வல்லமைத் தளம் மீண்டது

அண்ணாகண்ணன்
37 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வல்லமைத் தளம் (https://www.vallamai.com) இன்று மீண்டது. இதன் வழங்கியை (சர்வர்) மாற்றியுள்ளோம். இதில் நிறையக் கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டும். இதன் MySql தரவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும். இன்னும் பற்பல பணிகள் உள்ளன. ஆயினும் தளத்தை இப்போது எவரும் அணுகலாம் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.
இந்த இடர்மிகுந்த காலத்தில் வல்லமைக்கு நன்கொடை வழங்கிய எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நன்கொடை வழங்க இசைந்துள்ள கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், திருச்சி புலவர் இராமமூர்த்தி உள்ளிட்டோருக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்.
வல்லமைக்கு இதுவரை தமது வழங்கியில் இடமளித்த ஆமாச்சு (ஸ்ரீராமதாஸ்), தொழில்நுட்ப ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய செல்வ.முரளி, ஸ்ரீநிவாசன், கார்த்திக் நரசிம்மன் ஆகியோருக்கு முதன்மை நன்றிகள். அக்கறையுடன் தொடர்ந்து விசாரித்த நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.
வல்லமைத் தளம், திடமாகத் தொடர்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. வல்லமை இதழ்ப் பணிகளுடன், வல்லமை அறக்கட்டளைப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இயன்றோர் நன்கொடை வழங்கி ஆதரியுங்கள். நிதியாதரவு மட்டுமின்றி, துணை ஆசிரியர்களும் தேவை. நேரம் ஒதுக்கிப் பங்களிக்கக் கூடியவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.
நிறையப் படைப்புகள் காத்திருக்கின்றன. இனி, முழு வீச்சில் தொடர்வோம். எப்போதும்போல் இணைந்திருங்கள்.
Good to know
Extremely happy. I missed it terribly!
எதிர்காலத்தில் வல்லமை மின்னிதழின் தமிழ் இலக்கியப்பணியும்,ஆய்வுப்பணியும் வெளியுலகிற்கு தெரியவரும்.அப்பொழுது உங்களின் உழைப்பும்,அருமையும் அனைவருக்கும் தெரியும்.