்சியையும், நாட்டிய – நாடகபாணிக்கு ஏற்ப எப்படி அமைப்பது என்று நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அது மட்டுமா? நான் எடுத்துக்கொண்ட ராகம் தானாக மாறி, பிருந்தாவன சாரங்காவாக ஆகியது. கிருஷ்ணருக்கு உகந்த இடம் பிருந்தாவனம், ...

Read More »

இயற்கையில் எழுந்த இசை – பகுதி 1

நிர்மலா ராகவன் முன்னுரை “நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்!’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்தாள். விடாமல், மறுபடியும் கேட்டபோது, “பாட்டா!’’ என்று முதலில் அயர்ந்தேன். “எனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியாது. ஏதோ, கதை, கட்டுரை. நாடகம், நாட்டிய விமரிசனம் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரையாவது கேட்டுப்பார்!” “அம்மாவே மறுத்தால், நான் யாரைக் கேட்பது?” என்றாள், பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு. அதில் பொதிந்திருந்த லாஜிக் என்னைச் சம்மதிக்கவைத்தது. முதல் பாடல் எழுத ஆரம்பிக்கும்போது அச்சமும் கூடவே எழுந்தது. விக்னமில்லாமல் ...

Read More »