Author Archives: ஜெயராமசர்மா

மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவரையும் அவர் தொடங்கிய  அரும்பெரும் சேவையையும் நினைக்கும் நாளே மே 8.  இறை பக்தியும், மனித நேயமும், கருணையும் கொண்ட குடும்பத்தில் ஜெனீவா என்னும் இடத்தில் 1828ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள், இம்மண்ணில் மலர்ந்தார். ‘வளரும் பயிர் முளையிலேயே‘ தெரியும் என்பார்கள். ஹென்றி டியூனன்டும் பயனுள்ள பயிராய் முளைவிட்டார்.  மற்றவருக்கு உதவ வேண்டும், மற்றவர் படுகின்ற துன்பங்களைப் போக்க வேண்டும் என்னும் நல்ல சிந்தனைகள் ஹென்றியின் இளம் பருவத்திலேயே முகிழ்த்துவிட்டது எனலாம். சமுதாய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு அவரின் பெற்றாரும் உற்ற துணையாக விளங்கினார்கள். சிறையிலே கைதிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கடுமையான ...

Read More »

மெல்பேண் மாநகரில் துவாரகன் – அபிதாரணி மிருதங்க அரங்கேற்றம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  ஆஸ்திரேலியா  முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க  அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின்னணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இருமருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன. வாழைகளின் நடுவில் பச்சையினை வெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருகேற்றி நின்றன. மேடையின் முன்னே மங்கலமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய்க் கோலமிட, கோலத்தின் நடுவே ...

Read More »

பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆஸ்திரேலியா அந்தணக் குலத்தில் ஆளுமைகள் பலர் இருந்து அரும்பணிகள் ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் கிரியைகளை ஆற்றும் நிலையிலும் அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அகவொழுக்கம், புறவொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் எனலாம். வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. விக்கிரகங்களைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகெனலாம். கிரியைகளை ஆற்றி ஆலய ...

Read More »

சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,  ஆஸ்திரேலியா சித்திரைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா? தைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா? என்று ஒரு போராட்டமே நடந்து கொண் டிருக்கிறது. அந்தப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அரசி யல் கட்சிகளின் கொள்கையாக்கப்பட்டு; அக்கட்சிகள் சார்பாக அறிஞ ர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி பெரும் சர்சையினை உருவாக்கி ஆட்சிகள் மாறும் வேளை காட்சிகள் மாறியதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பலரும் சித்திரைத் திருநாளையே தமிழர்தம் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதே. திருநாளினைக் கொண்டாடுவதன் நோக்கமே மனமகிழ்வும் மனநிறைவுமேயாகும். அதனை விட்டு விட்டு அங்கும் ...

Read More »

ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா [ஏப்ரல் 10ஆம் நாள், உலக ஹோமியோபதி நாள்.  என் தந்தையார், என் தாய்மாமன் ஆகியோர், ஹோமியோபதி வைத்தியர்கள் ஆவர். நானும் ஹோமியோபதி பற்றி என் தந்தையாரிடம் அறிந்திருக்கிறேன். ஓரளவு அதில் பயிற்சியும் இருக்கிறது. என் தாயாரின் அப்பா அதாவது என் தாத்தா, பிரபலமான ஆயுள்வேத வைத்தியர். அந்த வகையில் ஹோமியோபதி நாளினைக் கருத்திருத்தி இக்கட்டுரையினை வழங்குகின்றேன்.] பிறப்பு என்பது நல்லதொரு வரமாகும். ஆனால் இறப்பும் அதனுடன் இணைந்தே இருக்கிறது.பிறந்தவுடன் கொண்டாடி மகிழ்கின்றோம். பல வித கற்பனைகள் சிறகடிக்க வாழ்க்கை என்னும் வானில் சிறகடித்துப் பறந்தும் வருகிறோம்.அப்படி சிறகடிக்கும் வாழ்வில் எப்படியோ நோய்கள் வந்து எங்களின் இன்பக் கனவு களைச் சிதறடித்து விடுவதையும் காண்கிறோம். இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற ...

Read More »

பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் “பக்தி இலக்கியம்” என்னும் சிறப்பாகும். பக்தி என்பது – இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய், வளர்ந்து யாவரும் வியக்கும் ...

Read More »

ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா.      சித் என்றால் அறிவு, ஞானம், தெள்ளிய பார்வை, கூர் நோக்கு, விரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் – சித்தர்களை அறிவாளிகள், ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள், கூர்ந்த நோக்கினை உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் ...

Read More »

நற்றுணையாவது நமச்சிவாயவே

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  ஆஸ்திரேலியா  சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது. பசித்திரு – தனித்திரு – ...

Read More »

பெண்களுக்கும் சமூகநீதி!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  ஆஸ்திரேலியா “பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே. இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த ‘கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமை, பெண்களின் நலன், யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் ...

Read More »

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். ஆனால் சென்றவருடம் பொங்கலைப் பொங்கி மகிழ்ந்த பின்னர் கண்ணூறு பட்டதுபோல் சீனாவின் சீதனம் வந்திறங்கியது. சீதனத்தின் சீரழிவால் வாழ்வே தடம்புரண்டு நிற்கும் நிலை ஆகிவிட்டது. பொங்கல் இப்பொழுது வந்து நிற்கிறது. பொங்குவதா விடுவதா? பொங்கினால் பகிர்ந்து கொடுத்து மகிழலாமா? அல்லது அவரவர் பாட்டில் வீட்டிலே பொங்கி நிற்பதா என்றெல் ல்லாம் எண்ணத் தோன்றுகிறது ...

Read More »

மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா. இருபதே சென்றுவா இருபதொன்றே நன்றுவா வந்திடும் கொரனாவை வராதுமே செய்துவா! நல்லன அளிக்கவா வல்லன கொடுக்கவா வெல்லுவோம் என்றிடும் வீரத்தை உணர்த்தவா! மதுவினை ஒழிக்கவா மங்கையர் காக்கவா சதிகளை தடுக்கவா சன்மார்க்கம் நிலைக்கவா! அரசியல் சிறக்கவா ஆட்சிகள் நிலைக்கவா கயமைகள் விரட்டவா கண்ணியம் காக்கவா! உழவர்கள் உயரவா உழைப்பவர் சிரிக்கவா கயவர்கள் ஓடவா காமுகர் மடியவா! ஆணவம் அகலவா ஆன்மீகம் பெருகவா நாடெலாம் நலமுடன் நாளுமே இருக்கவா! கற்றிடும் மாணவர் கல்வியில் உயரவா பெற்றவர் வாழ்விலே பெருஞ்சுமை ...

Read More »

நாவலர் பெருமான்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா  அன்னியமாம் பேரிருளில் அகப்பட்ட சைவமதை முன்னின்று பேரொளியாய்க் காத்திடவே வந்தமைந்த நல்லைநகர் நாவலராய் நல்வரமாய் ஆறுமுகம் எல்லோரும் மதித்திடவே பிறந்தனரே ஈழத்தில் கருவினிலே சமயநெறி நிறைந்தவராய்ப் பிறந்தமையால் கருதியது அத்தனையும் சமயநெறி ஆகியது குறைகளையப் புறப்பட்ட குறையில்லாப் பெருமகனாய் நிறையறிவாய் விளங்கினரே நிமலனருள் நாவலரும் நீறணிந்த மேனியராய் நெஞ்சமெலாம் சிவனினைவாய் ஆறுமுக நாவலரும் ஆசாரம் பேணினரே தந்தையினைக் குருவாக்கி தாம்கற்றார் பலவற்றை ஐயமின்றி கற்பதிலே அவர்கவனம் நின்றதுவே ஆங்கிலத்தைக் கற்றிட்டார் அன்னியத்தை ஒதுக்கிட்டார் அழகுதமிழ் இலக்கணத்தை அறிந்துவிட ...

Read More »

கதிரவன் எழுந்தனன் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா. கதிரவன் எழுந்தனன் காரிருள் அகன்றது பறவைகள் பாடின பகலவன் மகிழ்ந்தனன் நிலமகள் மலர்ந்தனள் நீள்துயில் கலைந்தது மலர்களின் வாசனை வளியினில் கலந்தது சங்கொலி கேட்டது சன்னதி திறந்தது மங்கல வாத்தியம் மனமதை நிறைத்தது கருவறை திறந்தது கரமெலாம் குவிந்தன மந்திரம் ஒலித்தது மனந்தெளி வடைந்தது மணிநிறை கதிர்கள் மண்ணினைத் தொட்டன குலையொடு வாழைகள் தளர்விலா நின்றன அணிலது கடியால் சிதறின மாங்கனி அயர்விலா உழவர் வயல்களில் இறங்கினர் கன்றுகள் ஓடின கறவைகள் சுரந்தன வண்டுகள் பறந்துமே தேனினைச் ...

Read More »

தீபம் ஏற்றுவோம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா. கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர் கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர் வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர் வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர் அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர் சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர் கார்த்திகைப் பெண்கள் ஏந்திய குழந்தை கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க கந்தனைச் சொந்தமாய்க் கொண்டிடும் பக்தர் கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர் மாலயன் அடிமுடி தேடிய நிலையில் மாபெரும் சோதியாய் வந்தனன் ...

Read More »

சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா  வேலினைக் கையில் ஏந்தி வெற்றியைத் தந்த கந்தன் மூலமாய் நின்ற மூர்த்தி பொறியிலே வந்த கந்தன் கார்த்திகைப் பெண்கள் ஏந்த கந்தனாய் ஆன தெய்வம் கலியுகம் காக்க என்றும் கருணையாய் நிற்கும் தெய்வம்! ஆணவம் அழித்த கந்தன் அகவிருள் அகற்றும் கந்தன் பேணிடும் அடியார்க் கெல்லாம் பேரருள் ஈயும் கந்தன் நாமெலாம் விரும்பி நிற்கும் நல்லையில் உறையும் கந்தன் சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்! சூரரை வதைத்த கந்தன் சூழ்ச்சியை அறுக்கும் கந்தன் மாயிருள் ...

Read More »