இந்திய விண்ணுளவி ஆதித்யா -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத் தொடங்கியது
சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா
2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யா-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ) தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIAN POINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது. அந்த ஆதித்யா விண்ணுளவி 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி PSLV-C57 ராக்கெட்டில் ஏவப்பட்டது. ஏழுவிதமான கருவிகளைச் சுமந்து செல்லும் விண்ணுளவி அடுத்த 5 ஆண்டுகள் சூரியனை ஆய்வு செய்து தகவல் அனுப்பும். ஏழில் 4 கருவிகள் சூரிய ஒளியை ஆராய்பவை. மற்ற 3 கருவிகள் ஒளிப் பிழம்பு [Plasma] & காந்த சக்தியை உளவு செய்பவை.
ஆதித்தியா ஆய்வுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
1. ஆதித்தியா L-1 சூரியனை உற்று நோக்க, தங்கு அரங்கில் சுற்றுப் பாதை அமைக்கப்பட வேண்டும்.
2. ESA தகவல்படி, L-1 தங்கு அரங்கில் பெரிய இரு கோள்களின் ஈர்ப்பு விசைகள் கழிவுபட்டு நகர்ச்சி எளிதாய் ஆகிறது.
3. முதன்முதல் முழுவட்டச் சூரிய வடிவம் பதிவு செய்யப்பட்டது,
4. சூரியப் புயல்கள், சூரிய வீச்சுகள் [Solar Flares] பற்றி முதல் விளக்கமாக அறிய முடிந்தது. அவற்றின் விளைவுகள் பூமியின் காலநிலையை எப்படி மாற்றுகின்றன? விண்வெளியில் இயங்கும் 7800 உலக துணைக்கோள்கள் எவ்விதம்
பாதிக்கப்படுகின்றன? என்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்கிறார்கள்.
5. ஆதித்யா திட்டச் செலவு 46 மில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது.