Author Archives: சத்திய மணி

அம்மாவுக்கு மின்னஞ்சலி 2021

அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா நினைத்ததும் அன்பு தருவாயா . முறுவலில் முத்தமருள்வாயா அம்மா மடியினில் இடம்தருவாயா ( ….) சுமையென யெனை நினைத்தாயா இல்லை சுகமென அகமகிழ்ந்தாயா வலியினில் யெனை ஈன்றாயா அன்றி கவியினில் தமிழ் கலந்தாயா (….) மதியினில் ஒளி கலந்தாயா என் மனதினில் அறம் பதித்தாயா இரவிலும் கண்விழித்தாயா நான் வரும்வரை புண்பொறுத்தாயா (…) குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு கிளியென மொழிபெயர்த்தாயா அமைதியை எனக்க ளித்தாயா தினம் ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…) நெறிமுறை தனைச் சமைத்தாயா ...

Read More »

கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

கொடியேறி குடையாகி அடியேற்றி மகமாயி கொடிதான கொரானா மகிடனாய் வதமேவ படியேறி மருந்தாகி பரவாத படியாக குடியேறி வந்தாளே குவலயம் காக்கும்படி ஓங்கார ஒளிசோதி ரீங்கார ஒலியாகி ஆங்கார அரக்கரை அடங்கா பிணியோட தேங்காது வேம்பிடை தெரியாத படியாக தூங்காது நீக்கினளே நிமிர்ந்தெழு மானிடமே திரிசூலக் கூராகும் திகம்பர நேராகும் அடிகூட செம்மையா குங்கும நிறமேறி அதான மருந்தாய் அன்னை ஆகிவிட கலிகால நேராகும் காளியடி பணிவோமே கோதையைப் பழித்தனர் கீதையைக் கடிந்தனர் பாதையைப் பிரித்தனர் பகைமையை வளர்த்தனர் போதையில் அந்தணர் மறையினைைக் கிழித்தனர் ...

Read More »

மோகனக் கவிஞனுக்கு கவிதாஞ்சலி

சத்தியமணி புன்னகை யிருக்க பூமிக்கு சிரிக்கவழிச் சொன்னவன் சென்று விட்டான் …….1 நகைப்பினில் மின்னல் தெறிப்பவர் கண்டு திகைப்பது வைகுந்தமோ சொல்? ……..2 சிரித்திட நேரத்தில் சிந்தனைக்கு விருந்தும் இனித்தரப் போவது யாரோ ………3 மோகனைக் கண்டதும் விரிந்திடும் இதழ்களில் வேதனைச் சுமையால் வலி ………4 கேசவன் வண்ணம் கிரேசியின் எண்ணமினி வாசகன் ரசிக்க இல்லை ………5 பைத்தியம் என்றுனைப் பட்டம் இட்டதற்கு புத்திக்கு புரிந்ததே இன்று …….6 வெண்பா விரித்து விளையாட்டு புரிந்தவனை மண்பால் பிரித்தவர் யார் ………7 வெண்பா விழைந்து அன்பால் ...

Read More »

அமைதிக்காக …அமைதியாக!!

சத்தியமணி இலங்கைக்கு இன்று ? இதுபோல் எத்தனையோ அன்று ? வலக்கைக்குப் புரியும் இடக்கைக்குத் தெரியும் ? எதுவரை போகும் ? எப்போது முடியும் ? எத்துணை வருடங்கள்? இன்னும் காக்கவேணும் ? ஆலயங்களில் வெடி. ஆன்மீகத்தில் பழி. ஆண்டவர்மேல் கேலி. ஆறாத எகத்தாளம். யாரும் கண்டிக்காது எவரையும் மன்னிக்காது வன்மம் வளர்கிறது….. வஞ்சகம் விளைகிறது. கேட்டவர்க்குக் கலக்கம். தப்பித்தவர்க்கு நடுக்கம். பார்த்தவர்க்குப் பரிதாபம் ….வார்த்தவர்க்கு அனுதாபம் காயப்பட்டோர்க்கோ மயக்கம், இறந்தவர்க்கோ இழப்பு அன்புள்ளே அதிர்ச்சி……அகிம்சைக்குத் தளர்ச்சி வெறிகளாலும் வெறுப்புகளாலும் காழ்ப்புணர்வுகளாலும் கலவரங்களாலும் தன்னலங்களாலும் ...

Read More »

வாழியே தமிழே நீயும் !!

