வசனக்காரர்கள்

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

தி. இரா. மீனா நிக்களங்க சென்னசோமேஸ்வரா “வெட்ட வெளியெலாம் திடமானால் வானம் மண் பாதாளத்துக்கு இடம் எங்குள்ளதோ? இடரைச் செய்ய முடியாத மனிதரெல்லாம் சம்சாரத்தை விட்டோமென மொட்டையடித்துக் கொண்டால் அறிஞன் விரக்தனாக முடியுமா? இதனால் அஞ்ஞானம் விட்டு அறிவைக் காட்டுபவன் நிக்களங்க சென்னசோமேஸ்வரன் தானே? “ நிஜமுக்தி இராமேஸ்வரா “மாற்றத்தால் உடல் தேய்ந்து தேய்ந்து நொந்து வெந்தவர் அனைவரும் வெறுமையாகி இளமை நாளும் தேய்ந்து தேய்ந்து கதி கெட்டோர் அனைவரும் வெறுமையாகி தலைமுடியை மழித்து வெறுமையான பின்னர் பொன் பெண் மண்ணுக்கு வசமாகாமலிருப்பதே வாழ்க்கை ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

தி. இரா. மீனா இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர். ஆனந்த சித்தேஸ்வரா “மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை அர்ப்பணிப்பை மீறக்கூடாது அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை அமுதமானாலும் பரவாயில்லை ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை, படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி, அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை ஊரும் ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

தி. இரா. மீனா அக்கம்மா கல்யாணைச் சேர்ந்தவர். ’ஆசாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும். 1. “பற்றற்றவனுக்கன்றி ஆசையுள்ளவனுக்கு விரதமுண்டோ? அமைதியுடையவனுக்கன்றி சினமுடையவருக்கு விரதமுண்டோ? கொடையாளிக்கல்லாமல் கருமிக்கு விரதமுண்டோ? தன்னாற்றலுக்கு ஏற்றாற்போல் மனத்தூய்மையுடன் இருக்கும் மாயபக்தனே உலக வினைகளற்ற சரணர் அவர் பாதம் என்னுள்ளத்தில் வார்ப்புப் போலுள்ளது. சரணரின் மாட்டுக் கொட்டகையாம் ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்“ 2. “குருவாக இருந்தாலும் ஒழுக்கக் கேடுடையவனெனில் பின்பற்ற முடியாது. இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பின் வழிபட முடியாது. ஜங்கமனாயிருப்பினும் ஆசாரத்தைப் பின்பற்றவில்லையாயின் சேர இயலாது. ஆசாரமே ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

தி. இரா. மீனா ஹெண்டத மாரய்யா கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும். “மண்ணெனும் குடத்தின்  நடுவே பொன்னெனும் கள் உற்பத்தியானது பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது. இந்த போதையில் மூழ்கியவர்களை எப்படி மிக உயர்ந்தவர்களென்பது? பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது தர்மேஸ்வரலிங்கத்தை எட்டவில்லை“ ஹொடே ஹூல்ல பங்கண்ணா புல் விற்கும் காயகம் இவரது.’ கும்பேஸ்வரலிங்க ’இவரது முத்திரையாகும். 1. “கட்டையை நெருப்பில் வைக்க ’நான் இருக்கிறேன், வேண்டாமென’ உள்ளிருந்த நெருப்பு உரைத்ததோ? ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-38

தி. இரா. மீனா ஹடப்பத ரேச்சண்ணா தாம்பூலப் பெட்டி சுமக்கும் காயகம் இவருடையது. கல்யாண் புரட்சியின் போது சரணரின் கூட்டத்தோடு உளுவி வரை சென்றவர். ’நிக்களங்க கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும். “பக்தன் மும்மலங்களில் மனம் வைப்பானோ? துறவி இந்திரியத்தில் ஈடுபட்டு மீண்டும் துறவியாவானோ? இவ்விரண்டின் எண்ணம் உறுதிப்படுமானால் மலரின் மணம்போல் ,கண்ணாடியின் பிம்பம் போல் எரியும் கற்பூரத்தின் நிலை போலாம் நிக்களங்க கூடலசென்ன சங்கம தேவனான அடியான்.“ ஹாதரகாயகத மாரய்யனின் புண்ணியஸ்திரி கங்கம்மா  மாரய்யனின் மனைவி இவர். ’கங்கேஸ்வரா’ இவரது முத்திரையாகும். ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

