Author Archives: தீபா சரவணன்

வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. மாலை வேளை டௌனில் உள்ள மிகவும் நல்ல பேக்கரியிலிருந்து தனியாக செய்யச்சொல்லிச் தயாரிக்கப்பட்ட பெரிய கேக் நாலு மெழுகுவர்த்திகளுடன் மேசை மேல் இருந்தது. மின்னுகின்ற ரிப்பன்களும், பல வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள பலூன்களும் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. நாங்க எங்க பொண்ணோட பிறந்த நாளக்கொண்டாடறோம். விருந்தினர் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்கதவு சாத்தவில்லை. அறையின் பலூன்களையும், ரிப்பன்களையும் அசைத்துக்கொண்டு  இளம்காற்று மட்டும் ...

Read More »

இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூல ஆசிரியர்: ஸ்டான்லி மூல மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் மரணத்தின் ஈரம் முகத்தில். நான் மீண்டும் மீண்டும் உமிழ்ந்து ஈரத்தை அதிகப்படுத்தினேன். இரண்டு விபத்துகளில் மரணத்தைத் தோற்கடித்த ஆஜானுபாகுவாக நின்ற எனக்குப் பொன்னாடையும் பொருளும் பரிசாகத் தர முகமில்லாத கடவுள் கடந்து வந்தார். மருத்துவமனை படுக்கை அறையில் ஒருமுறை நான் இறந்து கிடந்தேன். ஓ மன்னிச்சிருங்க. மரத்துக் கிடந்தேன். நினைவுகளைப் புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தேன். கடவுள் விருந்தாளியாகக் கட்டிலுக்கருகில் வந்தபோது நான் ஆச்சர்யப்படவும், ஆதரவாக அவரைப் பார்த்து அருகிலுள்ள ...

Read More »

இருதயாகாயம் (சிறுகதை)

முனைவர் நா. தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. முதல் மாடியில் ஜன்னலுக்கருகில் வெளியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பார்த்துக்கொண்டு சுரேஷ்மேனோன் உட்கார்ந்திருக்கும் போது ஆகாயத்தின் மேகங்கள் நிறம் மாறிக் கொண்டிருந்தது. அவன் இரயிலிலிருந்து இறங்கும்போது இருந்த வெள்ளை மேகங்கள் எங்கோ மறைந்தது. வானம் இருண்டது போலிருந்தது. “தீப்தியெ இனியும் காணோமே” வேறொரு ஜன்னல்வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு கீதா கூறினாள். தீப்தி சுரேஷ்மேனோனுக்குக் கடைசியாக அனுப்பியக் கடிதத்தில் சில ஆணைகள் இருந்தது. ஏது வண்டியில் நகரத்தில் வரவேண்டுமென்றும், ...

Read More »

ஓயாத மழையில்

முனைவர் நா. தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை வழக்கத்திற்கும் மாறாகத் தாமதமாக செல்லவே பள்ளிக்குப் போகும் வழியில் ஒற்றைப்படுத்தப்பட்ட சிறுமி; சிறுமி ஸ்கூல் பேகை முதுகில் சுமந்து, சிவப்பு நிறக்குடையை விரித்துப் பிடித்து மழையில் ஓடியும் நடந்தும் குன்றை ஏறும்போது வழியோரத்தில் முள்படர்ப்பின் மறைவிலிருந்து பைத்தியம் போன்ற ஒருவன் அவளின் முன்னால் குதித்து, சத்தம் போட்டீனா கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். காய்ச்சல் வந்ததுபோல அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கூர்மையான ஒரு பெரிய கல். ...

Read More »

ஹொரர்

-முனைவர்.நா.தீபா சரவணன் மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன் நானிங்க சிட்டௌட்டில உட்காந்து பேப்பர் வாசிச்சிட்டிருக்கும் போது எம்மகன் ஹால்ல சோஃபாவில ரிமோட்கன்ட்ரோல கையில வெச்சிட்டு உட்காந்திருந்தான். அவனே வீடியோ லைப்ரரியிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த ஏதோ ஒரு ஹொரர் படம் வி.சி.பியில் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்தது ஹொரர் (திகில்) படங்கதான். சமீபமா அவன் ஒரு படம் பார்க்க என்னயும் கூப்பிட்டான், அது ரொம்ப நல்லாருக்கும்னு அவனோட நண்பர்கள் சொன்னாங்களாம். சரி  பாக்கலாமேன்னு நானும் முடிவெடுத்தேன். அது விசித்திரமான ...