உலக கவிஞர்கள் தினமென்று தொலைக்காட்சி படித்தது உலக கவிஞர்கள் தினமின்று மனசாட்சி இடித்தது உலக கவிஞர்கள் தினம்-என்று வல்லமை விரைந்தது – மனம் உலக கவிஞர்கள் தினமென்றும் (என) தனைத் தேற்றி கொண்டது என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென‌ பாவலர் வரிகள் மீறும் இன்றும் களைக்க மாட்டோ மென்றென‌ காவலர் வரிகள் கூறும் படக் கவிதைப் போட்டிக்கு வாருமென‌ அண்ணாவின் அழைப்பில் சேரும் படக் கவிதைப் பாராட்டு பாருமென‌ மேகலையின் தேர்வில் தேறும் ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய் கிரேஸியின் வெண் பாக்கள் தேயாது ...

Read More »

அந்த வருடம், புதிய வருடம்

சத்தியமணி வருவது யாரோ??…புது வருடமா!! தருவது தானோ ?? இனிய வரமா!! முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா? உறவுகள் கூடி விருந்து தருமா? எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங் மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே… (வருவது யாரோ?) தாயுடன் பாட நேரமில்லையா? தந்தையுடன் பேச வார்த்தையில்லையா? உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே? நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே? இந்த வருத்தம் நீக்கிடுமோ அந்த வருடம் ...

Read More »

அம்மா இல்லாத தீபாவளி 

அம்மா இல்லாத தீபாவளி  அதுவே ஆறாதத் தீராவலி  உணர்ந்தவருக்குத் துயர் தெரியும்  உணராதவர்க்கு இனி புரியும்  முப்பது நாட்கள் முன்னிருந்தே  முதலாம் முயற்சியில் இற‌ங்கிடுவாள்  அப்புறம் பார்க்கலாம் மென்றிடினும்  அப்பா மனதைத் தளர்த்திடுவாள்  எப்பொழு தெங்கெனக் கேட்காமல்  இப்பொழு தெனவே இழுத்துசெல்வாள்.  எங்களின் விருப்பத் திற்கேற்றாற்போல்  எல்லாம் எல்லாம் கிடைத்திடுமே  சீருடையாய் மொத்தத் துணிவாங்கி  சிறப்பாய் தைக்கவும் தந்திடுவாள்  தந்தைக்கும் சட்டை வாங்கியப்பின்  தனக்கெனப் பிறகே யோசிப்பாள்.  திருச்சியின் பெருங்கடைச் சாலையிலே  தெப்பக்குள எதிர் சிந்தா மணியினிலும்  எங்களுக் கெனவே போரிட்டு  பட்ஜெட் பட்டாசும் வாங்கிடுவாள்  காலும் கைகளும் வலித்தாலும்  கரகரத் தொண்டைக் கனத்தாலும்  உறவினில் பிடித்தவைக் கணக்கிட்டு  இரவினில் பட்சணம் செய்திடுவாள்  எத்தனை சிக்கனம் நயத்தோடு  அத்தனை வகைகளும் சுவையோடு  இத்தனை பகுத்திட கொடுத்திடுவாள்  தனக்கென மறைக்கா தெய்வமகள்  காலையில் சீக்கிரம் எழவேண்டி  இரவினில் உறங்கிடச் செய்திடுவாள்.  விடியலின் முன்னே எழுந்தாங்கே  எண்ணெய்க் குளியலைத் தொடங்கிடுவாள்  ஆடைகள் எடுத்து அணியவைப்பாள்  ஆசையில் ஆசிகள் பொழிந்திடுவாள்  அன்புடன் பொங்கிட அணைத்துடனே  ஆண்டவன் அருளிட துதிசெய்வாள்  இட்டிலி சட்டினி இடும்போதும்  தட்டினில் விருந்தினைத் தரும்போதும்  மட்டில்லாத மகிழ்ச்சி தரும்  அம்மா வருவாய் எப்போது?  சிரிப்பில் உதிரிட மத்தாப்பு  சிலநொடி கருகிட புகையாக‌  சுழலும் சக்கரம் கக்கிவிட்டு  இருள்வெளி கோளம் ஆகிவிட  அதிரும் சரவெடி பட்டாசோ  சிதறிடத் துகளாய் வீதியிலே  புதிரும் போட்டது யாவுமெனைப்  புரிந்தது பிரிவுகள் இப்படியா? வருத்திடும் பிணியில் இருந்தாலும்  மருந்தினை உண்டிட மறந்தாலும்  விரும்பிடும் எங்களை மறக்காமல்  இருந்தவள் விட்டெனைச் சென்றது ஏன்?  சப்தமிட்ட வெடிகள் இன்றி  சாளரமெல்லாம் மூடிவைத்தேன்  மூச்சுத் திணறும் புகையென்றே  முகத்திரையும் நான் வாங்கிவைத்தேன்  தேடும் இடமெலாம் உனைப்போல  உருவம் நகர்வது தெரியுதம்மா  அகலின் விளக்கின் அடியினிலே  அம்மா உன் நிழல் ஆடுதம்மா  ...

