அறிவியல்

சைனா, புதிய விண்வெளி நிலையம் அமைக்க முதற்கட்ட அரங்கை ஏவியது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சைனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முக்கிய அரங்கம் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தளவுளவி பின்புறம் சோதிக்கிறது ! அதிலிருந்து  நகர்ந்த தளவூர்தி புதிய விண்வெளி நிலையம் இப்போது. சைனாவின் இரு தீரர் அண்டவெளிப் பயணம் செய்து விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் ஏறி வெண்ணிலவில் தடம் வைக்க பயிற்சிகள் ...

Read More »

செவ்வாய்த் தளவூர்தியிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முறை இயக்கிய சிற்றூர்தி வெற்றிகரமாய்ப் பறந்தது.   கரியமில வாயுவிலிருந்து உயிர்வாயு தயாரிக்கும் செவ்வாய்க் கோள் எந்திரம் https://mars.nasa.gov/mars2020/spacecraft/instruments/moxie/ https://www.smithsonianmag.com/science-nature/nasa-launching-instrument-make-oxygen-mars-180975430/ Mars Drone flew in Mars Low Gravity Low Air Atmoskhere செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முறை வெற்றிகரமாய் இயக்கி, தணிந்த ஈர்ப்பு தளத்தில் சிற்றூர்தி ஒன்றைப் பறக்க வைத்தார். இந்த வாரம் நாசா செவ்வாய்த் திட்ட எஞ்சினியர்கள் இரண்டு விந்தை புரிந்தார். [ஏப்ரல் 19 -24, ...

Read More »

பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெரும் காந்த மண்டலம் உண்டானது எப்படி?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage 2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும். ஜொஹான்னஸ் விக்ட் [மாக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆய்வுக் குழுத் தலைமை விஞ்ஞானி] பூதக்கோள் வியாழனில் பெருங் காந்த மண்டலம் இருப்பது அறிவிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திலே மிகப் பெரிய வாயுக்கோள் வியாழன்.  வாயுக்கோளில் பூமியைப் போல் பத்து மடங்குக்கு ...

Read More »

எவெர் கிவன் – ஜப்பானிய கப்பலுக்கு $900 மில்லியன் அபராதம்

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது. எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு நிதி தர வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது.. தற்போது எவர் கிவன் கப்பல் கிரேட் பிட்டெர் ஏரியில் [Great Bitter Lake] நிறுத்தமாகி நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் 400 மீடர் [1312 அடி] நீளம் உள்ளது. 220,000 டன் பளு சுமக்கும் ...

Read More »

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்! பிரபஞ்சம் ஒன்றா? பலவா?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன்! . . . ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது!” எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975) “கவிஞன் ...

Read More »

உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப்பட்டது

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா 2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, கால்வாய்க் குறுக்கே மாட்டி, இருபுறக் கப்பல் போக்கு ...

Read More »

தொடக்கமும் முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை! ஆதி அந்த மில்லா அகிலம் என்று ஓதி வருகிறார் இன்று! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் உருவாகுமா பிரபஞ்சம் வெறுஞ் சூனியத்தி லிருந்து? புள்ளித் திணிவு திடீரென வெடித்தது புனைவு நியதி! கருவை உருவாக்க உந்து சக்தி எப்படித் தோன்றியது? உள் வெடிப்பு தூண்டியதா புற வெடிப்பை? தூண்டு விசையின்றி துவங்குமா பெரு வெடிப்பு? பேரளவுத் திணிவு நிறை பிளந்த தெப்படி? கால வெளிக்கு வித்தாய் மூலச் ...

Read More »

காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் – ஒரு சிறு விளக்கம்

வெ. சுப்ரமணியன் காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance plans) குறித்து மக்களிடையே போதிய  விழிப்புணர்வு இல்லை. இன்னும் பொதுமக்களில் பலருக்கும் ஆயுள் காப்பீடு (Life Insurance), விபத்துக் காப்பீடு (Accidental Insurance) மற்றும் ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance) ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் குறித்த சரியான புரிதல் இல்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையின் சேர்க்கைப் பிரிவில் (admission section) எனக்கு முன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். அவர் அங்கிருந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடியதிலிருந்து அவர் படித்த ...

Read More »

பெருவெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் தொடங்கவில்லை; எப்போதும் அது இருந்துள்ளது

சி. ஜெயபாரதன். B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான்  கருந்துளைச் சுரங்கத்தில் ! பெருவெடிப்பில் பிரபஞ்சம் பிறக்கவில்லை. பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ                                                                நுட்பத் திரட்சி எப்போது, எப்படி  வடிவானது ? ...

Read More »

கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய்! பசுமைப் புரட்சிச் சாதனையாய் சூழ்வெளித் தூய புது எரிசக்தி! மீள்சுழற்சிக் கனல்சக்தி! பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும் பிரபஞ்சக் கொடை வளமாய் தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம்  அனுப்பும் மின்சக்தி! கடல்நீரைக் குடிநீராக்கின் குடிநீருக்கும் பஞ்ச மில்லை! வானூர்தி விண்ணில் பறக்குது! பரிதி சக்தியால்! எரி வாயு இல்லாமல் பறக்கும்! பகலிலும் இரவிலும் ...

Read More »

இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை மைல் உயரத்துக்கு மேல் தீக்குழம்பை வீசிப் பொழிந்தது. இந்தச் சீற்றம் 30 மணி நேர இடைவெளியில் விட்டுவிட்டு 16, 18, & 19 தேதிகளில் செந்தீப் பிழம்பை வெளியே எறிந்தது. திடீரென்று 20 ஆம் தேதி விதி மாறிப் பூத எரிமலை ஆனது. இருட்டத் தொடங்கியதும், ஒளிமின்னும் சிறுசிறு ...

Read More »

நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P. Eng (Nuclear) கனடா https://www.fastcompany.com/90448176/inside-nasas-2-5-billion-mission-to-find-evidence-of-life-on-mars https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7563 https://youtu.be/s595S1Vf3PE செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ 2021 ஆண்டு பிப்ரவரி 18 இல் நாசா மீண்டும் செவ்வாய்க் கோளில் புதுத் தளவூர்தி ஒன்றை இறக்கியது.. நாசா 2020 இல் ஏவிய விடாமுயற்சி புதுத் தளவுர்தி [MARS 2020 LANDER /ROVER PERSEVERANCE] செந்நிறக் கோள் செவ்வாயிக்கு மீண்டும் பயணம் செய்யக் குறிவைத்து, 2021 பிப்ரவரி 18 இல் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கி ...

Read More »

ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

செந்தில்குமார் தியாகராஜன், பேராசிரியர், எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல், மெயில் : [email protected] கட்டுரைச் சுருக்கம் சமீப காலமாக தினமும் நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை  செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களைக் கவனிப்பது இன்றைய சூழலில் கட்டாயமாகி இருக்கிறது. கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் ...

Read More »

எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?

முனைவர். நடராஜன் ஸ்ரீதர்  ஆற்றல் அறிவியல் துறை  அழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி  [email protected] முன்னுரை சமீப காலங்களில் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது போல எதிர்காலத்தில் மனிதனின் மூளையும் கொந்தல் செய்யப்படுமா என்பது குறித்து இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது. கணினி கொந்தல் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையாக ஒன்றாக அமைந்துவிட்டது. கணினிகள்  நமது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நாம் பயன்படுத்தும் திறன்பேசி கூட கணினியாகவே செயல்படுகிறது. ஒரு காலத்தில் ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணினி இன்று ...

Read More »

நார்மன் ராபர்ட் போக்சன்

வெ. சுப்ரமணியன் நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம், அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்துகொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன். நார்மன் ராபர்ட் போக்சன் ...

Read More »