Read More »

ஆமாம், அவள் ஒரு விடுகதை!

மலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை) ஆமாம், அவள் ஒரு விடுகதை! ஏப்ரல் 17, 2006 திங்கட்கிழமை நேரம்:12.20 வெப்பம் மிகுந்ததும் காற்றில்லாததுமான ஒரு மதிய வேளை. ஆஷா உடல் முழுக்க வியர்க்க, மேனேஜர் அறைக்குள் சென்றாள். ஒரு மேசை தூரம் இருந்தும் தனது வேர்வை நாற்றம், மேனேஜிங் டைரக்டரைத் தொந்தரவு செய்யுமோ என்ற குழப்பத்தில் அவளால் அவரின் வார்த்தைகளைக் கவனிக்க முடியவில்லை. அறைக்குள் இருந்து வெளியில் வந்ததும் ...

Read More »

பார்வைகள்

மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன் மரங்களுக்கிடையில் ரோஸியும் மாத்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். டிசம்பர் மாதம். ஒரு மாலை நேரம் வெப்பமற்ற குறைந்த வெயில். மாத்யூ ரோஸியை பார்க்க வந்திருந்தான். ரோஸி ஆஃப்டர் கேர் ஹோமில் தங்கியிருந்தாள். அதற்கு முன்பு புவர்ஹோம் சொசைட்டி நடத்துகின்ற அனாதை இல்லத்திலிருந்தாள். பதினெட்டு வயதான பிறகு ஆஃப்டர்கேர் ஹோமிற்கு மாறிவிட்டாள். அவளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவளது மனதைத் தொடுமளவிற்கு ஏதாவது கூறவேண்டும் என்று மாத்யூ ...

Read More »

பிரதி பிம்பங்களின் நேரம்

மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்   ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள். “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்?”  அவள் கேட்டாள்.                 அகிலா படுக்கை மீது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூட் கேஸில் சீலைகளையும், உள்ளாடைகளையும், வேறு சில துணிகளையும் அலங்கோலமாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். சில துணிகள் பீரோவிற்கு முன்பாகச் சிதறிக் கிடந்தன.                  “மா……..ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்? வை டோன்யு ஸ்பீக்”ரெஷ்மி மறுபடியும் கேட்டாள்.                 அகிலா ஒரு விளக்கத்திற்கும் தயாரில்லை. பீரோவிலிருந்து ரெஷ்மியின் சில ஆடைகளையும் ...

Read More »

ஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)

– முனைவர் நா. தீபா சரவணன் ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கருத்து. இக்கருத்திற்கேற்ப எனது ஆய்வேடு ஒப்பீட்டு முறையில் அமைந்துள்ளது. நாஞ்சில்நாடன், சி.வி. பாலகிருஷ்ணன் ஆகிய இரு ஆசிரியர்களும் தமிழ், மலையாளம் எனும் இருவேறு மொழிப் பண்பாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் மொழியாலும், வாழ்வியல் முறையாலும் மாறுபட்டவர்களாக இருப்பினும் அவரவர் பண்பாட்டுப் பின்புலத்தை நன்கு விளக்குகின்றனர். ஒரு எழுத்தாளனின் வாழ்வியல் சூழலும் அனுபவங்களும் அவருடைய எழுத்துலகப் பாதையில் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன என்பதை இவர்களின் ...

Read More »

மகனின் பிம்பம் – சிறுகதை

-முனைவர் நா. தீபா சரவணன் மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன் மகனின் பிம்பம் தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் ...

Read More »

நித்திரை தொடராமல் கனவில்லை

தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. நித்திரை தொடராமல் கனவில்லை ஒரு வடிவம் உருவகப்படுகிறது. நீட்டிப்பிடித்த கைத்தலங்களின் இரயில். ஓவர் பிரிட்ஜிற்கு நேராக தெற்கிலிருந்து வருகின்ற இரயில். மரணம், ஃபாஸ்பென்டர் கூறியதுபோல தண்மையானதா? என்று இப்போது தெரியும். ’ஆக்ஷன்!’ கைகள் அசைந்தது. கைவரிசை கடக்கத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட ஈடுபாடில்லை. பாதி தூரத்தை அடையும் முன்பு ஷோர்ட் ஃப்ரீஸ் செய்து கடைசி டைட்டில் அதன் மேல் ‘தி என்ட்’. மனதிற்குள் ஒரு மின்வெட்டு பாய்ந்தது. எ ஃபிலிம் ...

Read More »