Read More »

முப்பெரும் தேவியர்

(வஞ்சித்துறை ) மலைமகள் ஆதியாம் முதல் பாதியாம் இவள் மீதியாம்    சிவம் தூதியாம்   பணி! அலைமகள் நாரணன்  மலர் தாரணம்   இவள் காரணம்   அரி வாரணம்  அணி கலைமகள் ஞானமும்  அவள் கானமும்    இதழ் மோனமும்  சுடர் தானமும்     இனி கல்வியும் தரும் செல்வமே வரம் வெல்லென உரம் சொல்லிட  வரும் அன்னையின் புகழ் முன்னையின்  கழல் கொன்னையை  விடும் சென்னையைத் தரும்

Read More »

பொறித்துப் படி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எத்தனைக்  கொடுமையிது எத்தனைக்    கொடுமையிது இத்தருண  மிங்கே அத்தனைக்  கடுமையிது      அத்தனைக்   கடுமையிது       முத்தமிழ    ணங்கே! இத்தனைக்  காயமுடன்         இம்மகள்         துடித்தழுது        இவ்வலியு   மோடு வத்தனைக்  காய்வந்து            பலியாகி         கிடக்கிறாள்      பரிகாச        மோவிது ? பெண்ணுக்கு  சீர்மதிப்பும்  சிதறாத  ...

Read More »

தாய்மையே ! வெண்த்தூய்மையே !!

(கலி விருத்தம் ) தாயுமானவள்  தாரமானவள் தங்கையானவள்  அன்பினோடும் சேயுமானவள்  சேமமானவள்  சீருமானவள்    பண்பினோடும் வாயுமானவள்   வாசியானவள்  வாழ்வுமானவள் பண்ணோடும் வேயுமானவள்   பேருமானவள் பெண்மையாமவள்  தாய்மையே  1   ஈரமானவள்     தீரமானவள்   ஆரமானவள்  அரசனாகும் வீரமானவள்    விசயமானவள் வித்தையாகி  அகிலமாகும் வாரமானவள்   மாதமானவள் வருடமாகியே வயதுமாகும் சாரமானவள்   சந்தமானவள் சக்தியாமித் தாய்மையே         2   பெண்மையாக  மென்மையாக தந்திடும்பத்   துமாதமாக‌ உண்மையாக    இன்மையாகத்     தங்கிடும்கருப்  பையுமாக‌ தண்மையாக    திண்மையாக    கவனமாகப்  பெற்றெடுக்க‌ ப‌ண்மையாக     நண்மையாக    பிறப்பளித்த  தாய்மையே                   3   விழிகளாட்டி விரல்களாட்டி வளைகளாட்டி அம்மாயென‌ ...

Read More »

நிறையாய் வளராய்

இனிய ஆசிரியர் (குரு) தின வாழ்த்துகள்   புவியாய் கதிராய் மதியாய் வெளியாய் நிலமாய் நீராய் தீயாய் காற்றாய் மலையாய் நதியாய் ஒலியாய் ஒளியாய் சகமாய் சுகமாய் மனமாய் வளர்ந்தே!! காயாய் கனியாய் கசப்பாய் இனிப்பாய் தாயாய் பதியாய் தமிழாய் அணியாய் உறவாய் உணர்வாய் உளமாய் இதமாய் கறவாய் கவியாய் கனவாய் நனவாய் சுரமாய் சுயமாய் சுருதியாய் கிருதியாய் தரமாய் சரமாய் வரியாய் சரியாய் கரமாய் க்ரமமாய் வரமாய் வருமாய் விரியாய் குருவே திரிமேன் ஒளியே! மனமாய் குணமாய் இனமாய் மதமாய் தனமாய் வளமாய் ...

Read More »

என்னதவம் செய்தனையோ!-இரங்கற்பா

சத்தியமணி   அன்னல் அட்டல் பிஹாரி !! சினத்தையும் சிரிப்பால் சொன்னவர் இன்றுயில்லை சிரத்தையும் சிரசில் கொண்டவர் இன்றுயில்லை சிறப்பிலும் அமைதிக் காத்தவர் இன்றுயில்லை இறப்பிலும் எளிமை யேற்றவர் இன்றுயில்லை ஆட்சிகள் கவிழும்போதும் கலவரம் எழுப்பவில்லை காட்சிகள் கனத்தபோதும் நம்பிக்கை நழுவவில்லை கட்சிகள் அத்துணைக்கும் கலங்கரை விளக்கமாக மாட்சிமை பெற்றுயர்ந்தார் மதிநலம் பிறழவில்லை வன்முறை தூண்டவில்லை வாக்குகள் மாற்றவில்லை பன்முறை பரிகசிப்பில் பாரதம் சாய்க்கவில்லை மொழிவெறி இனவெறி பேசிடும் தலைவரில்லை குலவெறி கொண்டு ஆளும்குண வெறி கொள்ள‌வில்லை. ஏளனம் செய்தவர்க்கும் தண்டனை கொடுக்கவில்லை நூதனம் ...

Read More »

இரங்கற்பா – கலைஞர் கருணாநிதி யெனும்……

கலைஞர் கருணாநிதி யெனும்…… உதய சூரியன் மறைந்து விட்டது தமிழ் இதய காவியம் இறந்து விட்டது பதிய வைத்தவை படர்ந்து வளர்ந்தவை விதியெனும் சொலில் நழுவி விட்டது சென்னை யென்பதும் கோட்டையின் பலம் இன்று நமக்கென கிடைத்ததெப்படி செம்மொழி யெனும் சிறப்பு கிட்டிட‌ தம்மொழிக்குமோர் வாய்ப்பதெப்படி சாதியிலை யினும் சாற்றும் பெருந்தகை வானப்பாதைக்கு சென்றதெப்படி மீதியிலை யெனும் போர்க்களங்களில் வாகை சூடியே வாழ்ந்ததெப்படி கறுப்பில் தெரிவதை சிகப்பில் தோய்ந்திட‌ கவிதை வசனமாய் கொடுத்த‌தெப்படி வெறுப்பில்லாமல் தமிழ் விரத‌மிருந்தவன் விருப்பமுடன் விண்விழைந்ததெப்படி புதையலாய் தமிழ் அகத்தின் ...

Read More »

திருடி விட்டான்

சத்தியமணி   திருடி விட்டான் ஒருவன் நெஞ்சத்தினை திருடும் காதலில் வஞ்சத்தினை கேட்டால் தருவேனே உள்ளத்தினை – கண்ணா திரும்ப தரவேண்டாம் கள்ளத்தினை மருளும் மான் விழிகள் உனைப் பார்த்து மயங்கும் போதுனக்கு கலக்கமென்ன‌ அருளும் தேன் மொழிகள் எனைப் பார்த்து அள்ளி பொழிவ‌தற்கு தயக்கமென்ன‌ விரையும் யமுனை நதி பெருக்கெடுப்பில் விழையும் உன்னாட்டம்! அரங்கேற்று !! உறையும் வரையில் எனை உறவாடி உடைகளாகி யெனை அழகேற்று !! விரும்ப விரும்ப குழல் இசைப்பிரித்து விருந்து கொடுக்கும் இதழ் மதுகொடுத்து திரும்ப திரும்ப மனம் ...

Read More »

அப்பா (1998)

நிறுத்திச் சொன்னால் பாசம் தெரியும் அழுத்திச் சொன்னால் அர்த்தம் அறியும் மெதுவாய்ச் சொன்னால் கடினம் புரியும் பணிவாய்ச் சொன்னால் கருணை விரியும் கத்திச் சொன்னால் தனிமை தணியும் கதறிச் சொன்னால் விலகல் சரியும் நீட்டிச் சொன்னால் காரியம் முடியும் காட்டிச் சொன்னால் கல்லும் கரையும் பாடிச் சொன்னால் அன்பின் குளிர்ச்சி வாடிச் சொன்னால் அருளின் வளர்ச்சி அணைத்துச் சொன்னால் அதுவே உணர்ச்சி அடுக்கிச் சொன்னால் எதுவோ கிளர்ச்சி அப்பா என்றால் அப்பாலில்லை அப்பாடி எனில் அடிப்பாரில்லை அப்பா தெய்வம் இப்பாரிட்டால் எப்போதும் பயம் இல்லை ...

Read More »