இசைக்கவியின் இதயம்

வாணியைச் சரண்புகுந்தேன்!

இசைக்கவி ரமணன் விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி` –கவிஞர் ஹரிகிருஷ்ணன் கால மயக்கம் எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன: 1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே ...

Read More »

குருவெண்பா

  இசைக்கவி ரமணன்   சிவனே குருவெனச் செப்பிய ஆசான் அவனே சிவனென் றறிந்தேன் – தவமே அறியா எனையும் அருளால் அணைத்தான் வறியன் அடைந்ததே வாழ்வு குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி குருவே மழையாய்ப் பொழிவார் – குருவே கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக் கரையில் இறக்குவார் காண்! குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார் அருளே கதியென் றடங்கி – இருப்பதுமே நல்வழி நம்வழி நம்பிக்கை யானவழி சொல்வ தறிந்ததிந்தச் சொல் ! நிலையற்ற வாழ்வில் நிலையான தொன்றே கலைகின்ற காட்சி கலையாத ...

Read More »

பாரதி யார்? – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”

கே.ரவி நிறுவனர் வானவில் பண்பாட்டு மையம் Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண) அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அவசியம் அவன் ஒரு அவதாரம் அவன் ஒரு லட்சியம் முப்பத்தொன்பது வயதிற்குள்ளே முன்னுாறு பேர்களின் வாழ்க்கையை வாழ்ந்தவன்,மூச்சுக்கு மூச்சு தேசமென்ற பாடியவன்,தேசமே தெய்வமென்று வணங்கியவன்,சாதிக்கொடுமைகளை சகிக்காதவன்,மூடநம்பிக்கைகளை சாடியவன்,பராசக்தியின் செல்லமகன்,பாரதத்தாயின் தவப்புதல்வன்,எட்டையபுரத்தில் சுப்பையாகவாகப் பிறந்தவன்,பாரதியாக வளர்ந்தவன்,மகாகவியாக மலர்ந்தவன். அருமைத்தமிழை அழகு செய்த நம் பாரதிக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 11ந்தேதி 135 வது பிறந்த நாள்,இந்த நல்ல நாளில் அவரது பெருமையை போற்றும் ...

Read More »

கண்ணே! தமிழ் வாணீ!

அமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக! ஒரு தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக!   இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி   வேதம் மிகத் தேடும் பெரு விந்தை மிகும் தாய் நீ வீதித் திரு மூலைதனில் விளையாடிடும் சேய்நீ பேதம்செயும் நீதர்தமைப் பின்னும் கொடும் ...

Read More »

வாணிக்கு வணக்கம்

  உன் வீணையே என் நெஞ்சமே, மின் விரல்கள் பலவிதம் கொஞ்சுமே! உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே! முகில் ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர் எங்கும் களியே மிஞ்சுமே! என் ராணியே! உயிர் வாணியே! நீ ரகசி யங்களின் கேணியே! பத்து விரல்களின் பதை பதைப்பினைப் பார்த்தவன் கதி என்னவோ! முத்துத் தமிழினில் மூண்ட கவிஞன்முன் முடிந்ததே விதி என்கவோ! சத்த மடங்கிய சாந்தி வாசலில் சன்ன மாயொலி மேவுதே! எத்த னைவிதம் செப்பிச் சோர்கிறேன்! என்றன் அனுபவம் ...

Read More »

நவராத்திரி 11

இசைக்கவி ரமணன் வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு! இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு! பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள் பாரு! முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில் முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள்! அந்த ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு! வந்த ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு! என்மனத்தைச் சந்தமய மாக்கி, அதில் ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும் புன்மையின் நினைவுகூடப் போக்கி, நிதமும் புதிய புதிய நிலைகளிலே ஊக்கி, மின்னல்களால் என்னுயிரைத் தாக்கி, ஒரு மென்னகையால் மீண்டுமதைத் தூக்கி, இவள் ...

Read More »

நவராத்திரி 10

இசைக்கவி ரமணன் சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும் நில்லா திமைக்கின்ற சுந்தரீ! முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ! எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள் எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ! தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ! வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்! முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி முக்தியை வெண்ணையாய் வைக்கிறாய்! பற்றேது மற்றவன் ஆக்குவாய், தெருவில் படும்பா டனைத்தையும் பார்க்கிறாய்! கற்றென்றும் வாராத கவிதையெனும் விந்தையைக் கலைவாணி தந்துன்னுள் ஈர்க்கிறாய்! செல்வந்தர் பலபேரைக் ...

Read More »

நவராத்திரி 09

இசைக்கவி ரமணன்   நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம் நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள் பகராமல் எதையும்நான் செய்ததில்லை, பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை! கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம் கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப் பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? இந்தப் பிச்சியின் நெஞ்சின் கருத்தென்னவோ? ரணமாக உயிரெலாம் குடைகின்றதே, பல ராகங்கள் ஸ்ருதியின்றி உடைகின்றதே! மணமாலை பிணமாலை ஆகலாமா? தாய் மகனைப்போய்ப் பகையென்று தள்ளலாமா? ...

