அறிவிப்புகள்

உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு

அண்ணாகண்ணன் உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தொடங்கியுள்ளது. அவருடன் பற்பல கவியரங்குகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவார். ஒருமுறை என்னைப் பார்த்து, நீங்க அழகா இருக்கீங்க, நடிக்கப் போலாமே என்றார். உ.வே.சா. கவியரங்கில் நான் கவிதை படித்த பிறகு, தன் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். சும்மா பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டணும் என்பார். அவரை ஒரு முறை பேட்டி கண்டேன். அதை இங்கே படிக்கலாம். http://annakannan.blogspot.com/2005/07/blog-post_30.html இந்தப் படத்தில் சுரதா, 1996ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ...

Read More »

அழைப்பிதழ்: இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு AN ONLINE INTERNATIONAL EDUCATIONAL CONFERENCE அழைப்பிதழ் Invitation October 2nd, 3rd, 4th 2020 நிகழ்ச்சி நிரல் நாள் – 02.10.2020 – 04.10.2020 வெள்ளி – மாலை 5.00-7.30 சனி – காலை 9.30-11.30, மாலை 5.00-7.30 ஞாயிறு – காலை 9.30 -11.00, மாலை 6.00-7.30 OISCA சர்வதேச நிறுவனம் (ஜப்பான்); தமிழ் அநிதம் (அமெரிக்கா); உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா) வல்லமை, முத்துக்கமலம் (மின்னிதழ்கள்) தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி ...

Read More »

தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன் உரையாற்றுகிறார். 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெறுகிறது. Teamlink ID 5526828256. வாய்ப்புள்ள அன்பர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.    

Read More »

வல்லமை யூடியூப் அலைவரிசை

அண்ணாகண்ணன்   அன்பர்களுக்கு வணக்கம்.   வல்லமைக்கு யூடியூபில் தனி அலைவரிசை தொடங்கத் திட்டம். ஆய்வுக் கட்டுரைகள், இள முனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை வீடியோவில் பதிந்து ஏற்ற எண்ணம். உங்கள் முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக [email protected] என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.   பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.  ...

Read More »

அழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு

சான்றிதழ் வகுப்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் – தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு 15.05.2020 தொடங்கி 21.05.2020 வரை நடைபெற உள்ளது. இவ்வகுப்பில் பங்கேற்போருக்கு சான்றிதழ்  வழங்கப் பெறும். கட்டணம் ஏதும் கிடையாது. முன்பதிவிற்கான கடைசி நாள் 13.05.2020. சான்றிதழ் வகுப்பினில் இணைய விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சலிலும் 9442379558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தங்கள் முழு முகவரியை (மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண்ணோடு) பதிவு செய்து கொள்ள வேண்டும். படைப்பிலக்கியக் கூடல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் – தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ...

Read More »

அரங்கம் -15.03.2020

1. ஹென்ரிக் இப்சன் குறித்த அறிமுகம் 2. அவரது படைப்புகள் குறித்த காணொளி 3. "A Doll's House" நாடகத்தின் சில காட்சிகள் திரையிடல் 4. கருத்து பரிமாறல்

Read More »

‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

Read More »

பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

உரையாளர் குறித்து தமிழ்த் தேசிக அரங்கர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் இலங்கை நெல்லியடியில் (1938) பிறந்தவர். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர். தமிழ் அரங்கச் செயல்பாட்டில் மூத்த முன்னோடி வழிகாட்டியாகச் செயல்பட்டு வருபவர். இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்று வருகிற இனவாதச் சிக்கலில் அரங்கச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ்த் தேசிகத்தைக் கட்டமைக்க முயன்றவர். இதனைப் பண்டைய தமிழ் மரபிலிருந்தும் சமகால கூத்து மரபிலிருந்தும் மீள் உருவாக்கம் செய்தவர். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்க மரபுகளை ஆய்வு செய்யும் அதே வேளையில் சிலப்பதிகாரமே ஒரு அரங்கப்பனுவல்தான் என்பதையும் நிறுவுகிறார். ...

Read More »

வல்லமைத் தளம் மீண்டது

அண்ணாகண்ணன் 37 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வல்லமைத் தளம் (http://www.vallamai.com) இன்று மீண்டது. இதன் வழங்கியை (சர்வர்) மாற்றியுள்ளோம். இதில் நிறையக் கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டும். இதன் MySql தரவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும். இன்னும் பற்பல பணிகள் உள்ளன. ஆயினும் தளத்தை இப்போது எவரும் அணுகலாம் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இந்த இடர்மிகுந்த காலத்தில் வல்லமைக்கு நன்கொடை வழங்கிய எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ...

Read More »

முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை: முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் ...

Read More »

ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை

கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம். 12/5/19 ஞாயிறு, இடம் விரைவில் அறிவிக்கப்படும். கட்டணமில்லை. மதிய உணவு, தேனீர் வழங்கப்படும். முன்னணி எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பர். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்கள்: தோழர்கள் பி ஆர் நடராஜன் (செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.) (94434 27156 ), இரா. சண்முகம் (தலைவர்) (99448 15107 ) நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு ...

Read More »