13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

2

அண்ணாகண்ணன்

2022 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 12 ஆண்டுகளை நிறைவுசெய்து 13ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் வல்லமை, 18,606 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,878 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேலான ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

கடந்த ஆண்டு வல்லமையின் செலவினங்களுக்காக நன்கொடை கோரினேன். நண்பர்கள் ஜெயபாரதன், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் ம.இராமச்சந்திரன் ஆகியோர் கனிவுடன் அனுப்பிய நன்கொடைகளால் தளம் சீராக இயங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கு உரிய கட்டணங்களை அடுத்த மூன்று மாதங்களில் செலுத்த வேண்டியிருக்கும். அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

மேலும் நம் (Siteground) வழங்கியுடனான மூன்றாண்டு ஒப்பந்தம், இன்னும் மூன்று மாதங்களில் முடிகிறது. புதிதாக யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கலாம் எனத் தேடி வருகிறோம். தொடர்ந்து நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் (Managed WordPress) சேவையைத் தரமாகவும் மலிவாகவும் வழங்கும் நிறுவனங்களை / நண்பர்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். தள நிர்வாகப் பணியை எல்.கார்த்திக் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இருவருக்கும் நனி நன்றி.

வல்லமை மின்னிதழை மேம்படுத்த, முயன்று வருகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

 1. புதிய
  வல்லமை முகப்புக் கவிதை

  வையகத் தமிழில் வல்லமை மின்னிதழ்.
  மெய்யுகம் செழிக்க குறள்நெறி பரப்பு.
  காவியம், ஓவியம், முத்தமிழ் படைப்பு
  ஆன்மீகம், ஆய்வு, விஞ்ஞான வெளியீடு
  நான்காம் தமிழ்ச்சங்க நவீன வலைஏடு.

  சி. ஜெயபாரதன், கனடா

 2. தங்கள் வாழ்த்துகளுக்கும் படைப்புகளுக்கும் பங்களிப்புகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *