Search Results for: நிர்மலா ராகவன்

உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

சந்திப்பு: அண்ணாகண்ணன் நம் உடல்மொழி வெளிப்படுத்துவது என்ன? பிறரின் உடல்மொழியை நாம் புரிந்துகொள்வது எப்படி? பெண், வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமா? பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு என்ன பொருள்? காதலை வெளிப்படுத்துவது எப்படி? மேடையில் பேசும்போது எத்தகைய உடல்மொழி தேவை? பார்வையாலேயே வல்லுறவு கொள்பவரை என்ன செய்வது? போலிப் பணிவையும் குழைவையும் கண்டுகொள்வது எப்படி? உடல்மொழியின் உண்மைகள், ரகசியங்கள் பலவற்றையும் நிர்மலா ராகவன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த ரகளையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ...

Read More »

விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் விரலழுத்த மருத்துவம் (Reflexology) என்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்து நாட்டு மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என மருத்துவர் ஒருவரின் கல்லறையில் காணப்படும் சித்திரங்களிலிருந்து அறிய முடிகிறது. வாய்வழியாக அதைப் பரப்பியிருக்க வேண்டும். இந்தியாவிலும் சீனாவிலும் புத்தருடைய பாதங்களில் இம்முறை வைத்தியம் காணப்படுகிறது. மருத்துவர்கள் மட்டுமில்லாமல் இதை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம், நோயாளிகளுக்கு மட்டும்தான் இம்முறை பயன்படும் என்பதில்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, பிறருக்கும் உதவி செய்ய முடியும் என்று டாக்டர் வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு (Dr.William ...

Read More »

கதை பிறந்த கதை – 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமது எழுத்துலக அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்கின்றார். கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது? கதைகளில் உண்மையும் கற்பனையும் எவ்வாறு கலக்கின்றன? எந்த விகிதத்தில் கலக்கின்றன? எவ்வளவு காலம் கழித்து ஒரு சம்பவம் கதையாகிறது? உள்ளிட்ட பலவற்றைச் சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார். கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் தாயின் மீது விதவிதமான ஆண்கள் பலரும் கட்டைக் குரலில் பேசியபடி வந்து, படுத்து அமுக்குகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கும் உடலெங்கும் வலிக்கிறது. வலி தாங்காமல் அது புரண்டு ...

Read More »

என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல் – பகுதி 2

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்துள்ளது. மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ள குஷ்வந்த் சிங் ரசித்த ஜோக்ஸ் பல உண்டு. அதில் சர்தார்ஜி ஜோக் ஒன்றும் உண்டு. ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார். சர்தார்ஜி உடனே அவளது காரை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். இதைக் கேட்ட அவரது நண்பரான இன்னொரு சர்தார்ஜி, நீ செய்தது சரிதான். அவளது உடைகள் உனக்குச் சரியாக இருக்காதே என்றாராம். கெட்டிக்கார சர்தார்ஜிகள். ...

Read More »

என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை நிர்மலா ராகவன் ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்னதாகக் குஷ்வந்த் சிங், நிர்மலா ராகவனை ஒரு மணிநேரம் நேர்காணல் செய்தார். இந்தியர்களுக்குத் தங்கள் தாய்மொழியை விட, ஆங்கிலமே நன்றாக வரும் எனக் குஷ்வந்த் சிங் மேடையில் சொல்ல, நிர்மலா ராகவனும் மேடைக்குச் சென்று, நானும் இந்தியாவிலிருந்து வந்தவள்தான். எனக்கு ஆங்கிலத்தை விட, தமிழே நன்றாக வரும் எனக் கூறினார். மறு பிறவி இல்லை என்று குஷ்வந்த் சிங் சொல்ல,  அப்படியானால் ஒருவர் ...

Read More »

கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்விதம்  கிடைத்தது என எடுத்துரைக்கிறார். ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் ...

Read More »

நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, ...

Read More »

நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார். படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே ...

Read More »

பூனைகளைப் புரிந்துகொள்ள – நிர்மலா ராகவன் நேர்காணல்

அண்ணாகண்ணன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் பலவும், அச்சு நூல்களாக, மின்னூல்களாக, ஒலி நூல்களாக வெளிவந்துள்ளன. வல்லமையில் தொடர்ந்து பத்திகள் எழுதி வருகிறார். பாடல்கள் புனைந்து பாடியுள்ளார். எழுத்தாளர் என்ற முகத்தைக் கடந்து, இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர், பூனைகள் வளர்த்து வருகிறார். பூனைகள் தொடர்பான எனது காணொலிகள் சிலவற்றை அண்மையில் யூடியூபில் வெளியிட்டேன். அதில் பூனைக்கு என்ன மன அழுத்தம் என்று கேட்டிருந்தேன். ...

Read More »

நிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்

அண்ணாகண்ணன் ஆசிரியரையே காதலிக்கும் மாணவர்களை நாம் திரைப்படங்களில், கதைகளில் கண்டிருப்போம். நிஜத்திலும் சிலர் உண்டு. அப்படி மாணவர்களின் காதலுக்கு உரியவர், நிர்மலா ராகவன். மலேசியாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தம் சின்னஞ்சிறு காதலர்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பழகத் தெரிய வேணும் – 67

நிர்மலா ராகவன் சிறுபிள்ளைத்தனம் எதுவரை? சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள்.  கள்ளம் கபடமே காணப்படாது. கதை என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில் எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள். உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு கண்டிப்பான குரல் ஒலித்தது. “அவளுக்கு ஒரு வயதுதான்!” என்றாள் மேரி. `இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’ என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல். “அதனால் என்ன!” என்றாள் மிஸஸ் லோ (Loh), பிடிவாதமாக. தவறு செய்தது எந்த ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 65

நிர்மலா ராகவன் ஓயாமல் யோசிப்பவர்கள் சிலர் எதுவும் செய்யாது, ஒரே இடத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள். `என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், `யோசித்துக் கொண்டிருக்கிறேன்,’ என்ற பதில் வரும். எத்தனை நேரம்தான் யோசிப்பார்கள்? இப்படிச் செய்தால், இல்லாத பிரச்னைகளும் இருப்பதுபோல் தோன்றும். அதனால், கனவிலும், எதிர்காலத்திலும் சிந்தனையைச் செலவிடுகிறவர்கள் எப்போதும் குழப்பத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள். கதை திருமணமான தன் மகளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாள் கோமதி. திரும்பும்போது, மிகுந்த கவலையோடு காணப்பட்டாள். `இனி தன்னை எப்போது பார்ப்பேனோ!’ என்ற கவலை அம்மாவுக்கு என்று மகள் நினைத்தாள். ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 64

நிர்மலா ராகவன் துணிச்சலுடன் முயற்சி செய் அது எப்படி, சில பேரால் மட்டும் வாழ்க்கையில் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க முடிகிறது? ஊக்கம் அவர்களுக்கு உள்ளிருந்தே எழுகிறது. ஒரு காரியமானது செய்கிறவருக்குப் பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்கு முக்கியமில்லை. அந்தக் காரியத்தால் பணம் கிடைக்காது போகலாம். அதனால் பாதிப்பு அடையாது, புதினங்கள் படிப்பது, பொழுதுபோக்கிற்காகத் தையல் வேலையில் ஈடுபடுவது, சித்திரம் வரைவது, எழுத்துத் துறை, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களுக்கு அவை பிடித்த காரியமாக ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 63

நிர்மலா ராகவன் முதிர்ச்சியும் குழந்தைத்தனமும் “இது என்னோட இடம்!” பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பிறருடன் ஒத்துப்போகத் தெரியாத வயது. எல்லாவற்றிற்கும் போட்டியிட்டு, சண்டை பிடிப்பார்கள். நான்கு வயதுக்குள் பிறருடன் இணைந்து பழகும் திறன் வருவதில்லை. ஆனால், வயது ஏறியபின்னும், இப்படியே நடப்பவர்களை என்னவென்று கூறுவது? கதை எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அங்கு வந்த என் சக ஆசிரியையான சாரதா, “இது என்னோட இடம்!” என்று சற்று எரிச்சலுடன் கூறியபோது, முதலில் ஆச்சரியமாக இருந்தது. ...

Read More »

புகழின் விலை (சிறுகதை)

நிர்மலா ராகவன் “குழந்தையின் முகம் பௌர்ணமி சந்திரன்மாதிரி எவ்வளவு அழகா, உருண்டையா இருக்கு!” என்று பார்த்தவர்களெல்லாரும் பிரமிக்க, அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில், பிறந்ததிலிருந்தே பிறரது பாராட்டுக்காகவே நான் வளர்க்கப்பட்டேன் என்றுதான் தோன்றுகிறது. நான்கு வயதிலேயே கேட்ட பாடல்களை அப்படியே பாடிக் காட்டுவேனாம். குரல் வேறு இனிமையாக இருந்து தொலைத்ததா, முறையாக இசை பயில அனுப்பினார் என் தந்தை. எல்லாம் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல்தான். “இப்போ எதுக்கு பாட்டும் கூத்தும்? படிச்சு, ஒரு டிகிரி வாங்கறமாதிரி ஆகுமா?” என்று அப்பா ...

Read More »