தி. இரா. மீனா சொட்டாள பாச்சரசா பிஜ்ஜளன் அரண்மனையில் எழுத்தராக இவரது காயகம். ’சொட்டள’ இவரது முத்திரையாகும். “பக்தன் பக்தனென அறிவின்றி சொல்வீர் பக்தியின் இடம் அனைவருக்கும் எங்குள்ளதோ? கால்காசு ஆசை பணத்தாசை உள்ளவரையில் பக்தனோ? ஐயனே பொருள், உயிர்ப்பற்று, மோகமுள்ளவரை பக்தனோ? பொன், பெண், மண்ணுக்குப் போட்டியிடுபவன் பக்தனோ? பக்தருக்கு நான் சொன்னால் பொல்லாப்பு,கொந்தளிப்பு ஒருமுறை தாங்கள் சொல்வீர், பிரளய காலத்தின் சொட்டாளனே“ சுதந்திர சித்தலிங்கேஸ்வரா ”நிஜகுரு சுதந்திர சித்தலிங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும். 1. “அந்தரத்தில் தூய்மை இல்லாதவரிடத்தில் அத்திப் பழத்தில் புழுக்கள் ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

தி. இரா. மீனா சித்தராமன் தொடர்ச்சி 1. “நீரிலுள்ள மீன் தன் நாசியிடம் நீரைச் சேரவிடாத விதத்தைப் பாரய்யா சரணன்  உலகத்தினூடே இருப்பினும் உலகத்தைத் தன்னருகே விடமாட்டான் பாரய்யா. மீனுக்கு அந்த அறிவையும் சரணனுக்கு இந்த அறிவையும் கொடுத்தனையே கபிலசித்த மல்லிகார்ஜூனனே“ 2. “எனக்குத் தெரியும் எனக்குத் தெரியுமெனச் சொன்ன பலரும் அகந்தையில் சென்றனர். எனக்குத் தெரியவில்லை,தெரியவில்லையெனச் சொன்ன பலரும் மறதியில் சென்றனர். தெரிந்தோம் என்பதும் தெரியவில்லையென்பதும் ஞானத்தின் முட்டுக்கட்டை. தெரிந்தால் அறிவு, மறந்தால் அறிவீனம் தெரிந்தும் தெரியாதவன் தெளிந்த நீரின் கமல கபிலசித்த ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

தி. இரா. மீனா சத்தியக்கா சரணர்களின் வீட்டுமுற்றத்தைப் பெருக்கித் தூய்மைப்படுத்துவது இவரது காயகமாகும். ’சம்பு ஜக்கேஸ்வரன்’ இவரது முத்திரையாகும். 1. “மலர்தூவி வணங்குவது நியமமில்லை மந்திரம் தந்திரம் நியமமில்லை தூபம் தீபாரதனை நியமமில்லை பிறர் பணம்,பிறன் மனை,பிறதெய்வங்களை விரும்பாததுவே நியமம் சம்பு ஜக்கேஸ்வரனில் காண்பீர் நித்தியநியமம்” 2. “காதலனுக்கு வேட்கையில்லை எனக்கும் பொறுமையில்லை மனதின் வேட்கையறியும் தோழியரில்லை என்ன செய்வேன்? மன்மத பகைமையின் அனுபவத்திற்குள் மனம் உள்ளது. என்ன செய்வேன்? நாட்கள் வீணாவதால் இளமை கழியுமுன் சம்பு ஜக்கேஸ்வரனோடு இணைத்து விடு தாயே.” 3. ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

தி. இரா. மீனா சிவலெங்க மஞ்சண்ணா  பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்த பின்னர் சரணராகியவர். ’ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூனலிங்கம்’ இவரது முத்திரையாகும். 1. “உடலைக் கட்டியணைத்து நிறை கண்களால் கண்டு கைகள் மகிழும் வரை வணங்கி மனப்பூர்வமாக அறிவது, இடைவெளியற்ற இன்பம் ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு கூடுகின்ற  கூட்டமாம்“ 2. “உடல் சோர்ந்து உள்ளம் உருகி காயகம் செய்யாமல் பிறரை வருத்தி, நயந்து இரந்து செய்வது தாசோகமா? எத்தொழிலையும் மனத்தூய்மையுடன் செய்கிற குருஜங்கமரைச் சமமாக எண்ணும் இலிங்கதேகமுடையோருடன் ஒரே தன்மையில் ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

தி. இரா. மீனா இலத்தேய சோமய்யா ’இலத்தேய சோமய்யன’ என்பது இவரது முத்திரையாகும். “காயகம் எதுவாக இருப்பினும் தன்காயகமெனக் கருதி குரு இலிங்கம் ஜங்கமத்தின்  முன்வைத்து பிரசாதம் அர்ப்பணித்து. மிஞ்சியதை எடுத்து நோயால் வருந்தி, வலியால் கதறி மூச்சு நின்றால் இறந்து போ, இதற்கேன் கடவுளின் உதவி, பாபு இலத்தேய சோமனே?“ வசனபண்டாரி சாந்தராசா இவர் கல்யாண் நகரத்தைச் சேர்ந்த சரணர்கள் இயற்றிய வசனங்க ளைத் தொகுத்து வைத்த வசன நூல் காப்பகத்தின் [வசன பண்டாரா] மேற்பார்வையாளராக இருந்தவர். வசனங்களை எழுதிக் கொள்வதும், சேகரிப்பதும், ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