Read More »

நவராத்திரி (8)

இசைக்கவி ரமணன்   நீ கானம் நீ மோனம் நீயே மெளனம் நீ தென்றல் நீ சூறை நீயே அமைதி தேவை தருவதும் நீ அதைத் தீர்த்து வைப்பதும் நீ ஆசை தருவதும் நீ மிக மிக அலைய வைப்பதும் நீ தேவை யாவும் தீர்ந்த பின்னும் தேட வைப்பது நீ யாவும் ஒன்றென அறிந்திடும் வரை எதிரில் இருந்தும் ஏங்க வைப்பது நீ கன்னல் பிழிந்தே சாறு தருவாய் காற்றைப் பிழிந்தே மாரி பொழிவாய் மின்னல் பிழிந்தே சொல்லை எடுப்பாய் உருவைப் பிழிந்தே ...

Read More »

நவராத்திரி 07

  நானிருக்கின்றேன்! ஓஹோ! நானிருக்கின்றேன்! இந்த வானும் வெளியும் அதையும் தாண்டி வளருகின்ற மர்மங்களும் தேனும் மலரும் தெப்பக் குளமும் தேனடையும் தெருவின் முனையும் ஊனும் உயிரும் அதிர அதிர உரக்க உரக்கக் கூவுகிறேன் நானிருக்கின்றேன்! ஓஹோ! நானிருக்கின்றேன்! அமைதி என்பதா? ஆ னந்த மென்பதா? இந்த அதிச யங்களின் அதிபதியாய் ஆசையற்ற அரசனாய் துதிகள் பாடும் அடியவனாய் துதிகள் ஏற்கும் தெய்வமாய் விதியின் வசத்தில் வெறும் சருகாய் விதிகள் பதியும் திருவடியாய் நானிருக்கின்றேன்! ஓஹோ! நானிருக்கின்றேன்! எங்கு நிற்கிறேன்? நான் எதனைப் பார்க்கிறேன்? ...

Read More »

நவராத்திரி 06

இசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின் நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும் ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க? இன்றுந்தான் காலை எதிர்ப்பட்டாள்; எப்படியாம்? நன்று துயில்நீங்கி நானமர்ந்து மந்திரத்து மின்பருகிக் கொண்டிருந்த விந்தைக் கணமொன்றில் நின்றெதிரே மாலை நிமிண்டுகிறாள்! ஏதுக்காம்? ’உன்னத் தலைப்படுதல் ...

Read More »

நவராத்திரி 05 (பாடல்)

இசைக்கவி ரமணன் உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா ஓடை நெளிகையிலே, துள்ளி வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல வெட்டும் மின்னல் அழகா? நீ அம்பலத்து அழகா? இல்ல அந்தரங்க நெசமா? கள்ளிச் செடிப்பழமே! அடி காசிப் படித்துறையே! முள்ளில் எழும் முனையே! அந்த முனையெழும் சுனையே! ஒரு சொல்லுக்குள்ள வந்து கண்ணச் சிமிட்டி சூனியம் ஆக்குறியே! அந்தச் சூனியத்துக்குள்ள சோழி விசிறி மானியங் கேக்குறியே, உசுர மானியங் கேக்குறியே! நீ வாழ ...

Read More »

நவராத்திரி – 04

இசைக்கவி ரமணன்     பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய் அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள் காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின் கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள் சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள் சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள்   நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள் நேரத்தைக் காலத்துள் நேரே மறைத்திடுவாள் சற்றும் அசையாமல் சாயாமல் பார்த்திடுவாள் சாரத்தைக் காட்டிச் சலனத்தைச் சாந்திசெய்து உற்றுற் றவள்விழி ஊடுருவும் போதில் உயிர்போகும்; போனவுயிர் உள்நுழையும்; ...

Read More »

நவராத்திரி 03 (பாடல்)

இசைக்கவி ரமணன்   வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா போக்கிடமே தெரியாமல் போகும்நதி போலே என்னைப் புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள் புரியவில்லை சிரிக்கின்றாய் பார்க்குமிடம் அத்தனையும் நீக்கமற நீயிருந்தும் ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே! உயிரில் எறும்பென எங்கோ ஊர்ந்தாயே! அம்மா சீக்கிரமே வந்துநில்லுன் சித்திரத்துப் புன்னகையைச் செந்தமிழின் தேன்குடத்தில் தேக்கி, இசைப்பேன் சிந்தனை அபஸ்வரத்தை நீக்கி! எந்தவினை என்றன்வினை எந்தவிதி என்றன்விதி இந்தப் பொய்க்கு இத்தனை அலங்காரம்! அம்மா எவரிடம் ...

Read More »

உலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)

இசைக்கவி ரமணன்   உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம்! மற்று வினையே தெனக்கு? விதியே தெனக்கு? உனையேநான் என்றேன் உணர். உணர்வின் முனையின் துளியாய்க் கனலும் குணமற்ற விந்தைக் குழந்தாய்! ரணமான நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப் பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு. பருகப் பெருகும் பரதாகம்! நெஞ்சம் உருக வளரும் விரகம் – ஒருகரம் மெள்ளத் தலைகோதும் வேளையில் அவ்வின்பம் கொள்ளத்தான் ஒண்ணுமோ கூறு கூறும் மொழியும் குறிக்கும் பொருளுமதில் ஊறும் சுவையும் ஒருத்தியே! மாறும் உலகினில் ...

Read More »