மரபுக் கவிதைகள்

அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா நினைத்ததும் அன்பு தருவாயா . முறுவலில் முத்தமருள்வாயா அம்மா மடியினில் இடம்தருவாயா ( ….) சுமையென யெனை நினைத்தாயா இல்லை சுகமென அகமகிழ்ந்தாயா வலியினில் யெனை ஈன்றாயா அன்றி கவியினில் தமிழ் கலந்தாயா (….) மதியினில் ஒளி கலந்தாயா என் மனதினில் அறம் பதித்தாயா இரவிலும் கண்விழித்தாயா நான் வரும்வரை புண்பொறுத்தாயா (…) குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு கிளியென மொழிபெயர்த்தாயா அமைதியை எனக்க ளித்தாயா தினம் ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…) நெறிமுறை தனைச் சமைத்தாயா ...

Read More »

உய்

அண்ணாகண்ணன் எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் – மெய்யமுது உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து! ============================== Pic courtesy: https://www.maxpixel.net

Read More »

இனச்சுடர் எழுக!

ஏறன் சிவா வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார் மனங்களில் ஒளிவிடும் சுடரே! தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில் திடமுள மழலையாய்ப் பிறந்தாய்! மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர் அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்! பைந்தமிழ் மக்கள் தோள்களில் ஏறிப் பாரெலாம் ஊர்வலம் புரிந்தாய்! பொன்னிறத் தட்டில் பொலிவுறு மணியாய்ப் புகழுடன் வளமுடன் திகழ; மண்பிறப் பில்..நீ மாபெரும் பிறப்பை அடைந்ததை வெறுக்கிற சிலரோ; நற்றமிழ் மொழியை நவில்வதால் தமிழ்த்தாய்ப் பிள்ளைமேல் இனக்கொலை தொடுத்தார்! எற்றைக்கும் சுடரை இருள்கரம் மறைக்காது என்பதை அறிகிலார் மூடர்! பெருகுக விரைந்து ...

Read More »

மவுனத் தேன்

அண்ணாகண்ணன் இந்தக் கவிதையை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்   **************** விரைந்து செல்லும் வாக னத்தில் ஜன்னல் ஓரம் சாய்கிறேன்! விரியும் காற்று முகத்தில் மோத, மவுனத் தேனில் தோய்கிறேன்! மழையில் நனையும் போதில் கண்ணீர் மறைந்து வழியும் கண்ணிலே! பழைய பாடல் ஒலிக்கும் நேரம் பனிக்கும் என்றன் கண்களே! தூய சிரிப்பைப் பார்க்கப் பார்க்க, துள்ளும் என்றன் இதயமே. நேயம் ஓங்கும் நேரம் எல்லாம் நெஞ்சம் விம்மி நெகிழுமே! எளிய மனிதர் வெல்லும் செய்தி எனக்குள் சக்தி பாய்ச்சுமே! துளியில் வெள்ளம் ...

Read More »

கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

கவியோகி வேதம் கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால் கவலையும் உன்னைவிட் டோடி டாதோ? அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம் அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ? விண்ணில்உன் கற்பனை பாய்ந்து சென்றால் மேவிடும் காட்சிகள் இன்பமன்றோ?!-மனக் கண்ணிலே தென்படும் அமுதக் குடம்உன் கவலை- அசுரரை மாய்க்குமன்றோ! வளைந்துமே விண்ணிலே ஓடும்அந் நாரையும் மாயைய டாஇந்த உலகம் என்னும்! உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம் ஒன்றாகிச் சொற்களுள் தேய்ந்து விடும்!! கவிதையாம் வானில்நீ பார்க்கலையோ அந்தக் கந்தர்வன் ரம்பையைத் தழுவுவதை?- புவியைத் தொடப்போம் இருள்முகிலும் உன்னில் புதுமையாம் ...

Read More »

திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

கவித்தலம்  கை. அறிவழகன் திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் என்னும் ஊருக்கு அருகில்  அமைந்துள்ள ஊர்தான்  திருமீயச்சூர்  என்பதாகும். இவ்வூரில் அமைந்துள்ள பழமையான கோவில் மேகநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவி பெயர் லலிதாம்பிகை. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இக்கோவிலைப் பாடியுள்ளார். இந்தக்  கோவிலின் உள்ளேயே இளங்கோயில் ஒன்று உள்ளது. இதனைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது  56 ஆவது சிவத்தலமாகும்.  இந்தத்  தலத்தையும் இறைவனையும் பற்றித் தற்காலத்தில் எழுதப் பெற்ற நூல்தான் திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை ...

Read More »

தமிழரின் நாக்கு!

ஏறன் சிவா  மீன்புலிவில் வேந்தருடை மெய்யுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர் வான்முட்டும் வரலாற்றை வகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — இங்கே காண்!தமிழர் அறிவியலைக் கணத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — பாரில் நான்தமிழன் எனப்பெருமை நவில்வதற்குத் தமிழர்நா கூசாது! வெல்நாட்டுப் போர்வெற்றியை விளக்குதற்குத் தமிழர்நா கூசாது!  — அவர் வல்கோட்டைக் கட்டியதை வாயுரைக்கத் தமிழர்நா கூசாது! — அணைக் கல்கோட்டைக் காலத்தைக் கணித்துரைக்கத் தமிழர்நா கூசாது! – தமிழ்ச் சொல்கோட்டைப் பெரிதென்றுச் சூளுரைக்கத் தமிழர்நா கூசாது! நெல்விளைக்கும் வேளாண்மையின் நெறியுரைக்கத் தமிழர்நா கூசாது! — ...

Read More »

கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

கொடியேறி குடையாகி அடியேற்றி மகமாயி கொடிதான கொரானா மகிடனாய் வதமேவ படியேறி மருந்தாகி பரவாத படியாக குடியேறி வந்தாளே குவலயம் காக்கும்படி ஓங்கார ஒளிசோதி ரீங்கார ஒலியாகி ஆங்கார அரக்கரை அடங்கா பிணியோட தேங்காது வேம்பிடை தெரியாத படியாக தூங்காது நீக்கினளே நிமிர்ந்தெழு மானிடமே திரிசூலக் கூராகும் திகம்பர நேராகும் அடிகூட செம்மையா குங்கும நிறமேறி அதான மருந்தாய் அன்னை ஆகிவிட கலிகால நேராகும் காளியடி பணிவோமே கோதையைப் பழித்தனர் கீதையைக் கடிந்தனர் பாதையைப் பிரித்தனர் பகைமையை வளர்த்தனர் போதையில் அந்தணர் மறையினைைக் கிழித்தனர் ...

Read More »

தஞ்சைப் பெருவுடையான்

-விவேக்பாரதி தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்… உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத் தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற் றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!    

Read More »

தமிழர் திருநாள் வாழ்த்து!

ஏறன் சிவா வீடெலாம் தோரணங்கள்!        வியத்தகு கோலம் கொள்ள! மாடெலாம் அணிகள் பூண்டு        மகிழ்ச்சியில் எம்பித் துள்ளக் காடெலாம் கழனி எல்லாம்         காய்,கனி குலுங்கித் தள்ளப் பாடலாம் வாரீர் என்றே         பைந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!   ஏடெலாம் இழந்த தாலே          இழந்தநம் சிறப்பை மீட்கக், கூடலாம்! புதிதாய்ச் செம்மைக்         கொள்கைகள் வகுத்து இந்த ...

Read More »

புரட்சித் துறவி

அண்ணாகண்ணன் ஞானகுரு யோகவுரு ஞாலவொளி யானதிரு வானமதி பூணுறுதி வையநிதி – தேனமுது! புத்தெழுச்சி யூட்டு புரட்சித் துறவிநரேன் சித்தெழுச்சி யூட்டு சிவம்! (சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டினை முன்னிட்டு எழுதியது)

Read More »

மந்திரத் திருவடி

மரபின் மைந்தன் முத்தையா   வணங்கா முடியும் வணங்கும் திருவடி இணங்கா அசுரரும் இணையும் மலரடி துணங்கை வென்று துலங்கும் கழலடி குணங்கள் கடந்த கயிலைச் சிவனடி வேதப் பொருளென விளங்கும் திருவடி ஆதிச் சுடர் என ஆடும் கழலடி நாதமும் தாளமும் நாடும் மலரடி மாதொருபாகன் மந்திரத் திருவடி சித்தர்கள் தேடிச் செல்லும் திருவடி பக்தர்கள் அஞ்சிப் புல்லும் திருவடி சத்திய ஞானியர் சொல்லும் திருவடி வித்தகன் சிவனின் வெல்லும் திருவடி தென்னாடுடைய தெய்வக் கழலடி எந்நாட்டவரும் எண்ணும் திருவடி பொன் கைலாயம் பொருந்தும் ...

Read More »

இருபது இருபது

அண்ணாகண்ணன்   புதியது மேவும் புவியில் எந்நாளும் விதியதை வெல்லும் வினைத்திறம் ஆளும் மதியது ஓங்கும் மாற்றம் உண்டாகும் இருபது இருபதில் ஏற்றம் உண்டாகும்!   பெறுவதும் உறுவதும் பெருமைகள் ஆகும் கனவிலும் நனவிலும் களிநகை ஊறும் எழுவதில் எழுவதில் எல்லைகள் விரியும் இருபது இருபதில் இனிமைகள் சேரும்!   களைவதும் அணிவதும் நித்திய வேடம் விடுவதும் தொடுவதும் பந்தயப் பாடம் இருப்பதும் மறைவதும் காட்சியின் மாயம் இருபது இருபது வேட்கையின் வேகம்!   அனுதினம் இங்கே அனுபவம் ஏறும் நுண்கணம் தோறும் நூதனம் ...

Read More »

ஏக்கம் மட்டும் போகவில்லை!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணின் நலந்திகழும் நினைவுகளை மறந்துவிட  முடியவில்லை உளமகிழப் பொங்கிநின்றோம் உவகையுடன் நாமிருந்தோம் வளமிழந்தோம் வாழ்விழந்தோம் புலம்பெயரும் நிலையானோம்! பண்பாடு  கலாசாரம் விட்டுநாம் அகலவில்லை பக்குவத்தை விட்டெறிந்து பறந்துமே திரியவில்லை கோயில்பல கட்டினோம் குலதெய்வம் நிறுவினோம் காலைமாலை தவறாமல் கடவுளிடம் முறையிட்டோம்! சாதிபற்றி எழுஞ்சண்டை சலசலத்துப் போனது சரிசமனாய் வாழுதற்கு உரியநிலம் ஆனது பேதமெனும் மனப்பேயும் பேதலித்துப் போனது என்றாலும் பிறந்தமண்ணின் ஏக்கம்மட்டும் போகவில்லை!

Read More »

கழல் தொழுதல் முறையல்லவா !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், அவுஸ்திரேலியா உண வூட்டும் கையதனை உதறி நிற்கும் உள்ளங்களே மன முடைந்து நிற்கின்ற நிலை யுமக்குத் தெரியலையா தின மும்மை கண்விழித்து, கண நேரம் பிரியாமல் பிணி யனைத்தும் தான்சுமந்த சுமை தாங்கி நினைவிலையா! அணி மணிகள் கண்டாலோ துணி வகைகள் பார்த்தாலோ வகை வகையாய் வாங்கிவந்து வடி வாக்கும் மனமல்லவா இரவு பகல் தெரியாது எதையும் தனக் காக்காது நில வுலகில் உமைமட்டும் நினைத்த மனம் கலங்கலாமா! கண் இருந்து நீர்வடிந்தால் புண் ணாகிப் போம்மனது தண் ...

Read More »