தி.இரா.மீனா மோளிகே  மாரய்யா காஷ்மீர நாட்டு மன்னன்.இயற்பெயர் மகாதேவ பூபாலன். மனைவி கங்காதேவி. பசவேசரின் பெருமைகளைக் கேட்டு அரசாட்சியைத் துறந்து இருவரும் கல்யாண் வருகின்றனர். இவர்கள் மாரய்யா–மகாதேவி  என்ற பெயரில் விறகுக் கட்டு விற்கும் காயகம் மேற் கொண்டு சரணர்களாக வாழ்கின்றனர். ’நிக்களங்க மல்லிகார்ஜூன’ எனபது இவரது முத்திரையாகும். 1.  “ நீரின்றேல் தாமரையை யாரறிவார்? நீரின்றேல் பாலினை யாரறிவார்? என்னையன்றி உன்னை யாரறிவார்? உனக்கு நான், எனக்கு நீ உனக்கும் எனக்கும் வேறொரு உறவுண்டோ? நிக்களங்க மல்லிகார்ஜுனனே” 2. “ஈர விறகை நெருப்பில் ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

தி. இரா. மீனா மும்மடிக்காரியேந்திர மும்முடிக்காரி என்ற பெயரால் இவர் அரசராக இருந்திருக்கலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ’மகாகன தொட்டதேசிகார்ய குரு பிரபுவே’ என்பது இவரது முத்திரையாகும்.  1. “பக்தியெனும் பாலை மனதுள் உறையவைத்து அதிலிருந்த கெட்டியான தயிரை உடலென்னும் பாத்திரத்தில் நிரப்பி தத்துவமென்னும் மத்தால் கடைந்து இலிங்கமென்னும் வெண்ணெய் தெரிய அதையெடுத்து ஞானக் கனலில் பக்குவப்படுத்தி இயற்கை மணத்துள் விளங்கும் நெய்யைப் பருகும் ஆற்றலால் ஆன்மா இலிங்கமானது பாராய் மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“ 2. “பகலிருக்க இருளுண்டோ? இருளிருக்கப் பகலுண்டோ? விழித்திருக்க உறக்கமுண்டோ? ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30

தி. இரா. மீனா மல்லிகார்ஜூனபண்டிதராத்திய ஆந்திராவைச் சேர்ந்தவர். பசவேசர் அனுப்பி வைத்த திருநீற்றின் மகிமையால் இவர் கன்னடம் கற்றார் என்றும் பசவேசரைப் பார்க்கப் போகும் வழியில் பசவேசர் இறைவனிடம் ஐக்கியமானார் என்ற செய்தி கேட்டு தன் இஷ்டலிங்கத்தில் அந்த காட்சியைக் கண்டு ஆறுதலடைந்தார் என்றொரு கதையுண்டு. ’மல்லிகார்ஜூனா’ இவரது முத்திரையாகும்.  “இளமை செல்வம் உள்ளவரையில் சிவனை வணங்கமாட்டார் மனிதனே நினை நினை, நீ கெடுவதற்கு முன்னால் இளமை நிலைக்காது செல்வம் நிலைக்காது நீ கெடுவதற்கு முன்னால் மல்லிகார்ஜூனனை நினைப்பாய் நினைப்பாய்“ மளுபாவிய சோமண்ணா ’மளுபாவிய ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29

தி. இரா. மீனா மடிவாள மாச்சிதேவர சமயாச்சாரதா மல்லிகார்ச்சுனா இவர் மடிவாள மாச்சிதேவரைப் பின்பற்றியவர். ’பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்த மல்லிகார்ஜுனா’ என்பது இவரது முத்திரையாகும். 1. “கரலிங்கம் விட்டு மண்மீதுள்ள  சிலை வணங்கும் நரகின் நாய்களை என்னென்பேன் ஐயனே பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே“ 2. “இல்லாளைக் கண்டு மகிழ்ந்து மக்களைப் பார்த்து மகிழ்ந்து கூரறிவால் மெய்ம்மறந்து உறங்கி சதிசுதனெனும் சம்சாரத்தில் அறிவிழந்து மூடனானேன் என்னவென்பேன் பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே “ மதுவய்யா ’அர்க்கேசுவரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும். 1. “சோறு ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-28

தி. இரா. மீனா பொந்தாதேவி காஷ்மீரில் உள்ள மண்டாவ்பூர் அரசபரம்பரையில் வந்த பொந்தா தேவியின் இயற்பெயர் நிஜாதேவி.இளம்வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன் உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு  போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப் படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும். “வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா? வெற்றிடம் என்பது ...

Read More »