மக்கள் திலகம்

’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்

பவள சங்கரி அன்பினிய நண்பர்களே! வணக்கம். நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின் கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்துவதற்கு தங்கள் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

–புவனா. எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து… தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை. இளம் சூரியன் உந்தன் வடிவானதோ.. செவ்வானமே உந்தன் நிறமானதோ .. பொன் மாளிகை உந்தன் மனமானதோ .. என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம். அவர் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— மணிமுத்து.     நான் அறிந்த எம்.ஜி.ஆர்! குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்! என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்! வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— கொ.வை. அரங்கநாதன்.   வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள்திலகம்

–சௌ. செல்வகுமார்.   படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்   புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன். பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— ஞா.  கலையரசி.   “காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ!” என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்! “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்! “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— முனைவர் இதயகீதம் இராமனுஜம். பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். முன்னுரை: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடினார். ஏன் தெரியுமா? பயிர் விளைந்தால்தான் உணவு கிடைக்கும். உணவு கிடைத்தால்தான் மக்கள் வாழ்க்கை செழிக்கும். அந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது இயற்கை. இதுவே வள்ளலாரின் சிந்தனையாக இருந்தது. அதே போல மக்கள் குறிப்பாக ஏழைக் குழந்தைகள் வாடியதால் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பெருந்தலைவர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்தான முத்தான திட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியவர் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— ஜெயஸ்ரீ ஷங்கர். யோகத்தின் முகவரிகள்: நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— சுரேஜமீ.   நான் பார்த்த எம்.ஜி.ஆர் அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, களத்த்தில் நிற்கும் ஜாம்பவான்களுக்கிடையே, புதிதாய் முளைத்த இலை வருகிறது! முதன் முதலில் எங்கள் வீட்டில், DMK & ADMK என்ற சொற்கள் உபயோகிகப் படுகின்றன. அதுதான், என் முதல் பசுமையான நினைவு மக்கள் திலகம் பற்றி! (1976-77). அதன் பின்னர், வெள்ளித் திரையில் நான் பார்த்த பல திரைப்படங்கள்! ஒரு காலத்தில் காலை, பகல் மற்றும் இரவுக்காட்சியென மூன்று வேளைகளிலும் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

–ஆகிரா. அறிமுகம்: “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— சி. எஸ். குமார்.     உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே. எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

–சக்தி சக்திதாசன். “மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது . ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல. அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது? மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன். பதில் மிகவும் விசித்திரமானது. “மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் ...

Read More »

மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்

–சித்தார் கோட்டை நூர் மணாளன்.   பிறப்பும் சிறப்பும்: வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி… மக்களின் மனதில் நிற்பவர் யார்…? என்ற இந்த வினாவை தமிழறிந்த மக்களிடம் வினவினால் எம்.ஜி.ஆர். தான் என பட்டென பதில் வரும்! இந்த இருபதாம் நூற்றாண்டில் திரையுலகிலும் அரசியலிலும் விடி வெள்ளியாக ஒளிர்ந்து, தொட்டதெல்லாம் துலங்க கொடிகட்டிப் பறந்து நட்புக்கரம் நீட்டி தன்னை நேசித்த நெஞ்சங்களை அரவணைத்த அற்புதமான கரத்திற்கு சொந்தக்காரரே எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக் காரர்தான். மாநிலத்தில் மானிடராய் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால்… ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— சுடர்மதி மலர்வேந்தன்.  முன்னுரரை: “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை… எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” கவியரசரால் எழுதப்பட்ட தீர்க்கமான வரிகள். சரித்திரப் பக்கங்களில் இடம்பெற்ற ஒரு மனிதரின் … திருத்தம்… தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப் பற்றியதோர் கட்டுரை. தொட்டவை அனைத்தும் வெற்றிகளாகவே வந்து மடியில் தவழ, இவர் என்ன அதிசயப் பிறவியா? கேள்விகள் இன்றும் கூட இப்படித்தான் கேட்கப்படுகின்றன. இவரைப்பற்றி அறியும்பொழுது, 20-ம் நூற்றாண்டில் பிறந்து, இன்றளவும் நம் உணர்வோடு உறவாடும் மா மனிதர்… மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார்… ...

Read More »

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

-ஆர். எஸ். கலா, மலேசியா மக்களின் பாட்டாளி மக்களின் கூட்டாளி மகத்துவம் நிறைந்த சோக்காளி மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி மாறாத மனம் கொண்ட அறிவாளி கண்ணியம் தவறாத மாமனிதன்                      கடமையிலே மகாமனிதன்! பூப் போன்ற மனசு புதையல் போன்ற உள்ளம் புன்னகை மாறாத  முகம் ஏழைகளின் குடிசைக்கு  விளக்கு ஒளி ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக் கை விலங்கு! ஆட்சியில் கிடைத்த காட்சி அழிக்க முடியாத ராச்சியம் கடமை கண்ணியம் கட்டுப்பட்டை உடையாக உடுத்திய கொடை வள்ளல் உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை மீட்டார்! வறுமையின் பிடியில் ...

Read More »