மொழிபெயர்ப்பு

மாமூல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

முனைவர்.நா.தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.   சையத் ஹக்கீம் அன்சாரி சந்தைக்கு போயிருந்தார். சில பொருள்களுடன் திரும்பி வரும்போது இதுவரை கேட்கப்படாத ஒரு விசித்திரமான சத்தம் கேட்பதாக அவருக்கு  தோன்றியது. அவர் வழி ஓரத்தில் செவிமடுத்து நின்றார். “என்ன இப்படி நிக்கிறீங்க?” கொய்யாப்பழ வண்டியை தள்ளிக் கொண்டு செல்கின்ற குருதாஸ் அவரிடம் கேட்டான். கொஞ்சம் பின்னால் பல பாதைகள் கூடுகின்ற இடத்தில் வைத்துதான் குருதாஸிடமிருந்து பத்து ரூபாய்க்கு கொய்யா வாங்கியிருந்தார். ”எனக்கு சாகறதுக்கு நேரம் ஆச்சுனு ...

Read More »

ஆமாம், அவள் ஒரு விடுகதை!

மலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை) ஆமாம், அவள் ஒரு விடுகதை! ஏப்ரல் 17, 2006 திங்கட்கிழமை நேரம்:12.20 வெப்பம் மிகுந்ததும் காற்றில்லாததுமான ஒரு மதிய வேளை. ஆஷா உடல் முழுக்க வியர்க்க, மேனேஜர் அறைக்குள் சென்றாள். ஒரு மேசை தூரம் இருந்தும் தனது வேர்வை நாற்றம், மேனேஜிங் டைரக்டரைத் தொந்தரவு செய்யுமோ என்ற குழப்பத்தில் அவளால் அவரின் வார்த்தைகளைக் கவனிக்க முடியவில்லை. அறைக்குள் இருந்து வெளியில் வந்ததும் ...

Read More »

பார்வைகள்

மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன் மரங்களுக்கிடையில் ரோஸியும் மாத்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். டிசம்பர் மாதம். ஒரு மாலை நேரம் வெப்பமற்ற குறைந்த வெயில். மாத்யூ ரோஸியை பார்க்க வந்திருந்தான். ரோஸி ஆஃப்டர் கேர் ஹோமில் தங்கியிருந்தாள். அதற்கு முன்பு புவர்ஹோம் சொசைட்டி நடத்துகின்ற அனாதை இல்லத்திலிருந்தாள். பதினெட்டு வயதான பிறகு ஆஃப்டர்கேர் ஹோமிற்கு மாறிவிட்டாள். அவளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவளது மனதைத் தொடுமளவிற்கு ஏதாவது கூறவேண்டும் என்று மாத்யூ ...

Read More »

நீல ஜ்வாலைகள்

மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஒருவன் மழையில் ஓடிவந்து ரெஸ்ட்டோரண்டின் கிழக்குப் புறமுள்ள படிக்கட்டு வழியாக பாருக்குள் நுழைந்தான். முழுவதுமாக நினைந்திருந்தபோதும் அவன் அதை பெரிதுபடுத்தவில்லை. பகல் அப்போதுதான் முடியப்போகிறது. பாரில் பெரிய கூட்டமொன்றுமில்லை. அவனுக்கேற்ற சௌகர்யமான ஒரு இருப்பிடம் கிடைத்தது. தனது தோளில் தூக்கியிருந்த தோள்பையை அவன் பக்கத்து இருப்பிடத்தில் வைத்தான். ஒரு வெயிட்டர் அவனுடைய மேசைக்கருகில் வந்தான். அவன் ரெண்டு பெக் பிராண்டி சொன்னான். “சேர்த்து சாப்பிடறதுக்கு ஏதாவது? பீ நட் மசாலா, எக் அன்டு பீஸ் க்ராம் ...

Read More »

பிரதி பிம்பங்களின் நேரம்

மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்   ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள். “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்?”  அவள் கேட்டாள்.                 அகிலா படுக்கை மீது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூட் கேஸில் சீலைகளையும், உள்ளாடைகளையும், வேறு சில துணிகளையும் அலங்கோலமாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். சில துணிகள் பீரோவிற்கு முன்பாகச் சிதறிக் கிடந்தன.                  “மா……..ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்? வை டோன்யு ஸ்பீக்”ரெஷ்மி மறுபடியும் கேட்டாள்.                 அகிலா ஒரு விளக்கத்திற்கும் தயாரில்லை. பீரோவிலிருந்து ரெஷ்மியின் சில ஆடைகளையும் ...

Read More »

மகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்

–தி.இரா.மீனா வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து  கிடையாது. மாளவிகாகினி மித்திரத்தில்“ பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா” என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு, இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் ...

Read More »

மகனின் பிம்பம் – சிறுகதை

-முனைவர் நா. தீபா சரவணன் மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன் மகனின் பிம்பம் தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் ...

Read More »

கருங்குயிலே!

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது ஓரிளம் கருங்குயில் ! முறிந்து கிடக்கும் சிறகுகளைச் சேர்த்து நீ பறக்கப் பயின்றிடு ! பிறந்த பின்பு இத்தருண வரவுக்குத் தான் நீ காத்திருந்தாய் ! கருங்குயில் காரிருளில் பாடிக் கொண்டுள்ளது. கிடக்கும் விழிகளை எடுத்துக் கொள், கூர்ந்து நோக்கப் பயின்றிடு ! இத்துணைக் காலம் இந்த விடுதலைக் குத்தான் நீ காத்திருந்தாய் ! பறந்து போ கருங்குயிலே ! பறந்து போ ...

Read More »

புரட்சி எழ வேண்டும்!

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ புரட்சி எழ வேண்டும் என்று நீ முரசு கொட்டுகிறாய்! உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம்! பரிணாம வளர்ச்சி அதுதான் என்று விரைவாகச் சொல்கிறாய் ! உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம்! ஆனால் அடி, தடி, உடைப்பு, தீ வைப்பு கடை அடைப்பு, வேலை நிறுத்தம் – இவை என்றால் எனக்குப் பிடிக்காதென்று உனக்குத் தெரியாதா? உடனே என் பெயரை நீக்கிவிடு எதிர்க்கும் புரட்சிக் குழுவில்! எல்லாம் நல்லதாய் ...

Read More »